20 March 2015
அரசுப் பணிகளுக்கு பத்திரிகை விளம்பரம் மூலமாகவும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுக்குழு
இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசுப் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான முறையை ரத்து செய்து கடந்த 2.8.12 அன்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. வேலைவாய்ப்பு அலுவலகம் மட்டுமல்லாமல், பத்திரிகை விளம்பரங்கள் மூலம் விண்ணப்பங்கள் பெற்று, தகுதியான ஆட்களைக் கண்டறிந்து அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் அதில், எத்தனை பணியிடங்கள் உள்ளன? அதில் சேர்வதற்கான தகுதி என்ன? வயது, வயதில் சலுகை, இடஒதுக்கீடு போன்றவையும் அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருக்க வேண்டும். இதற்காக தேர்வுக் குழுவை அமைக்கவேண்டும்
.
அப்பீல் தள்ளுபடி
வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பெறப்படும் பட்டியலுடன் விளம்பரங்கள் மூலம் பெறப்பட்ட விண்ணப்பதாரரையும் சேர்த்து, ஆட்கள் தேர்வுப் பணிக்கான முறையை வகுத்துவிட்டு, அதன் பிறகு காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் அப்பீல் தாக்கல் செய்தார். அந்த அப்பீலை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது. அந்த உத்தரவில், வேலை வாய்ப்புக்காக குறைந்தபட்சம் இரண்டு பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்க வேண்டும் என்றும் அதில் ஒன்று உள்ளூர் மொழியில் வெளியாகும் பத்திரிகையாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அமல்படுத்த முடிவு
இந்த உத்தரவை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று அரசுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கடிதம் எழுதினார். அதை கவனமுடன் அரசு பரிசீலித்து, ஐகோர்ட்டின் அந்த உத்தரவை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிஎச்.டி. தகுதி தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, உயர் கல்வியின்தரம் உயரவும் ஆராய்ச்சிகள் மேம்படவும் வழி வகுக்கும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதோடு, 2009-ஆம் ஆண்டுக்கு முன்னர் பிஎச்.டி. முடித்தவர்கள் "நெட்' அல்லது "செட்' தேர்வு தேர்ச்சி பெறுவது கட்டாயமாகியுள்ளது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழிகாட்டுதல் 2009-இன் படி, முதுநிலை பட்டப் படிப்புடன் தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வில் (செட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.
இருந்தபோதும் ஆராய்ச்சிப் படிப்பை (பிஎச்.டி.) முடித்தவர்களுக்கு இந்தத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், இந்த பிஎச்.டி. படிப்பின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆராய்ச்சி வழிகாட்டி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆராய்ச்சி மாணவர்களுக்கு மட்டுமே வழிகாட்டியாக இருக்க வேண்டும், ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடுவது, மேலும் ஆராய்ச்சி மாணவரின் ஆராய்ச்சி வழிமுறைகளை (தீஸிஸ்) இரு நிபுணர்கள் ஆய்வு செய்ய வேண்டும், அதில் ஒரு நிபுணர் வெளி மாநிலத்தவரைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கட்டுப்பாடுகளை யுஜிசி 2009 வழிகாட்டுதலில் கட்டாயமாக்கப்பட்டது.
இந்த நிலையில், பல மாநிலங்களில் யுஜிசி-இன் புதிய வழிகாட்டுதல் படி அல்லாமல் பிஎச்.டி. முடித்தவர்களுக்கு "நெட்', "செட்' தகுதித் தேர்வுகளிலிருந்து விலக்கு அளித்து, உதவிப் பேராசிரியர் பணி வழங்கப்பட்டு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், தில்லி உயர் நீதிமன்றம், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், அலாகாபாத் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் தனித் தனியாக வழக்குகள் தொடரப்பட்டன. இதில் முதல் மூன்று உயர் நீதிமன்றங்களும், யுஜிசி 2009 வழிகாட்டுதல் கூறியுள்ளபடி பிஎச்.டி. முடித்தவர்களுக்கு மட்டுமே "நெட்', "செட்' தகுதித் தேர்வுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்தன.
ஆனால், அலாகாபாத் உயர் நீதிமன்றம் இதற்கு மாறான தீர்ப்பை அளித்தது. அதாவது யுஜிசி வழிகாட்டுதல் வெளிவருவதற்கு முன்பு, அதாவது 2009-ஆம் ஆண்டுக்கு முன்பு பிஎச்.டி. முடித்தவர்களுக்கும் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளித்தது.
இந்த மாறுபட்ட தீர்ப்புகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரு தினங்களுக்கு முன்பு தீர்ப்பு அளித்தது. அதில், சென்னை, தில்லி, ராஜஸ்தான் ஆகிய மூன்று உயர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பே சரி என்று கூறியது. அலாகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.
கல்லூரிகளில் கல்வித் தரம் உயரவும், உண்மையான ஆராய்ச்சி மேம்படவும் இந்தத் தீர்ப்பு வழிவகுக்கும் என்றும் அவர்கள் கூறினர். இதுகுறித்து நெட், செட் சங்க நிறுவனத் தலைவர் எஸ். சுவாமிநாதன் கூறியது: யுஜிசி-இன் 2009 வழிகாட்டுதல் வருவதற்கு முன்பு, ஆராய்ச்சிப் படிப்புக்கு அந்த அளவுக்கு கட்டுப்பாடுகள் இல்லை. ஒரு பேராசிரியர் எத்தனை ஆராச்சி மாணவர்களுக்கும் வழிகாட்டியாக இருக்க முடியும். மேலும், தனக்குத் தெரிந்த பேராசிரியர்கள் நிபுணர்கள் மூலம் ஆய்வுக் கட்டுரையை ஆய்வு செய்து சமர்ப்பித்து, பட்டத்தைப் பெற்றுவிட முடியும். இவை அனைத்தும் 2009 வழிகாட்டுதலில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தரமான ஆராய்ச்சியாளர் உருவாவதற்காக யுஜிசி இந்தக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது.
எனவே, உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மூலம், கல்வித் தரம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 2009-ஆம் ஆண்டுக்கு முன்னர் பிஎச்.டி. முடித்தவர்கள் "நெட்' அல்லது "செட்' தேர்வு தேர்ச்சி பெறுவது கட்டாயமாகியுள்ளது. இருந்தபோதும், சில பல்கலைக்கழகங்கள் இன்னும் யுஜிசி 2009 வழிகாட்டுதலை நடைமுறைக்கு கொண்டு வராமலே உள்ளன. கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 7-9-2011 முதல் தான் இந்த வழிகாட்டுதலை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது. திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 1-7-2013 முதல் தான் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது. இதுபோன்ற பல்கலைக்கழகங்கள் மீது யுஜிசி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...