17 February 2022

 TNPSC Group 2 தேர்வுக்கான தகுதிகள் என்ன, என்னென்ன பதவிகளில் வேலை கிடைக்கும்?





தமிழகத்தில் குரூப் 2 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிக்கை இம்மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுக்கு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்கள் உள்ளன.


தகுதிகள்


குரூப் 2 தேவை எழுத விரும்புவோர், ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம்.

முதல்நிலை தேர்வு, இறுதித் தேர்வு மற்றும நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


தேர்வில் பங்கேற்பதற்கான குறைந்தபட்ச வயது 18. எஸ்.சி., எஸ்.டி., அருந்ததியர்கள், மிகவும் பிறப்டுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் பிற்படுத்தப்பட்டோர், அனைத்து சமூகத்தை சேர்ந்த விதவைகள் ஆகியோர் தேர்வெழுத உச்சபட்ச வயது வரம்பு கிடையாது. மற்ற பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பு 30-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


எழுத்து தேர்வுடன், நேர்காணல் முறையில் நிரப்பப்படும் பணியிடங்கள் :


1. துணை வணிக வரி அதிகாரி


2. நகராட்சி ஆணையர், Grade-II


3. ஜூனியர் வேலைவாய்ப்பு அலுவலர்


4. ஜூனியர் வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத் திறனாளிகள்)


5 துணைப் பதிவாளர், Grade-II


6 தொழிலாளர் உதவி ஆய்வாளர்


7 உதவி பிரிவு அலுவலர் (சட்டம் மற்றும் நிதித்துறை தவிர்த்து)


8 உதவி பிரிவு அலுவலர் (சட்டத்துறை)


9 உதவிப் பிரிவு அலுவலர் (நிதித் துறை)


10 உதவிப் பிரிவு அலுவலர் TNPSC


11 உதவிப் பிரிவு அலுவலர் மற்றும் புரோகிராமர்


12 உதவிப் பிரிவு அலுவலர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை

செயலக சேவை


13 நன்னடத்தை அதிகாரி, சமூக பாதுகாப்பு


14 நன்னடத்தை அதிகாரி, சிறைத்துறை


15 தொழில் கூட்டுறவு அலுவலர், தொழில் ஆணையர் மற்றும்

தொழில் மற்றும் வர்த்தக இயக்குனர்


16 பெண்கள் நல அலுவலர், சமூக பாதுகாப்புத் துறை


17 துணை ஆய்வாளர் சர்வே இயக்குனர் மற்றும்

குடியேற்றங்கள் பிரிவு


18 கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர்


19 வரவேற்பாளர், தமிழகம் விருந்தினர் மாளிகை, உதகமண்டலம்


20 தொழில்துறை கூட்டுறவு தொழில்துறை மேற்பார்வையாளர்

கமிஷனர் மற்றும் தொழில் மற்றும் வர்த்தக இயக்குனர்

துறை


21 திட்ட உதவியாளர், ஆதி-திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை


22 இந்து சமய தணிக்கை பிரிவில் தணிக்கை ஆய்வாளர் மற்றும்

அறநிலையத்துறை நிர்வாகத் துறை


23 உள்ளூர் நிதி தணிக்கை துறையின் உதவி ஆய்வாளர் மற்றும்

உள் தணிக்கை துறை


24 மேற்பார்வையாளர் / மூத்த எழுத்தர் / தலைமை கணக்காளர் / ஜூனியர் கண்காணிப்பாளர் தமிழ்நாடு வேளாண்மை துறை


25 உதவி ஜெயிலர், சிறைத்துறை


26 வருவாய்த் துறையில் உதவியாளர்


27 நிர்வாக அலுவலர், டவுன் பஞ்சாயத்துகள் துறையில் Grade-II


28 DVAC இல் சிறப்பு உதவியாளர்


29 கைத்தறி ஆய்வாளர்


30 காவல் துறையின் புலனாய்வுப் பிரிவில் சிறப்புப் பிரிவு உதவியாளர்.


31 பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர்

மற்றும் பால்வள மேம்பாடு


32 தொழிலாளர் உதவி ஆய்வாளர்


33 நெடுஞ்சாலைத் துறையில் கணக்குக் கிளையில் தணிக்கை உதவியாளர்.



குரூப் 2-ல் நேர்காணல் இன்றி தேர்வு செய்யப்படும் பணியிடங்கள் :


1. கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறையில் கணக்காளர்


2. இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர்


3. தலைமை செயலகத்தில் உதவியாளர் (சட்டம் மற்றும் நிதித்துறை தவிர்த்து)


4. இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், பொது விநியோக துறை


5 நேர்முக எழுத்தர் (சட்டம் மற்றும் நிதித் துறையைத் தவிர்த்து)

6 நேர்முக எழுத்தர் (சட்டத்துறை)

7 நேர்முக எழுத்தர் (நிதித்துறை)


8 தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் நேர்முக எழுத்தர்


9 நேர்முக எழுத்தர், தமிழ்நாடு மாநில திட்டக்குழு


10 ஸ்டெனோ-டைப்பிஸ்ட், தமிழ்நாடு தலைமை செயலக சேவை

பல்வேறு துறைகளில்


11 . பின்வரும் துறைகளில் உதவியாளர் பணியிடங்கள் : வருவாய் நிர்வாகம், தொழில்துறை ஆணையர் மற்றும்

வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள்,

பதிவு, போக்குவரத்து, சிறை, போலீஸ், உணவு பொது விநியோகம் மற்றும்

நுகர்வோர் பாதுகாப்பு, நில நிர்வாகம், நில சீர்திருத்தங்கள்,

மீன்வளம், பொதுப்பணித்துறை, தொழில்நுட்பக் கல்வி, பிற்படுத்தப்பட்டோர்,

தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, வணிக வரிகள்,

நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்,

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவம், காப்பகங்கள் மற்றும்

வரலாற்று ஆராய்ச்சி, வனம், H.R & C.E., சமூக பாதுகாப்பு,

NCC., கால்நடை பராமரிப்பு & கால்நடை சேவைகள், விஜிலென்ஸ் &

ஊழல் எதிர்ப்பு துறை, தகவல் மற்றும் மக்கள் தொடர்பு,

பள்ளிக் கல்வி.


இதையும் படிங்க - TNPSC Group - II தேர்வு தேதி எப்போது? தேர்வாணையம் அறிவிப்பு


12. தலைமை செயலகத் துறையில் உதவியாளர் (நிதித் துறை)



13 உதவியாளர், TNPSC

14 கடைநிலை பிரிவு எழுத்தர், தலைமை செயலகம்


15 இளநிலை உதவியாளர், திட்டமிடம் துறை

 TNPSC Press Meet | குரூப்- 2, 2ஏ தேர்வுகள்; டிஎன்பிஎஸ்சி நாளை முக்கிய அறிவிப்பு





குரூப்-2, 2ஏ தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்த ஆண்டு 32 வகையான தேர்வுகளை நடத்திட திட்டமிடப்பட்டு வருகிறது. குறிப்பாக குரூப்-1 தேர்வுகளை மே மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. குரூப்-2, குரூப்- 2 ஏ தேர்விற்கான அறிவிப்பு இம்மாதத்திலேயே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. குரூப்- 4 தேர்வு குறித்து மார்ச் மாதத்தில் அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 75 நாட்களில் தேர்வுகள் நடத்தப்படும்.


தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் 100 மதிப்பெண்களுக்குத் தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே அடுத்தகட்ட தேர்விற்கு எடுத்துக்கொள்ளப்படுவர்.


அதேபோல தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் தேர்வுகள் அனைத்தும் இனிவரும் காலங்களில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். அதேபோல பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறும்.


தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தினை விட 30 நிமிடத்திற்கு முன்னதாகவே வருகைபுரிய வேண்டும். அவ்வாறு வருகை தராதவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் இனிவரும் காலங்களில் நடைபெறும் போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை ஆதார் எண்ணைப் பதிவு செய்யாதவர்கள் பிப். 28-ம் தேதிக்குள் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.

இந்நிலையில், 2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன், நாளை (பிப்.18) மதியம் அறிவிக்க உள்ளார்.


குரூப் 2, 2 ஏ - குரூப் 4 - காலிப் பணியிடங்கள் எத்தனை?


குரூப் 2, 2 ஏ தேர்வுக்கான காலி பணியிடங்கள் - 5,831


குரூப் 4 தேர்வில் பழைய காலிப் பணியிடம் 5,255, புதிய காலிப் பணியிடம் 3,000


* காலிப் பணியிடங்கள் மாற்றி அமைக்கப்படவும் வாய்ப்புள்ளது.


தேர்வு முறைகேடுகளைத் தடுக்க அப்ஜெக்டிவ் முறையில் தேர்வுகளை நடத்தவும் டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்பட்டு, விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு.. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு.. பீதியில் வடமாநில பணியாளர்கள்.!!!!!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பி வருகின்றன.


இந்நிலையில் தமிழ்நாடு மின் வாரியத்தில் இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு எழுத்து மற்றும் நேர்முக தேர்வு வாயிலாக சமீபத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும்.


இதனிடையில் மின் வாரிய பணியிடங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களில் வட மாநிலத்தவர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தமிழ் பாடத்தை படிக்காமல் மின் வாரிய பணிக்கு தேர்வானவர்கள், பணியில் சேர்ந்ததில் இருந்து 2 வருடத்திற்குள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த உத்தரவின்படி டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாத பணியாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அதற்கு பணியாளர்கள் அளிக்கும் விளக்கம் சரியானதாக இல்லை என்றால், அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவர் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த அறிவிப்பு தொடர்பாக மின்வாரியத்தில் தமிழ் தெரியாமல் வேலைக்கு சேர்ந்த சிலர், தமிழ் மொழி தேர்வில் இதுவரையிலும் தேர்ச்சி பெறவில்லை என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. இதனால் மின் வாரியத்திற்கு, தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது, கடந்த 2011 முதல் 2020 வரையிலான 10 வருடங்களில், வெளிமாநிலங்களில் இருந்து வாரியத்தில் பணிக்கு சேர்ந்தவர்களில், தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் எத்தனை பேர், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன போன்ற விபரங்களை விரிவான அறிக்கையாக விரைவில் அனுப்ப வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் வடமாநில ஊழியர்கள் வேலை போய்விடுமோ என்று பீதியில் இருக்கின்றனர்.

 12ம் வகுப்பு கணித வினாத்தாள் வெளியான விவகாரம் போளூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு




போளூர்: திருப்புதல் தேர்வு 12ம் வகுப்பு கணித வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக போளூர் ஆக்ஸீலியம் மெட்ரிக் பள்ளி தாளாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.


12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு கடந்த 9ம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் ஒரே மாதிரியாக அச்சிடப்பட்டு பொதுத்தேர்வு போல நடத்தப்படுகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 12ம் வகுப்பு தேர்வுக்கான கணிதப்பாட வினாத்தாள் மற்றும் 10ம் வகுப்பு அறிவியல் பாட வினாத்தாள் ஆகியவை சமூக வலைதளங்களில் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


இது தொடர்பாக, தேர்வுத்துறை இணை இயக்குநர் விசாரித்துள்ளார். அதில், தேர்வுத்தாள் போளூர் ஆக்ஸீலியம் மெட்ரிக் பள்ளியில் இருந்து வெளியானது தெரியவந்தது. அதனை தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று போளூர் மாவட்ட கல்வி அலுவலர் தயாளன், போளூர் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போளூர் போலீசார் ஆக்ஸீலியம் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த தாளாளர் லீமாரோஸ், முதல்வர் கிரேசி, கணித ஆசிரியர் பிரசாத், அலுவலக பணியாளர் ஜெனிபர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...