4 December 2014

10ம் வகுப்பு, +2 பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு 

சென்னை: 10ம் வகுப்பு, +2 பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. +2 தேர்வுகள் 2015 மார்ச் 5ம் தேதி தொடங்கும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளன. மார்ச் 5ம் தேதி தொடங்கும் +2 பொதுத் தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரை முடிவடைகிறது. மேலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2015 மார்ச் 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடக்கும் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளன. 

10ம் வகுப்பு தேர்வு அட்டவனை 
* மார்ச் 19 : மொழிப்பாடம் முதல் தாள் 
* மார்ச் 20 : மொழிப்பாடம் இரண்டாம் தாள்
 * மார்ச் 25 : ஆங்கிலம் முதல் தாள்
 * மார்ச் 26 : ஆங்கிலம் இரண்டாம் தாள் 
* மார்ச் 30 : கணிதம் 
* ஏப்ரல் 6 : அறிவியல் 
* ஏப்ரல் 10 : சமூக அறிவியல் 
10ம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கு தொடங்கி பகல் 12 மணிக்கு முடிவடையும் 

12ம் வகுப்பு தேர்வு அட்டவனை 
* மார்ச் 4 : தமிழ் முதல் தாள் 
* மார்ச் 6 : தமிழ் இரண்டாம் தாள்
 * மார்ச் 9 : ஆங்கிலம் முதல் தாள் 
* மார்ச் 10 : ஆங்கிலம் இரண்டாம் தாள் 
* மார்ச் 13 : கலாச்சாரம், தகவல் தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், உயிரிவேதியல்
 * மார்ச் 16 : வணிகவியல், புவியியல், மனை அறிவியல் 
* மார்ச் 18 : கணிதம், விலங்கியல், நுண்ணறி உயிரியல், சத்துணவியல்
 * மார்ச் 23 : வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியியல் * மார்ச் 27 : இயற்பியல் மற்றும் பொருளாதாரம் 
* மார்ச் 31 : வணிக கணிதம், உயிரியல், வரலாறு, தாவரவியல் 
12ம் வகுப்பு தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடையும்.
TET தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் அமைப்பு வெயிட்டேஜ் முறையை நீக்க கோரி தமிழக முதல்வருக்கு அளித்துள்ள மனு

கோரிக்கைகள் பின்வருமாறு 
1)ஆசிரியர் பணிநியமனங்களில் வெய்ட்டேஜ் முறையினை அறவே நீக்கி ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் 
2) 2013-2014ம் கல்வியாண்டின் காலிப்பணியிடங்கள் 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்களை கொண்டே நிரப்பப்பட வேண்டும் 
3)தரம் உயர்த்தப்பட்ட மற்றும் ஆங்கில வழிக்கல்;வி முறைக்கும் நட்ப்பாண்டிலே ஆசிரியர்களை நிரப்ப வேண்டும் 
4)2014-2015 மற்றும் இனிவரும் பணிநியமனங்களில் எங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் 
5)இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் 
 6)2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுபணி கிடைக்கும் வரை பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் 
7)ஆசிரியர் பணிநியமனங்களுக்கான இரண்டாம் தேர்வுப்பட்டியலை விரைந்து வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்படிக்கு ராஜலிங்கம் புளியங்குடி Source www.pallikudam.com
5% மதிப்பெண் தளர்வில் வெற்றிபெற்றவர்கள் கவனத்திற்கு... 

TNTET 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வை மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் அறிவித்தனர். தற்போது மதுரை உயர்நீதிமன்றம் அதற்கான அரசாணை எண்.25 இரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் 5% மதிப்பெண் தளர்வு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது உள்ளது. 

இந்த நிலையில் நாம் இரத்து செய்வதற்கு முன்னர் 5% மதிப்பெண் தளர்வில் வெற்றி பெற்ற பலர் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்துள்ளோம்.

 அதில் பலர் பணி நியமனம் பெற்றுள்ளனர் சிலர் பணி நியமனத்திற்கு காத்திருத்த நேரத்தில் இந்த 5% மதிப்பெண் தளர்வு அரசாணை இரத்து செய்யப்பட்டதால் நாம் சேர இருந்த அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது நம்மை ஆசிரியர்களாக சேர தகுதி இல்லை என கூறி வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பலர் அரசு உதவி பெறும் பள்ளியில் வேலைக்கு சேரும் நிலையில் இருக்கின்றனர் எனவே இந்த அரசாணை இரத்து செய்யப்பட்டாலும் நமக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்துள்ள இந்த சான்றிதழ் செல்லும் என்று அரசு கருணையுடன் அறிவிக்க அரசிடம் கோரிக்கை வைப்போம். 

 அரசு பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுபடுவோம். தற்போது அரசு உதவி பெறும் பள்ளியில் வேலை கிடைக்க இந்த சான்றிதழ் செல்லுபடியாகும் என அரசு அறிவிக்க மனு அளிப்போம்.மேலும் 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றிபெற்ற நம்மையும் சேர்த்து இனி வரும் காலிபணியிடங்கள் நிரப்பவும் கோரிக்கை வைப்போம். 

நண்பர்களே 5% மீண்டும் வேண்டி மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படும் தமிழக அரசுக்கு ஒரு மனுகொடுப்போம் இதற்கு 5% மதிப்பெண் தளர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரையும் மாவட்ட வாரியாக ஒருங்கினைத்து ஒருவர் பொறுப்பேற்று ஒன்று சேர்ந்து மனுக்களில் கையெழுத்துயிட்டு நம்மில் ஒருவர் அந்த மனுவை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் கொடுப்போம் நம்மீது கருணை கொண்ட மக்கள் அரசு கண்டிப்பாக உறுதியாக நமது கோரிக்கையை ஏற்பார்கள் 

எனவே ஒன்று சேருங்கள் நமது உரிமைக்காக அமைதியான முறையில் தமிழக அரசை வலியுறுத்துவோம். இப்படிக்ககு K.ரஞ்சித்குமார் பொள்ளாச்சி கோவை மாவட்டம் 8883161772 தமிழக TNTET 2013 - 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்ற நண்பர்கள் அமைப்பு பொறுப்பாளர் John Shibu Manick நீலகிரி மாவட்டம் 9659340311 நீலகிரி மாவட்ட ஒருங்கினைப்பாளர் மற்ற மாவட்ட நண்பர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்.
குரூப் - 2ஏ, வி.ஏ.ஓ., முடிவுகள் டிச., 15 க்குள் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல் ''டிசம்பர் 15ம் தேதிக்குள், கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) மற்றும் குரூப் - 2ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்,'' என, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்தார். தமிழக வனத்துறையில் காலியாக உள்ள, பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட, இரண்டு உதவி வனப்பாதுகாவலர் பணியிடத்திற்கான தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று முன்தினம் முதல் நடத்துகிறது. நேற்று முன்தினம், அனைவருக்கும் பொதுவான தேர்வு நடத்தப்பட்டது. இதில், 387 பேர் பங்கேற்றனர். சென்னையில், இரண்டு தேர்வு மையங்களில், விருப்ப பாடங்களுக்கான தேர்வு, நேற்று நடந்தது. தேர்வு மையத்தை பார்வையிட்ட, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் கூறியதாவது: விண்ணப்பதாரர்கள், பொதுத்தேர்வு மற்றும் இரண்டு விருப்ப பாடம் எடுத்து, அதிலும் தேர்வு எழுத வேண்டும். விருப்ப பாடத் தேர்வு, வரும், 9ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாள் விருப்ப பாடத்தை, 108 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் முன், பணியிடங்கள் அதிகரிக்கப்படலாம் என்பதால், ஆண்களும் இத்தேர்விற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு முடிந்ததும், தகுதியானவர் பட்டியல் வெளியிடப்படும். ஏற்கனவே முடிந்த, வி.ஏ.ஓ., மற்றும் குரூப் - 2ஏ தேர்வுகளுக்கான முடிவுகள், டிச., 15ம் தேதிக்குள் வெளியிடப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார். குரூப் - 2ஏ தகுதி என்ன? டி.என்.பி.எஸ்.சி., சார்பில் குரூப் - 2 மற்றும் 2ஏ தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் குரூப் - 2ஏ தேர்வு என்பது, நேர்முகத் தேர்வு இல்லாதது. பல்வேறு துறைகளில் உதவியாளர்கள் மற்றும் அக்கவுன்ட்டன்ட்கள் இதன் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இளங்கலை பட்டம் அல்லது பதவிக்கு பொருந்தும் பட்டப்படிப்பு இப்பணிக்கான தகுதி. இறுதியாக, கடந்த ஜூன், 26ம் தேதி இத்தேர்வு நடந்தது.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...