19 January 2014
சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியுமா? டி.இ.டி. தேர்வர்கள் கவலை!
சான்றிதழ்களில் கல்வி அலுவலர்களின் கையெழுத்து பெற போதிய கால அவகாசம் இல்லாத நிலையில் 20ம் தேதி துவங்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முகாமில் பங்கேற்க முடியுமா என ஆசிரியர் தகுதி தேர்வர் (டி.இ.டி.,)
கவலை அடைந்துள்ளனர்.
அழைப்பு கடிதம்
டி.இ.டி., முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்) மற்றும் இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 20ம் தேதி முதல் 27 வரை 32 மாவட்டங்களிலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதம் ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணைய தளத்தில் ( www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டு உள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த தகவல் 11ம் தேதி வெளியானது. "தேர்வர் சான்றிதழ்களின் இரு "செட்" நகல்களில் சம்பந்தப்பட்ட கல்வி அலுவலரிடம் கையெழுத்து பெற்று வர வேண்டும். தமிழ் வழியில் படித்தவராக இருந்தால், அதற்குரிய சான்றிதழை பெற்று வர வேண்டும்" என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
கல்வி சான்றிதழ் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அலுவலரிடம் கையெழுத்து பெற வேண்டும். பள்ளி சான்றிதழில் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடமும், பட்ட சான்றிதழில் கல்லூரி முதல்வரிடமும், பல்கலையில் படித்தால் துறை தலைவரோ அல்லது பதிவாளரிடமோ கையெழுத்து பெற வேண்டும். அறிவிப்பு வெளியான பின் 13, 17 ஆகிய இரு நாட்கள் மட்டுமே வேலை நாட்கள். மற்ற நாட்கள் பொங்கல் விடுமுறை. இதனால், சான்றிதழ்களில் கையெழுத்து பெற முடியாமல் தேர்வர்கள் அலைந்து கொண்டு இருக்கின்றனர்.
குறிப்பாக, பல்வேறு பல்கலைகளில் தொலைதூர கல்வி திட்டத்தில் பட்டம் படித்தவர்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கு நேரில் சென்று உரிய அலுவலரிடம் கையெழுத்து பெற வேண்டும். இதற்கு போதிய கால அவகாசம் இல்லை. "தமிழ் வழியில் படித்தவர்கள் அதற்கான சான்றிதழை இணைக்க வேண்டும்" என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. எந்த அலுவலரிடம் சான்றிதழ் பெற வேண்டும் என, தெரிவிக்கவில்லை.
தமிழ் வழி
மேலும் பி.ஏ., தமிழ், எம்.ஏ., தமிழ் படித்தவர்களும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை ஏன் இணைக்க வேண்டும் என, தேர்வர்கள் கேள்வி எழுப்புகின்றனர். படித்ததே தமிழ் எனும்போது இந்த பாடம் சம்பந்தப்பட்டவர்களிடம் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் கேட்பது சரியல்ல என, தெரிவிக்கின்றனர்.
குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டும் எனவும் உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறினால் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என்றும் டி.ஆர்.பி., அறிவித்திருப்பதால் தேர்வர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஏன் இந்த கமுக்கம்?
டி.இ.டி., தேர்வு முடிவு தொடர்பான விவரங்களை முழுமையாக வெளியிட டி.ஆர்.பி. தயக்கம் காட்டுகிறது. பட்டதாரி ஆசிரியர் தேர்வு மறு மதிப்பீட்டால் எத்தனை தேர்வர்களுக்கு மதிப்பெண் அதிகரித்தது, முதுகலை ஆசிரியர் திருத்திய தேர்வு முடிவு வெளியீட்டால் எத்தனை தேர்வர் தேர்ச்சி பெற்றனர் என்பது உள்ளிட்ட எந்த விவரங்களையும் டி.ஆர்.பி., வெளிப்படையாக வெளியிடவில்லை.
மேலும், தேர்ச்சி பெற்றவர் விவரங்களை பாட வாரியாக அனைவரும் பார்க்கும் வகையில் முடிவை வெளியிடாமல், தேர்வர் ஒவ்வொருவரும் தனித் தனியாக முடிவை அறியும் வகையில் வெளியிடப்பட்டன. இதனால் டி.ஆர்.பி.,யில் வெளிப்படைத்தன்மை இல்லை என, தேர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு: 29 ஆயிரம் பேருக்கு நாளைமுதல் சான்றிதழ் சரிபார்ப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 29,528 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கள்கிழமை (ஜன.20) தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதன்மூலம் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
சான்றிதழ் சரிபார்ப்புக்காக மாநிலம் முழுவதும் 30 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பைக் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக அத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
"வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை:
"வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையின் அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஆண்டு மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.இதுதொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்ததையடுத்து, இந்த ஆண்டு இடைநிலை ஆசிரியர்களும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்களுக்குபிளஸ் 2, ஆசிரியர் பட்டயப் படிப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்குபிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். படிப்பு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றுக்கும்வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும்.
கூடுதலாக தேர்ச்சி:
நீதிமன்ற உத்தரவுப்படி, ஆசிரியர் தகுதித்தேர்வு இரண்டாம் தாளில் 4 கேள்விகளுக்கான முக்கிய விடைகள் திருத்தப்பட்டன.அதில் 2 கேள்விகள் நீக்கப்பட்டதோடு, அந்த கேள்விகளுக்கு தலா 1 மதிப்பெண் வழங்கப்பட்டது. மேலும் 2 கேள்விகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் சரியான விடைகளாக அறிவிக்கப்பட்டன.
இதனடிப்படையில்,விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் ஜனவரி 11-ம் தேதி வெளியிடப்பட்டன.திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளில் கூடுதலாக 2,436 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஜனவரி 20 முதல் 28 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் நவம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட்டன.முதல் தாளில் 12,596 பேரும், இரண்டாம் தாளில் 14,496 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
இதில் வெளியிடப்பட்ட முக்கிய விடைகளை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளின் முடிவில் இரண்டாம் தாளில் மட்டும் 4 கேள்விகளுக்கான முக்கிய விடைகளை திருத்தி நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில்,திருத்தப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டு,சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறவுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. சரிபார்ப்பு பணிகளை ஆய்வுசெய்ய 4 இயக்குனர்கள், 20-க்கும் மேற்பட்ட இணை இயக்குனர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. சரிபார்ப்பு பணிகளை ஆய்வுசெய்ய 4 இயக்குனர்கள், 20-க்கும் மேற்பட்ட இணை இயக்குனர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஆகஸ்ட் 17, 18-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை (முதல் தாள்) 2,60,000 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வினை (2-ம் தாள்) 4 லட்சம் பேரும் எழுதினர். இதில், முதல் தாளில் 12,596 ஆசிரியர்களும் 2-ம் தாளில் ஏறத்தாழ 17 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர்களை நியமனத்தில் பின்பற்றப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையையே இந்த தடவை இடைநிலை ஆசிரியர் நியமனத்திலும் கடைப்பிடிக்க அரசு முடிவுசெய்துள்ளது. அதன்படி, தகுதித்தேர்வு மதிப்பெண்ணுடன் பிளஸ்-2 மதிப்பெண், பட்டப் படிப்பு, பி.எட். மதிப்பெண், இடைநிலை ஆசிரியராக இருந்தால் ஆசிரியர் பட்டயப் படிப்பு தேர்வு மதிப்பெண் ஆகியவை கணக்கில் கொள்ளப்படும்.
இதற்கிடையே, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நாளை (திங்கள்கிழமை) தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டத்துக்கு ஒரு மையம் என்ற அடிப்படையில் 32 மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும்போது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அழைப்புக்கடிதம், சுயவிவர படிவம், அடையாளச்சான்று, கல்வி, சாதி சான்றிதழ்கள், சான்றொப்பம் பெறப்பட்ட அவற்றின் நகல்கள், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை தவறாமல் கொண்டுவர வேண்டும் என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். சென்னையில் அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை ஆய்வுசெய்வதற்காக இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவில், தமிழ்நாடு பாடநூல் கழக செயலாளர் எஸ்.அன்பழகன், மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் எஸ்.கண்ணப்பன், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.) இயக்குனர் ஏ.சங்கர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் ஆர்.பிச்சை ஆகியோரும், இணை இயக்குனர்கள் ஏ.கருப்பசாமி (பணியாளர்), எஸ்.கார்மேகம் (மெட்ரிக்), வி.பாலமுருகன் (மேல்நிலைக்கல்வி), எஸ்.உமா (ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில்), டி.உமா (ஆசிரியர் தேர்வு வாரியம்) உள்பட 20-க்கும் மேற்பட்ட இணை இயக்குனர்களும் இடம்பெற்றுள்ளனர்.
பெரிய மாவட்டங்களுக்கு ஒரு அதிகாரியும், சிறிய மாவட்டங்களாக இருந்தால் இரண்டு மூன்று மாவட்டங்களுக்குச் சேர்ந்து ஒரு அதிகாரியும் பணிகளை ஆய்வுசெய்வார்கள். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுவதுடன் பிளஸ்-2, பட்டப் படி, பி.எட்., இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களும் பதிவுசெய்யப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Posts (Atom)
10000 பணியிடங்கள் காலியாக இருக்கும்போது வெறும் 2708 இடங்களை மட்டும் நிரப்புவதா? கோவி செழியனுக்கு அன்புமணி கேள்வி தமிழ்நாட்டில் உள்ள அரசு க...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...