Posts

Showing posts from July 5, 2017
தமிழக மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வில் விலக்கு கோரிய மனு தள்ளுபடி சென்னையை சேர்ந்த முருகவேல் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த ஆண்டு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. தற்போது 2016-17-ம் ஆண்டில் பிளஸ்-2 வகுப்பு தேறிய மாணவர்களுக்கும் முன்பு அளித்ததுபோல நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் கே.எம்.விஜயன், சபரீஷ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டதாவது:- 2015-16-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் தங்களுக்கு பிளஸ்-2 வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நடைபெறும் என்று நம்பிக்கையுடன் இருந்தார்கள். ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் யாரும் எதிர்பாராதவிதமாக மருத்துவ கல்வி சேர்க்கைக்கு நீட்
பாடத்திட்டம் மாற்றம் உயர்மட்ட குழு அமைப்பு தமிழக பாடத்திட்டம் மாற்றம் தொடர்பாக, 'இஸ்ரோ' விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் இடம் பெறும், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், 13 ஆண்டு பழமையானது. 10ம் வகுப்பு பாடத்திட்டம், ஆறு ஆண்டுகள் பழமை யானது. அவற்றை, தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என, கல்வி யாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து, பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக, புதிய உயர்மட்டக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உள்ளார்.  மற்ற உறுப்பினர்கள் விபரம்: பள்ளி கல்வி செயலர் உதயசந்திரன், அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி, இஸ்ரோ என்ற, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன இயக்குனர், விஞ்ஞானி மயில் சாமி அண்ணாதுரை. மேலும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி எம்.பி. விஜயகுமார், தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ராமசாமி, தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணை வேந்தர் சுப்பிரமணியன். திருவள்ளுவர் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஜோதி முருகன், கல்வியாளர் ஆனந்தலட