Posts

Showing posts from September 7, 2022
Image
நீட் தேர்வு முடிவுகள் வெளியானது! மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு. மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நீட் இளநிலை மருத்துவர் நுழைவு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 17,78,025 மாணவர்கள் எழுதி இருந்தனர். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். நீட் இளநிலை மருத்துவர் நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. அந்தவகையில், தற்போது நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
Image
  விரைவில் மாநில கல்விக்கொள்கை அமைச்சர் பொன்முடி தகவல் விரைவில் மாநில கல்விக்கொள்கை வெளியிடப்படும் என்று கூறிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது என எழுத்துப்பூர்வமாக மத்தியஅரசுக்கு தெரிவித்து விட்டதாகவும், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் நடை முறைப்படுத்தப்படும் என்றும் கூறினார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது, 'நான் கூட பி.யூ.சி படிக்கும்போது டாக்டராக வேண்டும் என்று நினைத்துதான் படித்தேன். ஆனால் அது நிறைவேறவில்லை. இன்று தமிழ்நாட்டில் அதிகளவில் உயர்கல்வி நிறுவனங்கள் இருப்பதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சி தான். பெண்கள் படிக்க இயலாத காலம் இன்று மாறியிருக்கிறது. காலத்துக்கேற்ற வகையில், பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். எந்தத் துறை மாணவர்களாக இருந்தாலும் அவர்கள் Inter Disciplinary படிப்புகளைக் கற்க வேண்டியது அவசியம் என்றவர், மதம், மொழி, இனத்தை சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரித்து ஆதிக்கம் செலுத்திவி
Image
  NEET results will be announced today : இன்று வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள். மேலும்  மதிப்பெண்களின் செல்லுபடியாகும் காலம் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு தேசிய அளவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் (medical courses including MBBS, BDS)உள்ளிட்ட இளநிலை மருத்துவப் கல்விகளுக்கு தேசிய தகுதியை காண்பதற்கான நுழைவு தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைகள் நடைபெறுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது. அதன்படி நிகழாண்டு நீட் தேர்வு தேசிய அளவில் 497 நகரங்களில் 3,570 மையங்களில் நடைபெற்றது (The NEET exam was held at 3,570 centers in 497 cities nationally). இந்த தேர்வை 17.78 லட்சம் பேர் மாணவர்கள் பங்கு கொண்டு தேர்வை எழுதினர். தமிழகத்தில் மட்டும் 1.16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வில் கலந்து கொண்டனர். விடைக் குறிப்பு தேர்வர்களின் ஓஎம்ஆர் விடைத்தாள்கள் ஆக. 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப் படுகிறது. மாணவர்கள் மதிப்பெண் விவரங்களை http://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறக