15 July 2016

சத்துணவுப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், நகராட்சிப் பகுதிகளுக்கு நகராட்சி ஆணையரிடமும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (ஜூலை 18) முதல் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 28-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பணியிடம், விண்ணப்பதாரர் குடியிருப்புக்கு 3 கி.மீ தொலைவில் இருத்தல் வேண்டும்.

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு:
பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 21 வயதுக்கு மேல் 41 வயதுக்குள் இருக்க வேண்டும். பழங்குடியினர் 8-ஆம் தேர்ச்சி (அ) தோல்வி இருக்கலாம். 18 வயதுக்கு மேல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

சமையல் உதவியாளர் பணிக்கு: பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) தேர்ச்சி பெறாதவர்கள் இருக்கலாம். 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பழங்குடியினர் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதுமானது. 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.பொதுப் பிரிவில், விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் கடிதம் வாயிலாகத் தெரிவிக்கப்படும். இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 18 முதல் விநியோகம்.

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வரும் 18-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அந்தந்த பள்ளியில் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை பெற்று கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையத்தில் மதிப்பெண் சான்றிதழை பெற்றுகொள்ளலாம். ஜூலை 18-ம் தேதி காலை 10 மணி முதல் அசல் சான்றிதழ் விநியோகிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் பொது இடமாறுதல் விதிமுறைகளில் மாற்றம் இல்லை அரசாணை வெளியீடு. ஆசிரியர் பொது இடமாறுதல் விதிமுறைகளில் மாற்றம் இல்லை.
அரசாணை வெளியீடு | G.O-258-நாள் 06.07.2016-பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 2016-17-ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.
காலங்கள் மறக்காத பெயர் 'காமராஜர்!' : இன்று காமராஜர் பிறந்த நாள்

“படித்ததினால் அறிவு ​பெற்​றோர் ஆயிரம் உண்டு படிக்காத ​மேதைகளும் பாரினில் உண்டு...” இந்த வரிகள், நிச்சயமாக, மறைந்த, முன்னாள் முதல்வர் காமராஜருக்கு பொருந்தும்.

பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வரலாற்றின் பக்கங்களில், காமராஜருக்கு, எப்போதுமே தனியிடம் உண்டு. பல்வேறு அணைகட்டுகள், தொழிற்சாலைகள், இவரின் பெயரை, இன்னும் நினைவூட்ட, இவர் மேற்கொண்ட செயல்பாடுகள் தான் காரணம்.

இவர் முதல்வராக இருந்த போது தான், ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை, குந்தா நீர் மின் நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவர், ஊட்டிக்கு வந்து போகும் போது, அவரோடு பழகும் வாய்ப்பை பெற்றிருந்த, ஊட்டி வக்கீல் ஹரிஹரன் கூறியதாவது: காமராஜர், முதல்வராக இருந்த போது, ஊட்டிக்கு வரும் சமயங்களில், மாலை, 4:00 மணிக்கு மேல், ஊட்டி அரசு பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். ஒரு நாள், ஊட்டி மார்க்கெட் கடைகளுக்கு சென்ற அவர், கடைகளில் வியாபாரிகளுடன் பேசி, கடையில் உள்ள பொருட்களை ஆராயத் துவங்கினார். மார்க்கெட் சாலையில், தெரு விளக்கு எரியாமல் இருப்பதை கண்ட அவர், மின்வாரிய அதிகாரியை அப்போதே வரவழைத்து, தெரு விளக்குகளை எரியச் செய்ய உத்தரவிட்டார். ஊட்டியில், இவர் ஆற்றிய களப்பணி தான், 'காங்., கோட்டை' என்ற மகுடத்தை, இன்று வரை இழக்காமல் இருக்கக் காரணம். இவ்வாறு, ஹரிஹரன் கூறினார்.

மதிய உணவு திட்டத்தின் பின்னணி! ஒரு முறை, பொதுக்கூட்டத்துக்கு சென்றுக் கொண்டிருந்த காமராஜர், தன் தந்தையுடன், ஒரு சிறுவன், வயல்வெளியில் பணிபுரிந்துக் கொண்டிருந்தான். இதைக் கண்ட காமராஜர், வாகனத்தை நிறுத்தச் சொல்லி, சிறுவனின் தந்தையிடம் பேசினார். ''பள்ளிக்கூடத்துல, இலவசக் கல்வி அறிவிச்ச பின்னால, ஏன், உன் மகனை, அங்க அனுப்பாம, வேலை செய்ய வைக்கிறாய்,'' என்றார். சிறுவனின் தந்தை, ''பள்ளிக்கூடத்துல, இலவசக் கல்வி இருக்குன்னு எனக்கும் தெரியும் சாமி. இங்க வேல செஞ்சா, நெலத்தோட முதலாளி, மதிய சாப்பாடு குடுத்துருவாரு. பள்ளிக்கூடத்துக்கு அனுப்புனா, மதிய சாப்பாடு கிடைக்காதே சாமி,'' என்றார். உடனடியாக, பொதுக்கூட்டத்தை ரத்து செய்து விட்டு, அலுவலகம் சென்ற காமராஜர், ''மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தினால், ஏராளமான குழந்தைகள், பள்ளிக்கு வருவார்கள். இதற்கு எவ்வளவு செலவாகும்,'' என்றார். அப்போதிருந்த நிதியமைச்சரோ, ''இதற்கு ஒரு கோடி ரூபாய் செலவாகும்,'' என்றார். ''தமிழகம் முழுவதும், கல்வி மாநாடு நடத்த ஏற்பாடு செய்யுங்கள்; அங்கே நான் பங்கேற்று, இதற்கான நிதியை வசூலிக்கிறேன்,'' என்று சொல்லி, ஒரு கோடி ரூபாயை காமராஜர் வசூலித்து, கொண்டு வந்தது தான், இலவச மதிய உணவு திட்டம்.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...