Posts

Showing posts from June 7, 2013
ஆங்கில வழிக் கல்விக்கு மாறிய1.12 லட்சம் தமிழ் மாணவர்கள் கல்வித்துறை அதிர்ச்சி உத்தமபாளையம்:ஆங்கிலவழிக் கல்வி மோகத்தால், ஆண்டுதோறும் தமிழ்வழிக் கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் நடப்பு கல்வியாண்டில், தமிழ் வழியில் சேர வேண்டிய ஒரு லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள் ஆங்கிலக் கல்விக்கு சென்றுள்ளது, கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. சர்வசிக்ஷா அபியான் திட்டத்தில், பள்ளியில் சேராக் குழந்தைகள். இடைநின்ற மாணவர்கள், இடம் பெயர்ந்த மாணவர்கள், வயது வந்தும் பள்ளியில் சேரா குழந்தைகள் மற்றும் பள்ளி வயது வந்த மாற்றுத்திறனாளி குழந்தைகள், குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படும். அங்கன்வாடி, தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் சார்ந்த, மக்கள் தொகை கணக்கெடுப்பு பகுதியில், 14 வயது வரையிலான மாணவர்களின் ஒட்டுமொத்த விபரங்களும் சேகரிக்கப்படும். இந்த கணக்கெடுப்பு மே இறுதியுடன் நிறைவடைந்துள்ளது. இக்கணக்கெடுப்பின்படி, நடப்பு கல்வியாண்டில் (2013-14) தமிழ்வழிக் கல்வியில் சேர வேண்டிய 1லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள், ஆங்கில வழி
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு கொள்கையைப் பின்பற்ற வேண்டும்: கருணாநிதி- Dinamani ஆசிரியர் தகுதித் தேர்வில் இந்த முறையாவது இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்றுதிமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஆசிரியர் தகுதித் தேர்வு மூன்றாம் முறையாக நடத்தப்பட உள்ளது. 7 லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் தேர்வு எழுதுவர் என்று எதிர்பார்ப்பதால் 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடித்து விநியோகிக்கப் போவதாகத் தெரிகிறது. தகுதித் தேர்வுக்கு மொத்த மதிப்பெண்150 ஆகும். தேர்ச்சி பெறுவதற்கு 90 மதிப்பெண்கள் பெற வேண்டும். அதாவது 60 சதவீதம். ஏற்கெனவே இருமுறை நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால், அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், குறைந்தபட்சம் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்காவது சலுகை வழங்கப்படும் என்று அப்போது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.தேர்ச்சி பெற அனைத்துப் பிரிவினருமே90 மதிப்பெண்கள் ப
இடஒதுக்கீடு கொள்கைக்கு முக்கியத்துவம் தர ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண்களில் மாற்றம் தேவை சென்னை : திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி, பதில்கள் அறிக்கை: ஆகஸ்ட் 17, 18 தேதிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம்அறிவித்துள்ளதே? 3ம் முறையாக இந்த தேர்வு நடத்தப்படவுள்ளது. இதில் 7 லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் தேர்வு எழுதுவர் என்று எதிர்பார்ப்பதால், 15 லட்சம் விண்ணப்பங்களை அச்சடித்து விநியோகிக்க போவதாகவும் தெரிகிறது. அனைத்து வகை பள்ளிகளிலும் முதலாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்பது, இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின்படியான விதியாகும். அரசு பள்ளிகளில் சுமார் 23,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காககடந்த ஆண்டு, ஜூலை மற்றும் அக்டோபரில் ஆசிரியர் தகுதித் தேர்வை 2 முறை தேர்வு வாரியம் நடத்தியது. முதலில் நடைபெற்ற தேர்வில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால் அக்டோபரில் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது தேர்வ