Posts

Showing posts from June 24, 2023
Image
  டிஎன்பிஎஸ்சி தலைவராகும் சைலேந்திரபாபு..இறையன்பு ஐஏஎஸ்க்கு காத்திருக்கும் புதிய பதவி தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு சில தினங்களில் ஓய்வு பெற உள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற்றாலும் அவருக்கு கவுரமான பொறுப்பு கொடுத்து தனது பக்கத்திலேயே வைத்துக்கொள்ள முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நியமினம் செய்து வருகிறது.  ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு, ஆட்களைத் தேர்வு செய்வது டிஎன்பிஎஸ்சியின் முக்கியப் பணியாகும். டிஎன்பிஎஸ்சி 1 தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு. இதில் தற்போது தலைவர் பணியிடம் காலியாக, நிரப்பப்படாமல் உள்ளாது.  எனினும் டிஎன்பிஎஸ்சியில் தற்போது 2 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். உறுப்பினர்களில் ஒருவரான முனியநாதன் பொறுப்பு தலைவராகப் பணியாற்றி வருகிறார். டிஎன்பிஎஸ்சிக்கு நிரந்தரமாக தலைவர்
Image
 தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து?.. பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை.!!! தமிழகத்தில் 10 , 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பொது தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து மூன்று வருடங்கள் பொதுத் தேர்வு நடத்துவதால் மாணவர்கள் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் அதனால் 11ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்ய வேண்டும் எனவும் ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் 11ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்வது தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டம் பள்ளி கல்வித்துறையில் தொடங்கியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இதற்கே தலைமை ஏற்றுகிறார். 11ஆம் வகுப்பை நடத்தாமலேயே சில பள்ளிகள் 12 ஆம் வகுப்பு பாடத்தை நடத்தியதால் 11 ஆம் வகுப்புக்கும் பொது தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.ஆனால் மாணவர்களுக்கு சுமை அதிகரிப்பதால் தற்போது 11ஆம் வகுப்பு ரத்து குறித்து அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
Image
  அரசுப்பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள விளையாட்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை ஆய்வு செய்து வருகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்போம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 2023-24ம் கல்வி ஆண்டில் உடற்கல்வி செயல்பாடுகள் மற்றும் பல்வேறு நிலை போட்டிகள் நடத்துதல் தொடர்பான விவாதம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களின் கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி உள்ளிட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி யோகா போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்ற தமிழ்நாடு பள்ளி மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: விளையாட்டுக்கென தனியாக வழிகாட்டி புத்தகம் தயாரிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஏற்பாடு ச
Image
  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலியிடங்களின் எண்ணிக்கையை 20 ஆயிரமாக உயர்த்துக - அன்புமணி வலியுறுத்தல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலியிடங்களின் எண்ணிக்கை வெறும் 631 மட்டுமே உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு இளைஞர்களின் வேலைவாய்ப்பு தேவை என்ற யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 24-ஆம் நாள் நடத்தப்பட்ட தொகுதி 4 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 10,117 என்பதிலிருந்து 10,748 ஆக உயர்த்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.  காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை வெறும் 631 மட்டுமே உயர்த்தப்படவிருக்கிறது. தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு தேவை என்ற யானைப்பசிக்கு இது சோளப்பொறி போன்றது தான். இது போதுமானதல்ல. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் நாள் அறிவிக்கப்பட்ட நான்காம் தொகுதி பணிகளுக்க