Posts

Showing posts from September 20, 2013
முதுகலை ஆசிரியர் பட்டியல் எப்போது? முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை,வரும், 30ம் தேதிக்குள் வெளியிட,டி.ஆர்.பி.,திட்டமிட்டு உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம்,அரசு மேல்நிலைப் பள்ளிகளில்,காலியாக உள்ள, 2,900முதுகலைஆசிரியர் பணியிடங்களை நிரப்ப,கடந்த ஜூலையில்,போட்டி தேர்வை நடத்தியது.1.5லட்சம் பேர்,தேர்வை எழுதினர். தேர்வின்,தற்காலிக விடைகளை வெளியிட்ட சிறிது நாட்களில்,அனைத்து பாடங்களுக்கும்,தேர்வு பட்டியலையும்,டி.ஆர்.பி.,தயாரித்தது. இதற்கிடையே,தமிழ் பாட கேள்வித்தாளில், 40கேள்விகளில் பிழை இருந்ததாக கூறி,மதுரையைச் சேர்ந்த விஜயலட்சுமி,சென்னை உயர் நீதிமன்ற,மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்க,அவர் கோரியுள்ளார். இந்த பிரச்னையால்,இதர பாடங்களுக்கான முடிவை வெளியிடுவதில்,தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து,டி.ஆர்.பி.,வட்டாரம் கூறுகையில், "தமிழ் பாட பிரச்னையில்,விரைவில்,ஒரு முடிவை எடுத்து,கோர்ட்டில் தெரிவிக்க உள்ளோம். எனவே, 30ம் தேதிக்குள்,முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட திட்டமிட்டு உள்ளோம். டி.இ.டி.,தேர்வு முடிவுகள்,இம்மாத இறுதிக்குள்ளாகவோ அல்லது அக
1,440 கம்ப்யூட்டர் பயிற்றுநர்களை பணிநீக்கம் செய்தது சரியே! அரசுப் பள்ளிகளில் தாற்காலிகமாக பணியாற்றி வந்த 1,440 கம்ப்யூட்டர் பயிற்றுநர்களை பணி நீக்கம் செய்தது சரியானதே என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சிறப்புத் தேர்வில் இந்த கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெறவில்லை. எனவே, அவர்களுக்கு பணியில் நீடிக்கும் தகுதியில்லை என நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,300-க்கும் அதிகமான கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் 1999, 2000 ஆம் ஆண்டுகளில் தாற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகும் இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. எனவே, பணி நிரந்தரம் செய்யக்கோரி இவர்கள் வழக்குகளைத் தொடர்ந்தனர். இவர்களது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இவர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்த உத்தரவிட்டது. இந்த சிறப்புத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெறும் கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதனடிப்படையில் 2008