Posts

Showing posts from August 27, 2014
TNTET-PAPER I:இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியீடு. தொடக்கக் கல்வித்துறையின்(DEE) 1675 இடைநிலை ஆசிரியர்களின் தேர்வானோர் பட்டியலை TRB தற்போது வெளியிட்டுள்ளது. மற்ற துறைகளுக்கான தேர்வு பட்டியல் விரைவில் TRB வெளியிடும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்யக் கோரி செப்.1-இல் பேரணி ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தி வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி சென்னையில் கவன ஈர்ப்புப் பேரணி நடைபெற உள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ஆர்.செல்லதுரை சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: பட்டதாரி ஆசிரியர்பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் கடந்த 10.8.2014 அன்று வெளியிடப்பட்ட பட்டியலில் சுமார் 11,000பேர் தற்காலிகமாகத் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தப்பட்டியலில் 90மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களில் 9ஆயிரம் பேரின் பெயர்கள் இடம் பெறாதது கண்டு அதிர்ச்சியடைந்தோம். அதையடுத்து தகுதிகாண் மதிப்பெண்முறையை ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். அடுத்தகட்டமாக,இதே கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி செப்டம்பர்1-ஆம் தேதி காலை10மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் அரங்கிலிருந்து புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் வரை
இளநிலை, முதுகலை பாட வேறுபாடு - ஆசிரியர் நியமனம் கோரிய மனு : ஐகோர்ட் தள்ளுபடி இளநிலை, முதுகலையில் வெவ்வேறு பாடங்கள் படித்துள்ளதால், முதுகலை பட்டதாரி ஆங்கில ஆசிரியராக நியமிக்க கோரிய மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. மதுரை லதா தாக்கல் செய்த மனு: இளநிலை (பி.எஸ்.சி., -வேதியியல்), முதுகலை (எம்.ஏ.,- ஆங்கில இலக்கியம்), பி.எட்.,(ஆங்கிலம்) படித்துள்ளேன். தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன்.முதுகலை பட்டதாரி ஆங்கில ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கு, என் பெயரை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு (டி.ஆர்.பி.,) வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைத்தது. டி.ஆர்.பி., சார்பில் 2012 ஜன.,7 ல் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றேன். பணி நியமனத்திற்கான தற்காலிக தேர்வுப் பட்டியல் 2012 ஏப்.,4 ல் வெளியானது. என் பெயர் இடம் பெறவில்லை. பட்டியலில் பெயரை சேர்த்து, ஆசிரியர் பணி வழங்க பள்ளிக் கல்வி இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி எஸ்.நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் வக்கீல் எஸ்.குமார் ஆஜரானார். நீதிபதி: தமிழ்நாடு மேல்நிலை பள்ளி சிறப்பு விதிகள்படி ம