25 January 2015

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்தேர்வுமுடிவுகள் அடுத்த மாதம் வெளியீடு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான எழுத்துத் தேர்வை கடந்த 10 ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இத்தேர்வை எழுதினர்.தேர்வுக்கான சரியான விடையை ஆசிரியர் தேர்வு வாரியம் 2 நாட்களுக்கு முன் வெளியிட்டது.

இந்நிலையில் விடைகள் பற்றிய ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் வருகிற 29ந் தேக்குள் அதற்கான ஆதாரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஆட்சேபணை விண்ணப்பங்களையும் இறுதி நாளன்று பெற்ற பிறகு டிஆர்பி அவர்றை பரிசீலனை செய்யும்.அதன்பிறகு இறுதிவிடைகள் இணையதளத்தில் வெளியிடப்படும்.விடைத்தாட்களை சரி செய்வதில் ஏற்படும் பிழைகளைத் தடுக்க ஒவ்வொரு விடைத்தாளும் 2 முறை ஸ்கேன் செய்யப்படும் என்றும் அதன் பிறகு தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்றும் டிஆர்பி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டி.இ.டி., சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்: தேர்வர்கள் கலக்கம்

ஆசிரியர் தகுதி தேர்வான டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற பலருக்கு, தேர்ச்சிசான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இணையதளத்தில்: இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு, 2013ல் நடந்தது. இதில், '90 மதிப்பெண்ணுக்கு மேல், 60 சதவீதம் பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என அறிவிக்கப்பட்டது. இதன்பின், 82 மதிப்பெண் சலுகை மதிப்பெண்ணாக அறிவிக்கப்பட்டு, அவர்களும் தேர்ச்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்தனர். பெரும்பாலும் தனியார் பிரவுசிங் சென்டர்களுக்கு சென்று சான்றிதழ் பதிவிறக்கம் செய்தனர். அப்போது, இணையதளத்தில் தகவல்களை பதிவு செய்யும்போது ஏற்பட்ட ஒருசில தவறுகளால், பலருக்கு சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய முடியாமல் போனது.

இதனால், டி.இ.டி., தேர்வு மதிப்பெண்ணை காட்டி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, பலர் பணியில் சேர்ந்தனர். அவர்களுக்கு தற்போது டி.இ.டி., தேர்ச்சி சான்றை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி.,க்கு பல புகார்கள் அனுப்பப்பட்டன.

மீண்டும் வாய்ப்பு:
இதன்பின் சான்றிதழ் பெறாதவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம், ஜன., 19 முதல், பிப்., 14 வரை அச்சடிக்கப்பட்ட சான்றிதழ் வழங்க, டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது. ஆனால், அதிலும் பலருக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை என புகார் வந்துள்ளது.

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது: டி.ஆர்.பி., இணையதளத்தில், ஒரு முறை மட்டுமே சான்றிதழை பதிவிறக்கம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்ற முறை பலர், தனியார் பிரவுசிங் சென்டர்களுக்கு சென்று பதிவிறக்கம் செய்தனர். தற்போது, டி.ஆர்.பி., அனுப்பிய சான்றிதழ்களில் அவர்களுக்கான சான்றிதழ் வரவில்லை. இணையதளத்தில் அவர்கள் விண்ணப்பித்தால், 'பதிவிறக்கம் செய்யப்பட்டது' என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து டி.ஆர்.பி., கவனத்திற்கு கொண்டு செல்வோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அச்சடிக்கப்பட்ட சான்றிதழ்:
பாதிக்கப்பட்ட தேர்வர் ஒருவர் கூறுகையில், 'டி.ஆர்.பி.,யின் ஒரு முறை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் என்ற திட்டத்தால் தான், இந்த குழப்பம். 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் சான்று வழங்குவதுபோல் அச்சடிக்கப்பட்ட சான்றிதழ்களை அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தால் குழப்பம் ஏற்படாது' என்றார்.

  தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு ...