Posts

Showing posts from August 7, 2014
TNTET : PAPER I & PAPER II - இம்மாத இறுதிக்குள், இரு தேர்வு இறுதி பட்டியலும் வெளியாகிவிடும்   தயார்நிலையில் டி.இ.டி., இடைநிலை ஆசிரியர் முதல்தாள் தேர்வில் தேர்ச்சிபெற்ற, 31ஆயிரம் பேரின், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்று மாலை இணையதளத்தில் வெளியிட்டது.  ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள்(பட்டதாரிஆசிரியர்) தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண்,ஏற்கனவே வெளியிடப்பட்டு,அதுதொடர்பாக, தேர்வர்கள் தரப்பில் இருந்து, குறைகளை பெற்று, நிவர்த்தி செய்யும் பணிகளும் முடிந்துவிட்டன.  " இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல்,ஒரே நேரத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு உள்ளதாக,துறை வட்டாரம் தெரிவிக்கிறது. எப்படியும், இம்மாதஇறுதிக்குள், இருதேர்வு பட்டியலும் வெளியாகிவிடும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் குளறுபடிகளை நீக்க வேண்டும்: 'தி இந்து': ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண்களை முன்வைத்து நேர்காணல் நடைபெற்றுள்ளதால், அதற்குள் சீனியாரிட்டியையும், முன் அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றனர்  தகுதித் தேர்வு எழுதியவர்களில் பலர். தவிர மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக தேர்வு நடத்தியதிலும் உள்ள குளறுபடிகளை நீக்கி சரியான முறையில் உரியவர்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இது பற்றி உங்கள் குரல் பகுதிக்கு பல அழைப்புகள் வந்துள்ளன.  அதில் சம்பந்தப்பட்டவர்கள் சிலரிடம் பேசியதில் அவர்கள் கூறியதாவது: கண்ணம்மா, பாலகிருஷ்ணன் உடுமலை: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வின் மூலம் தேறியவர்களுக்கு தொடர்ந்து நேர்காணல் அழைப்பும் வந்தது.  அதில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கென குறிப்பிட்ட மதிப்பெண் அளித்தனர் தேர்வாளர்கள். இதை கவனித்து எங்களைப் போன்ற சீனியர்கள் அதிர்ச்சியடைந்தோம். டிஇடி தேர்வு என்பதில், வெ
இடைநிலை ஆசிரியர் தேர்வு: 31,000 பேர் மதிப்பெண் வெளியீடு - தினமலர் "இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல், ஒரே நேரத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு உள்ளதாக, துறை வட்டாரம் தெரிவிக்கிறது. எப்படியும், இம்மாத இறுதிக்குள், இரு தேர்வு பட்டியலும் வெளியாகிவிடும்." இடைநிலை ஆசிரியர் முதல்தாள் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 31 ஆயிரம் பேரின், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்று மாலை, இணையதளத்தில் வெளியிட்டது. தயார் நிலையில்...: டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண், ஏற்கனவே வெளியிடப்பட்டு, அது தொடர்பாக, தேர்வர்கள் தரப்பில் இருந்து, குறைகளை பெற்று, நிவர்த்தி செய்யும் பணிகளும் முடிந்து விட்டன. தற்போது, இறுதி தேர்வு பட்டியல் வெளியிட தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்) தேர்வில் தேர்ச்சி பெற்ற, 31,079 பேரின், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் (இறுதி மதிப்பெண்) விவரங்களை, www.trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில், நேற்று மாலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு
இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கான தகுதிகாண் மதிப்பெண் வெளியீடு-Dinamani ஆசிரியர் தகுதித் தேர்வின், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற 30 ஆயிரத்து 592 பேரின் தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) விவரங்கள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில் இந்த மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு இந்தத் தேர்வில் 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். முதல் தாளில் 30 ஆயிரத்து 592 பேரும், இரண்டாம் தாளில் 42 ஆயிரத்து 109 பேரும் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2, ஆசிரியர் பட்டயத் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதிகாண் மதிப்பெண்(வெயிட்டேஜ் மதிப்பெண்) கணக்கிடப்படுகிறது. மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெற்ற தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்காக விழுப