29 November 2022

 கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பாதிக்கபட்ட பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கை



NCTE விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்த முதல்வர் ஸ்டாலின் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு விடியல் தருவாரா?NCTE norms, நிலுவையில் உள்ள 9176 காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின்  வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட  எங்களுக்கு வேலை கொடுப்பாரா? கலைஞர் போட்ட கையெழுத்துக்கு முதல்வர் ஸ்டாலின் உயிர் கொடுப்பாரா?


2010 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து நிலுவையில் உள்ள 9176 காலி பணியிடம் நிரப்பும் நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. 2011 தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது..அதிமுக கொள்கை முடிவு தேர்வு தான் வைப்பார்கள் நிலுவையில் உள்ள காலிப்பணியிடம் நிரப்ப வேண்டும் என்று கேட்ட போது கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு என்ற ஒரே காரணத்திற்காக உங்களுக்கு வேலை கொடுக்க முடியாது என்று கூறினார்கள்.



07-11-2011 அன்று அதிமுக கொள்கை முடிவு அறிவித்தார்கள் அதில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் போட்டி தேர்வு மூலம் நியமனம் என்று அறிவித்தார்கள்.


கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து காத்து இருந்த ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் இந்த மகிழ்ச்சி ஒரு வாரம் கூட நீடிக்கவில்லை 15-11-2011 அன்று ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்வு வெற்றி பெற்றால் ஆசிரியர் பணி என்று அறிவித்தார்கள்.



NCTE clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு எழுத வேண்டாம் குறிப்பிட்டு இருந்தார்கள்.



NCTE clause v, நிலுவையில் உள்ள 9176 காலி பணியிடம் இந்த இரண்டு கோரிக்கை வைத்து அதிமுக அரசிடம் வேலை கொடுக்க வேண்டும் என்று கேட்டோம்.கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த என்ற ஒரே காரணத்திற்காக உங்களுக்கு வேலை கொடுக்க முடியாது என்று கூறி விட்டார்கள்.


அதிமுக அரசை எதிர்த்து 94 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு கொண்டு வந்தோம்.


அமர்வு நீதிமன்ற நீதிபதி வேணுகோபால் மற்றும் எலிப் தர்ம ராவ் அடங்கிய அமர்வுகள் NCTE clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு எழுத வேண்டாம் என்ற விதியை பயன்படுத்தி பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.


இந்த வரலாற்று மிக்க தீர்ப்பை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்  பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார்.


கலைஞர் கூறினால் நாங்கள் வேலை கொடுக்க வேண்டுமா என்ன நாங்கள் உச்ச நீதிமன்றம் மேல்முறையீடு செய்ய போகிறோம் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த என்ற ஒரே காரணத்திற்காக உங்களுக்கு வேலை கொடுக்க.முடியாது என்று மீண்டும் திட்டவட்டமாக கூறினார்கள்.



உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை  நடைபெற்று தீர்ப்பு வழங்கினார்கள் அதில் NCTE clasue v விதிப்படி டெட் பொருந்தாது என்று உறுதிபடுத்தி 5 கேள்விகள் எழுப்பி சென்னை உயர்நீதி மன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் 5 கேள்விகள் ஆசிரியர்களுக்கு சாதகமாக இருந்தால் வழக்கு கொடுத்த தேதியில் இருந்து ஊதியம் மற்றும் சீனியாரிட்டி வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.



மீண்டும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வேணுகோபால் மற்றும் சொக்கலிங்கம் அமர்வு முன்பு வழக்கு விசாரணை நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டிய போது வழக்கு பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு சாதகமாக இருப்பதை உணர்ந்த அதிமுக அரசு வேணுகோபால் அவர்கள் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியவர் இவரை மாற்ற வேண்டும் கூறி நீதிபதி மாற்றினார்கள். மீண்டும் வழக்கு சிவஞானம் மற்றும் சொக்கலிங்கம் முன்பு வழக்கு நடைபெற்று வந்தது. நீதிபதி சிவஞானம் அவர்கள் NCTE clauseV, நிலுவையில் உள்ள காலி பணியிடம், உச்ச நீதிமன்றம் எழுப்பிய 5 கேள்விகள் எதையும் விசாரிக்காமல் வேண்டும் என்றே அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினார்.


94 பேருக்கு வேலை கொடுத்தால் பரவா இல்லை ஊதியம் மற்றும் சீனியாரிட்டி கூட கொடுக்க வேண்டும் இதை பின்பற்றி அனைவருக்கும் கொடுக்க நேரிடும் இதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் தவறான தீர்ப்பு கொடுத்து உள்ளார்.


நீதிபதி சிவஞானம் அவர்கள் தவறான தீர்ப்பு எதிர்த்து உச்ச நீதிமன்றதில் மேல்முறையீடு செய்ய எங்களிடம் போதிய நிதி இல்லை அதனால் சென்னை உயர்நீதி மன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து உள்ளோம்.



வழக்கு கொண்டு வர நிதி இல்லை நிதி கிடைத்ததும் கொண்டு வரும் நேரத்தில் கொரோனா கொரோனா காலம் முடிந்து வழக்கு கொண்டு வரும் நேரத்தில் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தது. 


அதிமுக ஆட்சியில் 10 வருடம் சட்ட போராட்டம் மூலம் போராடி கொண்டு இருந்த எங்களுக்கு நிச்சயம் முதல்வர் ஸ்டாலின் விடியல் கொடுப்பார் என்று நாங்கள் வழக்கு கொண்டு வர வில்லை.


விடியல் அரசிடம் அமைதியான முறையில் கோரிக்கை வைத்து அதிமுக ஆட்சியில் நாங்கள் பட்ட அவலநிலை கூறினால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று உறுதியாக இருந்தோம்.



,திமுக MLA, அமைச்சர், கூட்டணி கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சி MLA மூலம் எங்கள் கோரிக்கை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம்.ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த அறிவிப்பு வர வில்லை.


திமுக MLA சரவணன், அண்ணாதுரை மற்றும் கூட்டணி கட்சி MLA அப்துல் சமது சட்டமன்றத்தில் வேலை கொடுக்க வேண்டும் என்று உரை ஆற்றியும் திமுக அரசு இதுவரை எந்த  அறிவிப்பும் வெளியிட வில்லை. 


NCTE clause v அதிமுக ஆட்சியில் அறிக்கை வெளியிட்டு நடைமுறை படுத்த வில்லை அதற்கு காரணம் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்கள் வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை படுத்த வில்லை.


10 ஆண்டு அதிமுக நடைமுறை படுத்தாமல் இருந்த NCTE norms திமுக அரசு 31-10-2022 அன்று NCTE clause V நடைமுறை படுத்தி உள்ளார்கள்.



இது எங்களுக்கு பொருந்தும் 2013 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் NCTE clasue v பின்பற்றி வேலை கொடுக்க வேண்டும் என்று கூறிய உத்தரவு எங்களுக்கு 100 சதவீதம் பொருந்தும்.


நாங்கள் NCTE clause V, நிலுவையில் உள்ள காலி பணியிடம் நிரப்ப வேண்டும் என்று தான் கோரிக்கை விடுத்து உள்ளோம்.


2010 ஆம் ஆண்டு  11000 சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து காத்து இருந்தார்கள் ஆனால் தற்போது நிலவர படி 1000 ஆசிரியர்கள் கூட இல்லை காரணம் ஓய்வு வயது கடந்தவர்கள்,வேறு அரசு பணிக்கு சென்றவர்கள் மரணம் அடைந்தவர்கள் போக தற்போது 1500 குறைவாக தான் இருப்போம.



முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் 10 வருடம் பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு NCTE clause V விதிப்படி வேலை வழங்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.




















 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் பணி: எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!



கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ( kendra vidhyalaya sangathan) காலியாக உள்ள 6,414 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் (Primary teachers) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்:


பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. எனினும் காலி இடங்கள் இருந்தால், பொதுத் தரப்பினருக்கும் இடம் வழங்கப்படுகிறது. 


நாடு முழுவதும் மொத்தம் 1,245 பள்ளிகளும், வெளிநாட்டில் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன. தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இதில் 14.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலமும் இந்தியும் உள்ளது. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், மிகவும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. 


இதற்கு விண்ணப்பிக்க www.kvsangathan.nic.in என்ற லிங்க் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 


கல்வித் தகுதி:


பி.எட். படிப்பு முடித்திருக்க வேண்டும். (12th Pass + D.Ed/ JBT/ B.Ed + CTET)


இதற்கு விண்ணப்பிக்க www.kvsangathan.nic.in என்ற லிங்க் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 


வயது வரம்பு:


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம், விண்ணப்பக் கட்டணம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு www.kvsangathan.nic.in வலைதள பக்கத்தில் உள்ள வேலைவாய்ப்பு பகுதியினைக் காணலாம்.


தேர்ந்தெடுக்கப்படும் முறை:


இந்த பணிக்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். கணினி வழி ஆன்லைன் தேர்வு நடைபெறும்.


அறிவிப்பின் விவரம் அறிய-- https://kvsangathan.nic.in/employment-notice


இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனின் வரும் டிசம்பர்,5 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆன்லைனின் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.12.2022 (இரவு 11.59 மணி வரை)



 குரூப் 1 தேர்வுக்கான விடைகள் வெளியீடு... TNPSC அதிகாரபூர்வ அறிவிப்பு.!!!



TNPSC குரூப் 1 பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நவம்பர் 19-ந் தேதி நடைபெற்றது.


3,22,414 பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில், 1,90,957 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 1,31,457 பேர் தேர்வு எழுதவில்லை. இந்நிலையில் இந்த தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைகளை TNPSC வெளியிட்டுள்ளது. இதில் 4 கேள்விக்கான விடைகள் தவறாக தரப்பட்டுள்ளதாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.

 CTET 2022: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம்; டிச.3 வரை திருத்தங்கள் செய்யலாம்; எப்படி?- விவரம்




சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் மீது டிசம்பர் 3 வரை திருத்தங்கள் செய்யலாம் என்று சிபிஎஸ்இ சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.


அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.


இதற்கிடையே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. அந்நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு 2011-ல் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும்.


இதற்கிடையில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள்‌ இணையதளம்‌ வாயிலாக ஏப்ரல் 26ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு தாள் ‌1-க்கு 2,30,878 பேரும்‌ மற்றும்‌ தாள் 2-க்கு 4,01,886 பேரும்‌ என

மொத்தமாக 6,32764 பேர் விண்ணப்பித்தனர்‌.


அக்டோபரில் முதல் தாள்


தாள் 1-ற்கான தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நிர்வாகக் காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தத் தேர்வு செப்டம்பர் 10 முதல்‌ 15 வரை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


அதையடுத்து ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்‌ 1-ற்கான கணினி வழித்‌ தேர்வு (Computer Based Examination) திட்டமிட்டபடி கடந்த 14.10.2022 முதல்‌19.10.2022 வரையிலும்‌ இருவேளைகளில்‌ நடைபெற்றது. கணினி வழியில் நடைபெற்ற தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதினர். இவர்களுக்கான விடைக் குறிப்புகள் அக்டோபர் 29ஆம் தேதி வெளியாகின.


டிசம்பரில் 2 ஆவது தாள்


இதற்கிடையே 2-ம் தாள் தேர்வு டிசம்பர் 2022 மற்றும் ஜனவரி 2023-ல் நடைபெற உள்ளது. இதை எழுத 4 லட்சத்து 1,886 பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வர்கள் அக்டோபர் 31 முதல் நவம்பர் 24ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். நவம்பர் 25ஆம் தேதி கட்டணம் செலுத்தக் கடைசித் தேதியாக இருந்தது. 


தேர்வர்கள் ஏதேனும் ஒரு தாளுக்கு ரூ.1000 தொகையும் இரண்டு தாள்களுக்கும் ரூ.1,200 தொகையும் விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்தினர். இதுவே எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கும் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கும் முறையே ரூ.500 மற்றும் ரூ.600 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. 


தேர்வு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை முதல் ஷிஃப்ட்டும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை 2ஆவது ஷிஃப்ட்டும் நடைபெறுகிறது. மொத்தம் 2.30 மணி நேரத்துக்கு, 150 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. 


ஆங்கிலம், தமிழ், இந்தி உள்ளிட்ட 20 மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஏற்கெனவே விண்ணப்பித்த தேர்வர்கள் திருத்தங்களை டிசம்பர் 3ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருத்தங்கள் மேற்கொள்வது எப்படி?


தேர்வர்கள் https://examinationservices.nic.in/ctet2022/root/home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFfEytN2I3LFrLvNrMJcZJNmvOmo19UVefJ33W3y6Mh+V என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


அதில் தேர்வர்கள் தங்களின் விண்ணப்ப எண் (Application No), கடவுச் சொல் (Password), பாதுகாப்புக் குறியீட்டு எண் (Security Pin) ஆகியவற்றை பதிவு செய்யவும். அதன்மூலம் தேர்வர்கள் உள்ளே நுழைந்து திருத்தங்களை மேற்கொள்ளலாம். 


  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...