Posts

Showing posts from June 9, 2022
Image
  அரசுப் பள்ளிகளிலேயே எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகள் செயல்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!! அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் 2,381 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்குள் அமைந்த அங்கன்வாடி மையங்கள் பரிசோதனை அடிப்படையில் L.K.G... U.K.G., வகுப்புகளாக மாற்றப்பட்டு, சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்த காரணத்தால், கூடுதல்எண்ணிக்கையில் இருந்த ஆசிரியர்கள் L.K.G., U.K.G., வகுப்புகளைஎடுக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், அரசுப் பள்ளிகளின் தரத்தினை உயர்த்திட, இந்த அரசு கடந்த ஓராண்டாக எடுத்து வரும் பல்வேறு சிறப்பு முயற்சிகளின் காரணமாக, சுமார் 7 இலட்சம் மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் மட்டும் மாநிலம் முழுவதுமுள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் பல்வேறு வகுப்புகளில் புதிதாக சேர்ந்துள்ளனர். இதன் காரணமாக, அரசுப்
Image
  2,423 பணியிடங்கள்.. தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு..!!!! தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மீண்டும் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு கல்வி இயக்குனர் கடிதம் மூலம் அரசிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து வரும் கல்வியாண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் Ist ஷிப்டில் பாடம் எடுக்க, 2,423 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்படுவதாக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் 11 மாதங்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
Image
கருணாநிதியின் வாக்குறுதி' - உதவிப் பேராசிரியர்களாக பணி நியமனம் ஆவார்களா கவுரவ விரிவுரையாளர்கள்? கவுரவ விரிவுரையாளர்கள் உதவிப் பேராசிரியர்களாக நியமனம் செய்யப்படுவர் என 12 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி அளித்த வாக்குறுதியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவாரா?என கவுரவ விரிவுரையாளர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கவுரவ விரி வுரையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் வெ.தங்கராஜ், இந்து தமிழ்திசையிடம் கூறியதாவது: அரசு கலைக் கல்லூரி களில் அதிக அளவில் கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி படிக்க சுழற்சி முறையை 2006-07-ல் திமுக அரசு கொண்டு வந்தது. அப்போது இளங்கலை கற்பிக்க எம்.பில் கல்வித்தகுதியாக யுஜிசி நிர்ணயித்தது. அதன்படி எம்.பில், பி.எச்டி, நெட், ஸ்லெட் கல்வித்தகுதியை பெற்றவர்கள் கவுரவ விரிவுரையாளராக நியமிக்கப்பட்டு இன்றுவரை 13 முதல்16 ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர். தற்போது இரண்டு சுழற்சிகளிலும் 4,084 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்று கின்றனர். இவர்களில் சுமார் 3,000 பேர் பி.எச்டி, நெட், ஸ்லெட் தகுதியை பெற்றுள்ளனர். கருணாநிதி வாக்
Image
  TANCET Result:  இன்று வெளியாகிறது "டான்செட் தேர்வு ரிசல்ட்"-லிங்க் இதோ! தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) முடிவுகள் இன்று வெளியாகிறது. தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில்,எம்பிஏ,எம்சிஏ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆண்டு தோறும் அண்ணா பல்கலைக் கழகத்தால் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) நடத்தப்படுகிறது. அந்தவகையில்,எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற படிப்புகளுக்கான தேர்வு மே 14, 2022 அன்று நடைபெற்றது.இதனையடுத்து,எம்.இ.,எம்.டெக்.,எம்.ஆர்க், எம்.பிளான் உள்ளிட்ட படிப்புகளுக்கான தேர்வு மே 15, 2022 அன்று நடைபெற்றது.இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான்,முதுநிலை படிப்புகளில் சேர முடியும். இந்த நிலையில்,இத்தேர்வினை 36,710 பேர் எழுதிய நிலையில், TANCET தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.மதிப்பெண் சான்றிதழை நாளை முதல் வரும் 30-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image
  10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சுமார் 2 லட்சம் பேர் தோல்வி: அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட கல்வித்துறை  10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் சுமார் 2 லட்சம் மாணவர் தேர்ச்சி அடையவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை ஆந்திரப் பிரதேசக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், 67.26% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் மிகவும் குறைந்த தேர்ச்சி விகிதம் இதுவாகும். முன்னதாக கோவிட்-19 தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால், 2019-20 மற்றும் 2020-21ஆம் கல்வியாண்டுகளில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரை, 796 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை அளித்துள்ள நிலையில், 71 பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தோல்வி அடைந்துள்ளனர். பாடவாரியாகத் தேர்ச்சி அடையாத மாணவர்களின் விவரங்கள் கணிதப் பாடம் - 1,21,488 மாணவர்கள் சமூக அறிவியல் - 1,14,231 மாணவர்கள் பொது அறிவியல் பாடம்- 1,09,647 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். மேலும் பல மாணவர்கள் மொழிப் பாடங்களிலும் தோல்வி அடைந்துள்ளனர். ம