Posts

Showing posts from June 17, 2014
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நியமனம்.  " மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், ஓய்வு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்" என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.  அவர் கூறியதாவது: அனைத்து அரசு பள்ளிகளிலும், பள்ளிக் கல்வி மேம்பாட்டு குழு செயல்படுகிறது. இதன் தலைவர் கலெக்டர். மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, தலைமையாசிரியர் உள்ளிட்டோர் உறுப்பினர்கள் ஆவர். இதன் ஆய்வுக்கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். மாணவர்களின் நலன்கருதி மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் 15 பேர் மற்றும் 5 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதற்கான ஒப்புதல் கேட்டு கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது மட்டுமின்றி, ஒழுக்கத்தை கற்றுத்தந்து அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகளை வழங்குவர்.ஆனால் அவர்களு
ஒரே நாளில் 4 போட்டி தேர்வுகள் குரூப்–2 தேர்வினை தள்ளிவைக்க வேண்டும் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்திடம் பட்டதாரிகள் முறையீடு-Dinathanthi  டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 உள்ளிட்ட 4 போட்டி தேர்வுகள் ஜூன் 29–ந் தேதி ஒரே நாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.  குரூப்–2 தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வருகிற 29–ந் தேதி குரூப்–2 தேர்வினை தமிழகம் முழுவதும் நடத்துவதாக அறிவித்துள்ளது. இந்த தேர்வில் சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரூப்–2 தேர்வை கடந்த 2011–ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. நடத்தியது. அதன்பின்னர் 3 ஆண்டு இடைவெளி விட்டு தற்போது வருகிற 29–ந் தேதி நடத்துவதால், இந்த தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெறவேண்டும் என்று பட்டதாரிகள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  ஆனால், குரூப்–2 தேர்வு நடைபெறவுள்ள அதே நாளில் (ஜூன் 29–ந் தேதி) மேலும் 3 போட்டி தேர்வுகள் நடைபெற உள்ளது. ஒரேநாளில் 4 போட்டி தேர்வு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட
15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் எப்போது?-Dinamani  பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேருக்கான தேர்வுப் பட்டியல் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் மொத்தம் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர்.  உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. அதனடிப்படையில் 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப்பட்டியல் தயாராக உள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இந்தப் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் தயாரிப்பதில் சட்ட சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பிரச்னை குறித்து இப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.