22 June 2022

 ஓரிரு நாள்களில் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: அன்பில் மகேஷ்



 

11-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஓரிரு நாள்களில் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 


மதுரை நாகமலைப் புதுக்கோட்டை அருகேயுள்ள பில்லர் மையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலர்களுக்கான நிர்வாகத்திறன் மேம்பாட்டு பயிற்சியை அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று துவக்கி வைத்தார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், வருகின்ற 2025-ஆம் ஆண்டு இந்தியாவிலேயே பள்ளிக்கல்வித் துறையில் தமிழகம் சிறப்பான இடத்தைப் பெற்றுத் திகழும். அதற்கான அடித்தளத்தை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. 


தொடக்கக் கல்வித் துறையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அரசுப் பள்ளிகளை நோக்கி நிறைய குழந்தைகள் வரத் தொடங்கியுள்ளனர். இதன் அடிப்படையில்தான் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


தேசிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு வேண்டாம் என்பதற்காகத்தான் தமிழக முதல்வர் மாநில கல்விக் கொள்கையை அறிவித்துள்ளார். கடந்த ஜூன் 15-ஆம் தேதி முதல்வரின் தலைமையில் மாநில கல்விக் கொள்கையை வகுக்கும் வல்லுநர்களைக் கொண்ட முதல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். அதிலிருந்து பெறப்படுகின்ற தகவல்களைக் கொண்டு மாநில கல்விக் கொள்கையை தமிழக முதல்வர் அறிவிப்பார். 


10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்குப் பிறகு நடைபெற்ற தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகள் மிகுந்த வேதனையைத் தருகின்றன. தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே தமிழக முதல்வர் மாணவர்களுக்கு ஊக்கம் தரும் விதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தேர்ச்சி பெறத் தவறும் குழந்தைகளுக்காக உடனடித் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும். இந்த ஆண்டிலேயே உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்தித் தருகிறது. தேர்வு எழுதத் தவறிய மாணவர்களும் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.


ஃபெயில் என்ற சொல்லையே நாங்கள் தவிர்க்க விரும்புகிறோம். முதல் முயற்சியில் மதிப்பெண் குறைவாகிவிட்டால், கவலையில்லை அடுத்த சில நாட்களில் நடைபெறும் அடுத்த முயற்சியில் மதிப்பெண் பெறலாம் என்றே தொடர்ந்து வலியுறுத்துகிறோம். மாணவர்கள் இதனை தோல்வியாகக் கருதக்கூடாது. என்னுடைய வேண்டுகோள், தயவுசெய்து பெற்றோர் பிற மாணவர்களோடு உங்கள் குழந்தைகளை ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு மாணவ, மாணவியருக்குள்ளும் தனித்திறன்கள் உள்ளன. அதைக் கருத்திற் கொண்டுதான் தமிழக முதல்வர் 'நான் முதல்வன்' என்ற திட்டத்தையே தொடங்கியுள்ளார். 


தமிழக அரசு பள்ளிக்குழந்தைகளுக்காக வழங்குகின்ற இலவச நூல் மற்றும் குறிப்பேடுகள் உள்ளிட்ட பத்து விதமான இலவசப் பொருட்களை எவரேனும் விலைக்கு விற்றால் மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதுகுறித்து எனது கவனத்திற்கு கொண்டு வந்தால் நிச்சயம் நடவடிக்கை உண்டு. பலவீனமடைந்துள்ள பள்ளிக் கட்டடங்களைச் சீரமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுப்பணித்துறை அமைச்சரோடு இதுகுறித்துப் பேசியுள்ளேன். பள்ளிக் கட்டடங்களைச் சீரமைக்கும் பணிகளுக்கு முன்னுரிமை தரவும் வேண்டுகோள் வைத்துள்ளேன். ஆகையால் விரைவில் அந்தப் பணிகளும் தொடங்கும். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீரமைக்கப்பட வேண்டிய பள்ளிக் கட்டடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளன.


வருகின்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் இந்தப் பணிகளெல்லாம் தொடங்கும் என எதிர்பார்க்கிறேன். அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சிஎஸ்ஆர் மூலமாகவும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடும் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன.


அரசுப் பள்ளிகளில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்கள் இந்த ஆண்டு 9 ஆயிரத்து 494 பேர் தேவைப்படுகிறது என்பதை ஆசிரியர் தேர்வாணையத்திற்குத் தெரிவித்துள்ளோம். இந்த ஆண்டு நிறைய ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர். இதையெல்லாம் கணக்கில் கொண்டு பணியிடங்கள் நிரப்பப்படும். ரீடிங் மாரத்தான் மூலம் மாணவ, மாணவியர் பயன்பெற வேண்டும் என்பதால்தான் இதனை அறிவித்தோம். தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் இந்தியாவிற்கே முன்மாதிரியாக உள்ளது. 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியாகும்' என்றார்.


இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் இஆப., மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு"- அமைச்சர் அன்பில் மகேஷ்



சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.



சென்னை ஐஐடி சார்பில் கிராமப்புற அரசுhd பள்ளி மாணவர்களுக்கான STEM என்ற கோடைக்கால பயிற்சி திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில் நூறு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக சென்னை ஐஐடி சார்பில் ஜூன் 20 முதல் 25 ஆம் தேதி வரை பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிராமப்புற அரசுப் பள்ளியின்

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த 6 நாள் பயிற்சி வகுப்பு சென்னை தரமணியில்

உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் இன்று முதல் தொடங்கியுள்ளது. நிகழ்ச்சியில்

பள்ளிக் கல்வித் துறையின் செயலாளர் காகர்லா உஷா, ஐஐடி இயக்குநர் காமகோடி

உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை ஐஐடி சார்பில் துவங்கப்பட்டுள்ள STEM திட்டம் பெருமைக்குறியது. எட்டாக் கனியாக எதுவும் இருந்து விடக்கூடாது எனும் நோக்கில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் பயிற்சி வழங்கப்படுகிறது.

6 நாட்கள் பயிற்சியை மாணவ செல்வங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை ஐஐடி யில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.


மாநில கல்விக் கொள்கை தயாரிப்புக் குழுவின் கூட்டம் வரும் 25 ஆம் தேதி நடைபெற

உள்ளது. குழுவின் ஒவ்வொரு கூட்டத்திலும் மாநில கல்வி கொள்கை வளர்ச்சி

அடையும். கோவிட் காலத்திலும் 93% விழுக்காடு தேர்ச்சி பெருமை அளிக்கிறது. நிச்சயம் 100% தேர்ச்சி நோக்கி செல்வோம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.




 அரசுப் பள்ளிகளில் தோராயமாக இதுவரை 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.




அரசுப் பள்ளிகளில் தோராயமாக இதுவரை 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்து உள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.



திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களைப் பாராட்டிச் சான்றிதழ் வழங்கினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், மைக்ரோபயாலஜி பாடத்தில் தமிழ்நாட்டிலேயே ஒரே ஒரு மாணவி 100 மதிப்பெண் எடுத்துள்ளார் அதுவும் அவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டார். மேலும், இனிவரும் காலத்தில் நமது கல்விமுறை மேம்படுத்துவதில் நாம் இன்னும் உழைக்க வேண்டும் எனவும் அரசுப் பள்ளிகளில் தோராயமாக இதுவரை 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்து உள்ளதாகத் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், பல திட்டங்களை நாம் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் கொண்டு வருகிறோம், நம் மீது மக்களுக்கு நம்பிக்கை இருப்பதைப் பார்க்க முடிகிறது, மாணவர்களை மேம்படுத்த ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவது, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது போன்ற பல திட்டங்களை நாம் இன்னும் முழுமையாகச் செயல் படுத்தினால் அரசுப் பள்ளியின் மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை வைப்பார்கள் என்பதை உணர்ந்து தமிழக முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார் எனக் கூறினார்.


மேலும், 2025-ஆம் ஆண்டில் 2,3,4 படிக்கும் மாணவர்கள் முழுமையாகத் தமிழை எழுதப் படிக்கத் தெரிந்து கொள்ளும் வகையில் நாம் இலக்கை அடைவோம் என்று எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்த அவர், ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் ஒரு இலக்கு வைத்துள்ளோம், அதன்படி, முதல் கட்டமாக எந்தெந்த பள்ளிகளில் கட்டிட வேலை ஆரம்பிக்க வேண்டும் என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். மற்ற துறைகளுக்குத் தேவையான கட்டிடங்களை விட பள்ளிக்கல்வித்துறைக்குக் கட்டிடங்கள் என்பது மிகவும் முக்கியமானது என்பதால் முக்கியத்துவம் கொடுங்கள் என்று கூறியுள்ளதாகவும் அவர் கூறினார்.



 தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு 152 பட்டதாரிகள் தேவை: விண்ணப்பங்கள் வரவேற்பு



தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி கல்வியின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பெல்லோஷிப்  பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


திட்டத்தின் பெயர்: Tamil Nadu Education Fellowship


காலியிடங்கள்: 38


சம்பளம்: மாதம் ரூ.45,000


தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் உயர்க்கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த துறைகளில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Fellows


காலியிடங்கள்: 114


சம்பளம்: மாதம் ரூ.32,000


தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் உயர்க்கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த துறைகளில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:  விண்ணப்பத்தாரரின் தகுதி, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


மேலும், விண்ணப்பத்தாரர் தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். பணி முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: www.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவத்திற்கான லிங்க் மற்றும் கூடுதல் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.


தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து வரும் 30.06.2022 ஆம் தேதிக்கு முன்னதாக கிடைக்கும்படி விண்ணப்பிக்கவும்.

 நாளை பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் வெளியீடு!! 




பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி சிபிஎஸ்இ முடிவுகள் வெளியான பிறகு 5 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தகவல் உதவி மையத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிபிஎஸ்சிஇ தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்படுகிறது என்றும், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் ஜூலை 8வரை விண்ணப்பிக்கலாம் எனவும், இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் காலி பொறியியல் இடங்கள் உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.


இந்த ஆண்டு முதல் பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்கான நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

 அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பம்..




தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூன் 22 ஆம் தேதி இன்று முதல் ஜூலை 7 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து கல்லூரி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2022-23) விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ என்ற இணையதள முகவரிகளில் ஜூன் 22 ஆம் தேதி முதல் ஜூலை 7 ஆம் தேதி வரையில் பதிவு செய்யலாம்.


இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக 50 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை. பதிவு கட்டணம் மட்டும் 2 ரூபாய் செலுத்தினால் போதுமானது.


விண்ணப்பக்கட்டணங்களை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம். ஆன்லைன் மூலம் செலுத்த முடியாதவர்கள் சேவை மையங்களில் டிடியாக அளிக்கலாம் . மாணவர்கள் சேர்க்கை குறித்த வழிகாட்டுதல் மற்றும் விபரங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் 044 28260098, 28271911 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறியுள்ளார்.

 பிளஸ் 1ல் சேர்க்கை பள்ளிகளுக்கு அறிவுரை


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கையில், மதிப்பெண் தரவரிசைப்படி, மாணவர்கள் விரும்பும் பாடப் பிரிவுகளை ஒதுக்க, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


தமிழகத்தில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில், பிளஸ் 1 சேர்க்கை தொடர்பாக, அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி முதன்மை செயலர்கள் தரப்பில், அறிவுறுத்தல் வழங்கப் பட்டுள்ளது. இதன்படி, அனைத்து பள்ளிகளும், மாணவர்களின் விண்ணப்பங்களை பெற்று, கால அவகாசம் நிர்ணயித்து, அதன்பிறகே மதிப்பெண், இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்றி, தரவரிசை பட்டியல் தயாரிக்க வேண்டும். 


இறுதியாக, விதிகளை பின்பற்றி, மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை ஒதுக்க வேண்டும். மாறாக தங்களின் விருப்பத்துக்கு பாடப் பிரிவுகளை ஒதுக்குவது, சிபாரிசு அடிப்படையில், தேவையான பாடப்பிரிவுகளை வழங்குவது போன்ற விதிமீறல்கள் இருக்கக் கூடாது. இது குறித்து, புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர் சேர்க்கை குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...