Posts

Showing posts from March 19, 2022
Image
  டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே!. இதை மட்டும் செய்யாதீங்க.. வெளியான முக்கிய அறிவிப்பு...!!!!! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வு முறைகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் இந்த வருடத்துக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி விண்ணப்பத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பலர் இதனை அறியாமல் தவறாக விண்ணப்பிக்கின்றனர். ஆகவே தேர்வு அறிக்கை வெளியான அன்றோ அல்லது அதற்கு பிறகோ எடுக்கப்பட்ட புகைப்படத்தை மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும். புகைப்படத்தின் கீ
Image
  புதுச்சேரியில் 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வு பொதுத் தேர்வு எழுதவுள்ள 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பொதுத் தேர்வு எழுதவுள்ள 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வை பள்ளி அளவில் நடத்திட வேண்டும்.தேர்வு அட்டவணை விபரம்:10ம் வகுப்பு: வரும் 28ம் தேதி மொழிப்பாடம், 29ம் தேதி ஆங்கிலம், 30ம் தேதி கணிதம், 31ம் தேதி அறிவியல், 1ம் தேதி சமூக அறிவியல்.பிளஸ் 2: வரும் 28 ம் தேதி மொழிப்பாடம், 29ம் தேதி ஆங்கிலம், 30ம் தேதி கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளி கேஷன், மனையியல், அரசியல் அறிவியல், 31ம் தேதி வேதியியல், கணக்கியல், புவியியல், 1ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை பொறியியல் பிரிவுகள், 4ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், வேளாண் அறிவியல், டெக்ஸ்டைல் டிசைனிங்.5ம் தேதி இயற்பியல்
Image
புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் பல குழப்பங்கள் நீடித்து வருகிறது. இதனை தெளிவுப்படுத்த முதலமைச்சருடன் விரைவில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்  தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழக அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றால் வழங்கப்படும் சான்றிதழ் தற்போது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 7 வருடங்கள் மட்டுமே அந்த சான்றிதழ் செல்லுபடியாகும். கடந்த மாதம் கணினி பயிற்றுனர், முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக அரசு பள்ளிகளில் உள்ள 9 ஆயிரத்து 494 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. இருப்பினும் கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற