4 September 2014

TET Online Certificates ஒரு வாரம் வரை மட்டுமே இணையதளத்தில் இருக்கும்? 

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரம் பேருக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில் இந்தச் சான்றிதழ்கள் புதன்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டு தாள்களிலும் சேர்த்து 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் அனைவருக்குமான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதோடு, அதற்கு முந்தைய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளாத 180 பேரின் தகுதிச் சான்றிதழ்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 

தேர்வர்கள் தங்களது பதிவெண்ணை இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, சான்றிதழில் இடம்பெறும் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். அவற்றைச் சரிபார்த்தவுடன் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சான்றிதழ்கள் ஒரு வாரம் வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருக்கும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் சான்றிதழ் ஒப்படைப்பு போராட்டம் 

ஆசிரியர் தேர்வில், வெயிட்டேஜ் முறையை எதிர்த்து, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம், சான்றிதழ் ஒப்படைப்பு போராட்டம், நாளை நடத்தப்படும் என, போராட்டம் நடத்துவோர் தெரிவித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மட்டும், ஆசிரியர் தேர்வு செய்யப்பட வேண்டும்; 

வெயிட்டேஜ் முறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, சென்னையில் 10 நாட்களுக்கும் மேலாக, ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, கல்வித்துறை வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர். 

அவர்கள் கூறுகையில், "வெயிட்டேஜ் முறையை எதிர்த்து 5ம் தேதி (நாளை), எங்கள் சான்றிதழ்களை, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைப்போம். மேலும், வாக்காளர் அடையாள அட்டையை, தேர்தல் ஆணையத்திடம் வழங்கவும் முடிவு செய்துள்ளோம்" என்றனர்.
ஆசிரியர் நியமனத் தடைக்கு எதிராக மனு: விசாரிக்க மதுரை நீதிமன்றம் மறுப்பு 

ஆசிரியர்கள் நியமனத் தடைக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு நாளை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

தனி நீதிபதியின் உத்தரவு கிடைக்கவில்லை என 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விளக்கமளித்தது. இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு நேற்று தனி நீதிபதி சசிதரன் தடை விதித்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சோமையாஜி வழக்கு தொடர்ந்திருந்தார். கூடுதல் செய்தி தனி நீதிபதி திரு.சசிதரன் அவர்களின் தீர்ப்பு நகல் அமர்வு நீதிமன்றத்திற்கு கிடைத்தவுடன் நாளை விசாரணைக்கு வருகிறது.
இடைநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு வழங்கிய தடையாணையை நீக்க தமிழக அரசு மேல் முறையீடு. இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்ய வழங்கிய தடையாணையை எதிர்த்துதமிழக அரசு மேல் முறையீட்டு மனு:கடந்த புதன்கிழமை வெய்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் ஆசிரியர்களை நியமிக்க தடையாணை வழங்கி உத்தரவிட்டது. இந்ததடையாணையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளது. அரசு தரப்பில் திரு.சோமைய்யாஜி ஆஜரகிறார்.
பட்டதாரி ஆசிரியர்கள் கைது-புதிய தலைமுறை 

வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி, சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். ஆசிரியர் தினமான நாளை, தங்களது சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தெரிவித்தனர். 

மேலும், வாக்காளர் அடையாள அட்டையையும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திருப்பியளிக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆசிரியர் தேர்வு முறையில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ள போதிலும், ஆசிரியர்களின் போராட்டம் 11ஆவது நாளாக நீடிக்கிறது.
தகுதிகாண் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனத்துக்குத் தடை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு - தினமலர் 

தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களைச் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், கத்தகுறிச்சியைச் சேர்ந்த வி.தமிழரசன் தாக்கல் செய்த மனு விவரம்: பி.எஸ்ஸி., பி.எட். படித்துள்ள எனக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பரிந்துரையின்பேரில் சான்றிதழ் சரிபார்ப்பு 2010-ஆம் ஆண்டு மே 13-இல் மேற்கொள்ளப்பட்டது. 

இருப்பினும், என்னை பணிக்குத் தேர்வு செய்யவில்லை. அந்தச் சமயத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இதற்கிடையே, தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. 2011-2012-இல் நடந்த தேர்வில் 88 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். அதன்பிறகும் பணிக்குத் தேர்வாகவில்லை. 2013-இல் நடந்த தகுதித் தேர்வில், 150-க்கு 92 மதிப்பெண்கள் பெற்றேன். ஆசிரியர் பணி நியமனத்துக்கு இது தகுதியான மதிப்பெண் ஆகும். 

ஆனால், பணி நியமனத்துக்கு முந்தைய நடைமுறைப்படி பரிசீலனை செய்யப்படவில்லை. மேலும், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு தகுதிகாண் மதிப்பெண் முறை அறிமுகம் செய்யப்பட்டு, அதற்கான அரசாணை 2014-ஆம் ஆண்டு மே 30-இல் வெளியிடப்பட்டது. 

இதில் பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், தகுதித் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றைக் கொண்டு தகுதிகாண் மதிப்பெண் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் புதிய நடைமுறை, பணி நியமனத்துக்குக் காத்திருக்கும் போட்டியாளர்களுக்கு பாகுபாடு காட்டுவதாக அமைந்துவிடும். ஏனெனில், நடைமுறையில் இருக்கும் தேர்வு முறை, வினாத்தாள், மதிப்பீடு ஆகியவையும், 25 ஆண்டுகளுக்கு முந்தைய தேர்வு முறையும் ஒரே மாதிரியானதல்ல. 25 ஆண்டுகளுக்கு முன்பு அதிக மதிப்பெண்கள் எடுப்பது என்பது சுலபமல்ல. 

ஆனால், இப்போது நிலை மாறியிருக்கிறது. ஆகவே, சமீபத்தில் தேர்வு எழுதியவர்களையும், பல ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு எழுதியவர்களையும் ஒரே மாதிரியாகக் கருதுவது ஏற்புடையதல்ல. அதேபோல பதிவு மூப்பு, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு தகுதிகாண் மதிப்பெண் வழங்கப்படவில்லை. இந்தத் தகுதிகாண் மதிப்பெண் முறை அறிவியல்பூர்வமாக சிந்திக்காமல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஆகவே, இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும், இதன் அடிப்படையில் நடத்தப்படும் ஆசிரியர் பணி நியமனக் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதேபோல, மேலும் 17 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரண், தகுதிகாண் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்தார். இருப்பினும், கலந்தாய்வு நடத்துவதற்கு எவ்விதத் தடையும இல்லையென்று உத்தரவிட்டார். 

ஏற்கெனவே, தகுதிகாண் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டிருந்தால், அதற்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
டி.இ.டி., சான்றிதழ் இணையத்தில் வெளியீடு - தினமலர் 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 72 ஆயிரம் பேரின் சான்றிதழ்களை, இணையதளத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது. தேர்வர், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், 'ரோல் எண்' மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, டி.இ.டி., சான்றிதழை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
14,700 ஆசிரியர்கள் நியமனத்தில் உச்சகட்ட குழப்பம்: நீதிமன்ற உத்தரவால் பெரும் கலக்கம்??

பள்ளிக்கல்வித் துறை யில், 14,700 புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதில்,உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. 'புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமன கலந்தாய்வு நடத்தலாம்; ஆனால், பணியில் சேர அனுமதிக்கக் கூடாது' என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, நேற்று பிறப்பித்த இடைக்கால உத்தரவால், ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்றவர்கள், கலக்கம் அடைந்துள்ளனர். 

பணி நியமன உத்தரவு பெற்று, பணியில் சேராதவர்களும், பணி நியமன உத்தரவை பெறாமல் உள்ளவர்களும், 'தேர்வு ரத்தாகிவிடுமோ' என, அச்சம் அடைந்துள்ளனர். இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) முறையை கொண்டு வந்ததில் இருந்து, தமிழகத்தில், தொடர் குளறுபடி நடந்து வருகிறது. 

காரணம் என்ன? 
கடந்த 2012, அக்., 5ம் தேதி, ஆசிரியர் நியமனம் தொடர்பாக, முதல் அரசாணை வெளியானது. அதில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை அறிமுகம் செய்யப்பட்டது.அதன்படி, டி.இ.டி., தேர்வில், 150க்கு பெறும் மதிப்பெண், 60க்கும், பிளஸ் 2, ஆசிரியர் கல்வி பட்டய படிப்பு, பட்டப் படிப்பு, பி.எட்., போன்ற படிப்புகளில், தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 40 மதிப்பெண் என, 100 மதிப்பெண் கணக்கிட்டு, அதன் அடிப்படையில், தகுதியான ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர் என, அறிவிக்கப்பட்டது. 

இந்த முறையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், தேர்வர்கள் வழக்கு தொடர்ந்தனர். 'இந்த அரசாணை, அறிவியல் பூர்வமானது அல்ல; எனவே, யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல், புதிய அரசாணையை வெளியிட வேண்டும்' என, அந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், தமிழக அரசுக்கு, புதிய கணக்கிடும் முறை ஒன்றையும், உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையை ஏற்று, தேர்வர் பெறும் ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும், சதவீத அடிப்படையில் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் தேர்வு செய்யும் புதிய முறையை, கடந்த மே 30ம் தேதி, புதிய அரசாணையாக, கல்வித்துறை வெளியிட்டது. 

இதற்கிடையே, டி.இ.டி., அல்லாத பிற கல்வி தகுதிகளுக்கு வழங்கப்படும், 40 மதிப்பெண்ணுக்கான, 'வெயிட்டேஜ்' முறையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையில், சிலர் வழக்கு தொடர்ந்தனர். தடை: இந்நிலையில், ஆக., 10ம் தேதி, ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது.

 இதை தொடர்ந்து, கடந்த ஆக., 30ம் தேதி முதல், பணி நியமனம் நடந்து வருகிறது. நேற்றுடன் ஐந்து நாள் நடந்த கலந்தாய்வில், 5000த் திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, பணிநியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.நேற்று, மாவட்டத்திற்குள் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, கலந்தாய்வு நடந்து கொண்டிருந்த நிலையில், பிற்பகல், 2:00 மணிக்கு, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால உத்தரவு குறித்த தகவல், கல்வித்துறைக்கு கிடைத்தது.'புதிய ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு நடத்தலாம்; ஆனால், அவர்கள் பணியில் சேர, கல்வித்துறை அனுமதிக்கக் கூடாது' என, மதுரை கிளை, இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

இதனால், அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்த கல்வித்துறை அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து, உயர் அதிகாரிகளிடம் விளக்கினர்.தேர்வு பெற்ற, 14,700 பேரில், பணி நியமன உத்தரவு பெற்று, பணியில் சேராதவர்களும், பணி நியமன உத்தரவு பெற காத்திருப்பவர்களும், 'தேர்வு ரத்தாகிவிடுமோ' என, அச்சம் அடைந்துள்ளனர். 

பணியில் சேர உடனடி தடை: கல்வித்துறை வட்டாரம் கூறியதாவது: தற்போதைய நிலை யில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, எதுவும் கூற முடியாது. நீதிமன்றத்தின் உத்தரவு விவரம் கிடைத்ததும், உயர் அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தி, அடுத்த முடிவு எடுக்கப்படும்.பணி நியமன கலந்தாய்வுக்கு, நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. எனவே, ஏற்கனவே அறிவித்தபடி, பணி நியமன கலந்தாய்வு, தொடர்ந்து நடக்கும். ஆனால், உத்தரவு பெற்ற ஆசிரியர்கள், பணியில் சேர அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது. 

முதல் கோணல் முற்றும் கோணலானது : ஆய்வுக் கூட்டம் நடத்துவதில், கல்வித்துறையை மிஞ்ச, வேறு ஒரு துறையும் கிடையாது. அந்தளவிற்கு, மாதத்திற்கு, 20 கூட்டங்களை நடத்துவர். ஆனால், எந்த ஒரு பொருள் குறித்தும், விளக்கமாக, ஆழமாக விவாதித்து, யாரும் ஆட்சேபனை எழுப்பாத வகையில், முடிவை எடுக்க மாட்டர்.'ஏனோ, தானோ' என, முடிவை எடுப்பதும், பின், அதற்கு எதிர்ப்பு வந்ததும் மாற்றுவதும் தான், கல்வித்துறையின் வாடிக்கையாக உள்ளது. 

ஆசிரியர் நியமனத்திற்கான வழிமுறையை உருவாக்க, அமைச்சர் (அப்போது சிவபதி) தலைமையில், உயர்மட்டக்குழு உருவாக்கப்பட்டது. இக்குழு அமைப்பதற்கான அரசாணை, 2012, செப்., 14ல் வெளியானது. செப்., 14, 24 ஆகிய இரு நாட்கள் கூடி, ஆலோசனை செய்து, அக்., 5ம் தேதி, 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணுடன் கூடிய அரசாணையை வெளியிட்டு விட்டனர்.

இந்த அரசாணையை, சென்னை உயர்நீதிமன்றம், சில மாதங்களுக்கு முன் தான் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின், கடந்த, மே 30ம் தேதி, புதிய அரசாணையை வெளியிட்டனர்.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...