Posts

Showing posts from February 26, 2022
Image
  பணிநிரந்தரம் செய்யக் கோரி 3 நாட்களாக நடைபெற்றுவந்த பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ்  பணிநிரந்தரம் செய்யக் கோரி 3 நாட்களாக நடைபெற்றுவந்த பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் - அமைச்சர், முதல்வரின் செயலாளர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக நிர்வாகிகள் அறிவிப்பு..
Image
  10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வு கால அட்டவணை தயார்! பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வுக்கான கால அட்டவணை தயாராகியுள்ளது. இந்த அட்டவணையை இன்னும் இரண்டு நாட்களில், அதிகாரப்பூர்வமாக வெளியிட, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும்பிளஸ் 2வுக்கு பொது தேர்வுநடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பிரச்னையால், தேர்வு நடத்தாமல் அனைவருக்கும், 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டது. இந்தாண்டு செப்டம்பர் முதல் அவ்வப்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வை, ஏப்ரல், மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது. இதற்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டவணைக்கு, முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து, பொது தேர்வு காலஅட்டவணையை, பள்ளிக்கல்வி அமைச்சர் நேற்று மாலை வெளியிடுவதாக இருந்தது. பின், அறிவிப்பு திடீரென தள்ளிவைக்கப்பட்டது. இன்னும் இரண்டு நாட்களில் பொது தேர்வு கால அட்டவணையை
Image
  பணிநிரந்தரம் செய்யக் கோரி 2-வது நாளாக பகுதி நேர சிறப்பு ஆசிரியர் காத்திருப்பு போராட்டம்: டிபிஐ வளாகத்திலேயே தரையில் படுத்து உறங்கினர் பணிநிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நேற்று 2-வது நாளாக சென்னை டிபிஐ வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார்கள். வாரத்தில் மூன்று அரை நாட்கள் வீதம் பணியாற்றும் அவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கக்கோரி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார்கள். இந்த நிலையில், பணிநிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி காலவறையற்ற காத்திருப்பு போராட்டத்தை சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) தொடங்கினர். இதில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். பெண்கள் குடும்பத்தினரோடு வந்திருந்தனர். இந்நிலையில் அனைவரு
Image
  டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2A காலிப்பணியிடங்கள்... தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு...!!!!!! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் கொரோனா தொற்று காலத்தில் வெளிவராமல் இருந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் தேர்வு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த அடிப்படையில் குரூப்-2 மற்றும் குரூப் 2A தேர்வுக்களுக்கான அறிவிப்பு பிப்ரவரி 18ம் தேதி வெளியானது. அதன்படி நேற்று (பிப்..23) முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமல்லாமல் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து நேர்முக தேர்வில் 116 காலிப்பணியிடங்களுக்கும், நேர்முக தேர்வு இல்லாத பதவிகளுக்கு 5,413 இடங்களுக்கும் என்று மொத்தம் 5529 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது. இத்தேர்வு எழுத விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எனினும் ஒரு சில பதவிகளுக்கு கூடுதலாக சில தகுதிகள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று காலகட
Image
  நீங்க இன்னும் புதுப்பிக்கலையா?.. மார்ச் 1 கடைசி தேதி.. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!! விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மேகநாதர் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கடந்த 2014 to 20 19 ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் புது புதுப்பிதற்கான மறு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புது'ப்பிக்க விரும்பும் பதிவுதாரர்கள் வருகின்ற மார்ச் 1-ஆம் தேதிக்குள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் இணையதளம் வாயிலாக தங்களது பழைய பதிவினைப் புதுபிக்க விரும்புபவர்கள் https// tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக்கொள்ளலாம். மேலும் இணையத்தளத்தில் பதிவு செய்ய தெரியாதவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது பதிவஞ்சல் வாயிலாகவும் விண்ணப்பித்து புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Image
  பணிசுமை அதிகமாக உள்ளது.. ஆசிரியர் பயிற்றுநர்களின் கோரிக்கை.. சேலத்தில் பரபரப்பு.!! ஆசிரியர் பயிற்றுநர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் 21 வட்டார வள மையங்கள் அமைந்துள்ளன. இந்த மையங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் பயிற்றுநர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகனை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவினை அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நாங்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, அரசு திட்டங்களை செயல்படுத்துவது, பள்ளிக்கு தேவையான உபகரணங்களை அனுப்புவது போன்ற பல்வேறு பணிகளை செய்கிறோம். ஆனால் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு கீழ் வேலை பார்க்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் பணிகளை கவனிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம். இதனையடுத்து பள்ளிக்கு பார்வையிடச் செல்லும் போது பத்து நிமிடங்கள் தாமதமாக சென்றால் விளக்கம் கேட்காமல் மெமோ அளித்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதை