Posts

Showing posts from April 29, 2022
Image
  TNPSC தேர்வு வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை.. குரூப்-4 தேர்வுக்கு 21.83 லட்சம் பேர் விண்ணப்பம்..!!!! தமிழகத்தில் குரூப்-4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட 7,382 பணியிடங்களுக்கு 21.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,382 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு வருகின்ற ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை அளிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. அதன்படி அதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் குரூப்-4 தேர்வுக்கு 21,83,225 பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த வருடம் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதிகமாக விண்ணப்பித்துள்ளதாகவும், ஒரு பணியிடத்திற்கு 300 பேர் போட்டியிடுவதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் படித்த இளைஞர்கள் அதிக அளவில் வ
Image
  தமிழ்நாட்டில் 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி இறுதித்தேர்வு நடைபெறும்! பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாட்டில் 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி இறுதித்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பாடங்கள் குறைக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளி இறுதி தேர்வுகிடையாது, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டிலும் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி இறுதி தேர்வு இருக்காது என தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி இறுதித்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அறிவித்துள்ளது. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் என பரவும் தகவல் தவறானது என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, மே 6 முதல் மே 13-ஆம் தேதிக்குள் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி இறுதித் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்க
Image
  குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பம்: ஒரே நாளில் 4 லட்சம் பேர் பதிவு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப் 4 தேர்வுக்கு சுமாா் 21 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனா். இது கடந்த காலங்களைவிட மிக அதிகம் என்று தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. கடைசி நாளான வியாழக்கிழமை மட்டும் சுமாா் 4 லட்சம் பேர் வரையில் விண்ணப்பம் செய்துள்ளனா். தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் குரூப் 4 தோவு அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம நிா்வாக அலுவலா் உள்பட 7,100 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. புதன்கிழமை நிலவரப்படி 17 லட்சம் போ விண்ணப்பத்திருந்தனா். கடைசி நாளான வியாழக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி 20 லட்சத்து 53 ஆயிரத்து 837 போ விண்ணப்பம் செய்திருந்தனா். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என்பதால், இதன் எண்ணிக்கை 21 லட்சமாக உயரும் என தோவாணைய அதிகாரிகள் தெரிவித்தனா். விண்ணப்பதாரா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை விவரங்கள் வெள்ளிக்கிழமை தெரியவரும் என தோவாணைய வட்டாரங்கள் தெர