11 September 2022

 தேர்வுக்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு: விழுப்புரத்தில் மறியல்





விழுப்புரம் : விழுப்புரத்தில் குரூப் 7 தேர்வுக்கு தாமதமாக வந்தவர்களை அனுமதிக்காததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஹிந்து அறநிலையத் துறையில் உள்ள செயலாக்க அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்காக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 7 தேர்வு நேற்று நடந்தது.




விழுப்புரத்தில் அரசு சட்டக்கல்லுாரி மற்றும் தெய்வானை அம்மாள் கல்லுாரி என 2 மையங்களில் தேர்வு நடந்தது.தேர்வு, காலை 9:30 மணிக்குத் துவங்கி மதியம் 12:30 மணி வரை நடைபெறும்.




தேர்வர்கள் காலை 9:00 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.சட்டக் கல்லுாரி தேர்வு மையத்திற்கு காலை 9:00 மணிக்கு மேல் தாமதமாக வந்த தேர்வர்களை போலீசார் மையத்திற்குள் அனுமதிக்க மறுத்து கேட்டை பூட்டினர். 




தேர்வு எழுத வந்த 50க்கும் மேற்பட்டோர் தேர்வு அறைக்குச் செல்ல முடியாமல் காத்திருந்தனர்.தங்களை அனுமதிக்கும்படி 9:25 மணிக்கு விழுப்புரம் - திருச்சி சாலையில், வீரன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.அரசு நிர்ணயித்த கால நேரத்திற்குள் வரவில்லை என்றால் அனுமதிக்க முடியாது. எனவே, பொதுமக்களுக்கு சிரமம் அளிக்காமல் செல்லும்படி அறிவுறுத்தினர். 




அதனைத் தொடர்ந்து, மறியலை கைவிட்டு 9:35 மணிக்கு கலைந்து சென்றனர்.தேர்வு எழுத முடியாமல் சென்றவர்கள் கூறுகையில், 'சட்டக் கல்லுாரி தேர்வு மையத்திற்கு ஒரே நுழைவு வாயில் வழியாக அனைத்து தேர்வர்களையும், பரிசோதனை செய்து அனுப்ப அதிகாரிகள் காலதாமதம் செய்தனர். காலை 9:01 மணிக்கு தேர்வு வளாகத்திற்கு முன் நின்றவர்களைக் கூட அனுமதிக்காமல் கேட்டை பூட்டி விட்டனர்' என்றனர்.

  ஆசிரியர்கள் தற்காலிகத் தேர்வுப் பட்டியல் - டிஆர்பி முக்கிய அறிவிப்பு



முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்‌, உடற்கல்வி இயக்குநர்‌ நிலை - I, கணினிப்‌ பயிற்றுநர்‌ நிலை - I ஆகிய காலிப் பணியிடங்களுக்கான‌ தற்காலிக ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதாக ‌டிஆர்பி அறிவித்துள்ளது.



இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:


''2020-2021 ஆம்‌ ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்‌, உடற்கல்வி இயக்குநர்‌ நிலை-I, கணினிப்‌ பயிற்றுநர்‌ நிலை- I ஆகிய காலிப் பணியிடங்களுக்கான‌ நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது.


அதனைத்‌ தொடர்ந்து 12.02.2022 முதல்‌ 20.02.2022 வரை கணினி வழித்‌ தேர்வுகள்‌ (Computer Based Test) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள்‌ 04.07.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால்‌ வெளியிடப்பட்டன. 25.08.2022 நாளிட்ட ஆசிரியர்‌ தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில்‌ பணிநாடுநர்கள்‌ தமிழ்‌ வழியில்‌ பயின்றதற்கான தங்களது சான்றிதழ்களை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளம்‌ வழியாக 26.08.2022 முதல்‌ 30.08.2022 வரை பதிவேற்றம்‌ செய்யுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.


பணிநாடுநர்கள்‌ விண்ணப்பத்துடன்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்ட சான்றிதழ்கள்‌ / ஆவணங்கள்‌ மற்றும்‌ கூடுதலாக பதிவேற்றம்‌ செய்யப்பட்ட தமிழ்வழியில்‌ பயின்றதற்கான சான்றிதழ்களின்‌ அடிப்படையில்‌ பணிநாடுநர்கள்‌ விவரங்கள்‌ பரிசீலிக்கப்பட்‌டு, அறிவிக்கையில்‌ குறிப்பிட்டுள்ள 17 பாடங்களுக்கு 27.08.2022 அன்று இவ்வாரிய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்ட 1:2 விகிதாசாரப்படி சான்றிதழ்‌ சரிபார்ப்பிற்கான பட்டியல்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டது.



அதைத் தொடர்ந்து 02.09.2022 முதல்‌ 04.09.2022 ஆகிய நாட்களில்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தில்‌ விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ்கள்‌ சரிபார்ப்புப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில்‌ அறிவிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின்‌ அடிப்படையிலும்‌ இனச்சுழற்சி அடிப்படையிலும்‌ தற்போது

1. Geography

2. History

3, Physics


ஆகிய 3 பாடங்களுக்கு தகுதியுள்ளவர்களுக்கான தற்காலிகத்‌ தெரிவுப்‌ பட்டியல்கள்‌ முதற்கட்டமாக ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளன. உரிய விவரங்களை விண்ணப்பதாரர்கள்‌ இணையதளத்தை பார்வையிட்டு தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌''.


இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம்‌ தெரிவித்துள்ளது.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...