Posts

Showing posts from May 6, 2014
செமஸ்டர் வாரியான மார்க் பட்டியல் அவசியமா?ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி விளக்கம்- தி இந்து நாளேடு ஆசிரியர் தகுதித்தேர்வில் பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக 24,650 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்கி 12-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. அதில் பட்டப் படிப்புக்கான ஒட்டு மொத்த மதிப்பெண் சான்றிதழுடன் செமஸ்டர் வாரியான மதிப் பெண் சான்றிதழ்களும் கேட்கப் பட்டுள்ளன.   இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது-தேர்வர்கள் 3 ஆண்டுகள் பட்டப் படிப்பு படித்துள்ளார்களா? என்பதை ஆய்வுசெய்வே செமஸ்டர் வாரியான மதிப்பெண் பட்டியல்களை சமர்ப்பிக்கச் சொல்லி யுள்ளோம்.  ஒருவேளை அவை இல்லாவிட்டால் அதுதொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு தேர்வர்கள் உரிய பதில்அளிக்க வேண்டும். எழுத்துப்பூர்வமாக உறுதிமொழியும் எழுதிகொடுக்க வேண்டியதிருக்கலாம்.செமஸ்டர் வாரியாக மதிப் பெண் சான்றிதழ்களை சமர்ப் பிக்காத காரணத்திற்காக யாரும் நிராகரிக்கப்பட்டு விடமாட்டார் கள்.  அதேபோல், சாதி சான்றிதழில் பெயரில் சிறுசிறு எழுத்துப்பிழைகள் இருந்தால் அவை ஏற்றுக்கொள்ளப
முதுகலை ஆசிரியர் தேர்வு விவகாரம்: பணி நியமனம் எப்போது?  முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியஅலுவலகத்தை (டி.ஆர்.பி.,), நேற்று மீண்டும் முற்றுகையிட்டனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம், ஓராண்டாகஇழுபறியில் இருந்து வருகிறது.  தமிழ் பாடத்திற்கு மட்டும், இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, பணி நியமனமும் நடந்து விட்டது; இதர பாடங்களுக்கு, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறுதி பட்டியலை வெளியிடக்கோரி, தேர்வர்கள், கடந்த வாரம், டி.ஆர்.பி.,அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நேற்றும், பல மாவட்டங்களில் இருந்து வந்த, 100 பேர், டி.ஆர்.பி.,அலுவலகத்தை முற்றுகையிட்டு, டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யாரை சந்தித்து பேசினர்.  அப்போது,''சென்னை உயர்நீதிமன்றத்தில், பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தற்போது, உயர்நீதிமன்றத்திற்கு, கோடை விடுமுறை. ஜூன் மாதம் தான், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும். வழக்கை விரைந்து முடித்து,இறுதி பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, விபு நய்யார் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து தேர்வர்கள், அங்
ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று (மே 6) முதல் சரிபார்ப்பு  மதுரை மாவட்டத்தில், ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஓ.சி.பி.எம்., பள்ளியில் இன்று (மே 6) முதல் 12ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.இதற்காக, பள்ளி மையத்தில் பத்து 'போர்டு'கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும், நாள் ஒன்றுக்கு தலா 25 பேருக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.  பங்கேற்போர் டி.ஆர்.பி.,வலியுறுத்திய அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்கள் மற்றும் ஜெராக்ஸ் பிரதிகளை கொண்டு வரவேண்டும்.அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட இணை இயக்குனர் நாகராஜமுருகன் முன்னிலையில் இப்பணிகள் நடக்கின்றன, என, முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி தெரிவித்தார்.