Posts

Showing posts from June 25, 2022
Image
  444 இடங்களுக்கு இன்று எஸ்.ஐ. தோ்வு: 2.21 லட்சம் போ் போட்டி தமிழகத்தில் காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) தோ்வு சனிக்கிழமை (ஜூன் 25) நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 2.21 லட்சம் போ் எழுதுகின்றனா். தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 444 காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பை, கடந்த மாா்ச் 8-ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு குழுமம் வெளியிட்டது. தோ்வு எழுத விரும்பிய இளைஞா்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு குழுமத்தின் இணையதளத்தில் விண்ணப்பித்தனா். தோ்வின் முதல் கட்டமாக ஜூன் 25 ஆம்தேதி காலை 10 மணி முதல் 12.30 மணி வரை பொது அறிவுத் தோ்வும், மாலை 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ் திறனறிதல் தோ்வும் நடைபெறவுள்ளன. 26-ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை காவல் துறையில் இருந்து தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான எழுத்துத் தோ்வு நடைபெறுகிறது. இந்தத் தோ்வில், முதல் முறையாக தமிழ் திறனறிதல் தோ்வு நடைபெறுகிறது. முதலில் தமிழ் திறனறிதல் தோ்வு விடைத்தாள் திருத்தப்படும். அதில் விண்ணப்பதாரா் 40 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து, தோ்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே அவரது பொது அற
Image
  கல்வியாளர் சங்கமம் சார்பில் அரசுக்கு கோரிக்கை! தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் நிரப்பப்படாமல் இருந்த காலி ஆசிரியர் பணியிடங்களை தற்போது தமிழ்நாடு அரசு, மதிப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து கல்வியாளர்கள் சங்கமம் ஆசிரியர் சதீஷ்குமார் கூறியதாவது, 'தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக அரசுப் பள்ளிகளில் காணப்படுகின்ற காலிப் பணியிடங்களுக்கு தொகுப்பூதிய முறையில் 13,331 ஆசிரியர்களை நியமித்து கொள்ளும் அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது. அதனுடைய காலிப் பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றன. 2014ம் ஆண்டிற்குப் பிறகு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் மிகப்பெரிய அளவில் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதிலும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது கொரோனா காலகட்டத்தில், பல லட்சங்களாக அதிகரித்துள்ளது. ஆனால் வெளியிடப்பட்டிருக்கும் காலிப்பணியிடங்கள் இவற்றை சிறிதும் கணக்கில் கொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு ம
Image
  தற்காலிக ஆசிரியர்கள் 1,593 பேர் பணி நியமனம் செய்ய முடிவு கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,593 தற்காலிக ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர்.தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 13ஆயிரத்து, 331 காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்பி, வரும் ஜூலை,1 முதல் பணியமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில், 1,748 காலி பணியிடங்களும் அடுத்தபடியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,593 ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன.அதிகாரிகள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 906 காலி பணியிடங்கள், பட்ட தாரி ஆசிரியர்களுக்கு, 623 காலி பணியிடங்கள், முதுகலை ஆசிரியர்களுக்கு, 64 காலி பணியிடங்கள் என மொத்தம், 1,593 காலிப்பணியிடங்கள் உள்ளன. இடைநிலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் எந்தெந்த பள்ளிகளில் உள்ளது என்பதை அறிய அந்தந்த வட்டார கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இதேபோல பட்டதாரி, முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை மாவட்ட கல்வி அலுவலரிடம் தெரிந்து கொள்ளலாம்.காலியாக உள்ள பணியிடங்களில் பள்ளியின் தலைமையாசிரியர், மேலாண்மை குழுவினருடன் இ
Image
  ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களை தற்காலிக ஆசிரியர்களாக பணியமர்த்தலாம்: பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..! காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிகமாக நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில் தொடக்கப் பள்ளிகள் தொடங்கி நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 4989, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 5154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 3188 , முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்காலிகமாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாதம் 12 ஆயிரம் வரை ஊதியம் வழங்க பள்ளி கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுக்கும், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க
  கள்ளர் பள்ளிகளிலும் தற்காலிக ஆசிரியர் நியமனம்: சங்கங்கள் வலியுறுத்தல் மதுரை: கள்ளர் சீரமைப்பு பள்ளிகளிலும் காலியாக உள்ள பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கள்ளர் சீரமைப்பு ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீரங்கநாதன் தீனன், முத்துக்குமார் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது:கல்வித் துறையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் 2022-2023 ல் காலியாக உள்ள 4989 இடைநிலை, 5154 பட்டதாரி, 3188 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் ரூ.7500 முதல் ரூ.12 ஆயிரம் வரையான சம்பளத்தில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளன. அதற்கான மாவட்டம் வாரி காலிப் பணிடங்களும் வெளியிடப்பட்டுள்ளது.இதுபோல் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள கள்ளர் பள்ளிகளிலும் ஏராளமான காலிப் பணியிடங்கள் உள்ளன. இப்பள்ளிகளில் வசூலிக்கப்படும் பெற்றோர் ஆசிரியர் கழக நிதி அந்தந்த சி.இ.ஓ.,க்களிடம் தான் ஒப்படைக்கப்படுகிறது. இங்கும் பள்ளி மேலாண்மை குழுக்கள் செயல்படுகின்றன. எனவே கள்ளர் பள்ளிகளிலும் காலிப் பணியிடங்களை வெளிய
Image
  மாதந்தோறும் ஆயிரம் ரூபாய்! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! உங்க பெயர் இருக்கா? எப்படி செக் பண்றது? முழு விபரம்! உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் ரூ.1,000 உதவித் தொகையைப் பெறுவதற்கு தகுதி வாய்ந்த மாணவிகள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லிஸ்ட்டில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று எப்படி செக் பண்றது என்பதையும் பார்க்கலாம் வாங்க. தமிழகத்தில் சுமார் 2.70 லட்சம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இப்போது 2ம் ஆண்டில் திமுக பயணிக்கிறது. அது மட்டும் இன்றி ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில திட்டங்களில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தி அவை சிறப்பான முறையில் செயல்படுத்தப்படவும் உள்ளது. அந்த வகையில், சமீபத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்திட்டத