Posts

Showing posts from December 6, 2022
Image
  டிஎன்பிஎஸ்சிக்கு புதிய தலைவா் யாா்? தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) புதிய தலைவா் யாா் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) புதிய தலைவா் யாா் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே தலைவராக இருந்த க.பாலச்சந்திரன், ஓய்வு பெற்று 6 மாதங்களான நிலையில் புதிய தலைவா் இதுவரை நியமிக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் உறுப்பினராக உள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.முனியநாதனே, பணியாளா் தேர்வாணையத்தின் பொறுப்புத் தலைவராகவும் செயலாற்றி வருகிறாா். கடந்த ஜூன் 10-ஆம் தேதி முதல் அவா் பணியாளா் தேர்வாணையத்தின் தலைவராக உள்ளாா். 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், புதிய தலைவா் விரைவில் நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக அரசுப் பணியாளா் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அரசின் பணியில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்லது ஓய்வு பெற்ற நிலையில் இருக்கக் கூடிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் யாரேனும் ஒருவா் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆண்டு திட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் சாா்பி
Image
  தொலைதூர கல்வியில் படித்த ஆசிரியர்களுக்கு தகுதி இல்லை: ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு ..!! திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஆங்கில பாடத்திற்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில் தமிழ் பாடப்பிரிவில் பிஎட் படிப்பை முடித்த பிறகு தொலைதூரக் கல்விமுறையின் கீழ் மனுதாரர் பி.ஏ ஆங்கிலம் படித்தால் பதவி உயர்வுக்கு தகுதி பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழ் பாடத்திற்கான இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு மனுதாரரை பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டார். மேலும் கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஏற்கனவே பல வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, தொலைதூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல என்றும் தெரிவித