Posts

Showing posts from March 14, 2022
Image
  பள்ளி கல்வித்துறை இயக்குநர் மகன் அரசு பள்ளியில் சேர்ப்பு..!   புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குநர் ருத்துரகவுடா தனது மகனை அரசு மழலையர் பள்ளியில் சேர்த்துள்ளார். அரசு ஊழியர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வித்துறை இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.
Image
  TNTET: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப நடைமுறை தொடங்கின ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று (2022, மார்ச் 14 திங்கள்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க எவ்வித வயது வரம்பு கட்டுப்பாடும் கிடையாது என்பதால் வழக்கத்தை விட மிக அதிகமான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர். மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 8ஆம் வகுப்பு வரையிலான இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test (TET)) டெட்டில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் ஆகும். தமிழகத்தில் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (National Council for Teacher Education) விதிமுறையின்படி ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் 2012 முதல் 2019 வரை 5 முறை நடத்தப்பட்டிருக்கும் 'டெட்' தேர்வுகள் மூலம், 95 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 25 ஆயிரம் பேர் அரசுப் பண
  உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் போக மீதமுள்ள காலிப்பணியிட விவரங்கள் !!! காலிப்பணியிட விவரங்கள் தமிழ் காலிப்பணியிடம்- 1417 கூடுதல் தேவைப்பணியிடம்-1696 மொத்தம்-3113 உபரி ஆசிரியர்கள்- 316 நிகர காலிப்பணியிடங்கள்- 2797 ஆங்கிலம் காலிப்பணியிடம்- 878 கூடுதல் தேவைப்பணியிடம்- 1950 மொத்தம்- 2828 உபரி ஆசிரியர்கள்- 500 நிகர காலிப்பணியிடங்கள்- 2328 கணிதம் காலிப்பணியிடம்- 860 கூடுதல் தேவைப்பணியிடம்- 1208 மொத்தம்- 2068 உபரி ஆசிரியர்கள்- 1005 நிகர காலிப்பணியிடங்கள்- 1063 அறிவியல் காலிப்பணியிடம்- 1681 கூடுதல் தேவைப்பணியிடம்-1812 மொத்தம்- 3493 உபரி ஆசிரியர்கள்- 827 நிகர காலிப்பணியிடங்கள்- 2666 சமூக அறிவியல் காலிப்பணியிடம்- 1175 கூடுதல் தேவைப்பணியிடம்- 1458 மொத்தம்- 2633 உபரி ஆசிரியர்கள்- 392 நிகர காலிப்பணியிடங்கள்- 2241 மொத்த பணியிடங்கள் : 11,100
Image
  ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வானது (teacher eligibility test 2022) ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில்,ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று(14-03-2022) முதல் அடுத்த மாதம் 13-04-2022 வரை, http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.ஆனால்,தாழ்த்தப்பட்டோர்,மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு தேர்வு கட்டணம் ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் விவரங்களுக்கு TRB யின் http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை பார்வையிடவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.