Posts

Showing posts from June 30, 2023
Image
 பி.இ. பகுதி நேர பட்டப்படிப்பு விண்ணப்பம் விநியோகம் ஆரம்பம்: ஜூலை 23 வரை அவகாசம்! பகுதி நேர பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 23ஆம் தேதி வரை கால அவகாசத்தை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பட்டயப் படிப்பினை முடித்தவர்கள் 2023 - 2024 கல்வி ஆண்டிற்கான 4 ஆண்டுகள் பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு ஜூன் 28 ஆம் தேதி முதல் ஜூலை 23ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.  தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 6 அரசு பொறியியல் கல்லுாரிகள் மற்றும் 2 அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 4 ஆண்டு பகுதிநேர பொறியியல் பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.  அவையாவன:  அரசு பொறியியல் கல்லூரி - கோவை, கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி - கோவை, அரசு பொறியியல் கல்லூரி - சேலம், அரசு பொறியியல் கல்லூரி - திருநெல்வேலி, தியாகராஜர் பொறியியல் கல்லூரி - மதுரை, அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி - காரைக்குடி, தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக்கல்லூரி - வேலூர், அரசு பொறியியல் கல்லூரி - பர்கூர் ஆகியனவாகும
Image
  NEET UG 2023 : நீட் மருத்துவ கலந்தாய்வு எப்போது தொடங்கும்? விரைவில் வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு.. நீட் இளங்கலை தேர்வு என்பது எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், நர்சிங் படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாகும். அதன்படி நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் இளநிலை தேர்வு கடந்த மே 7-ம் தேதி நீநடைபெற்றது. சுமார் 20 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். கடந்த 13-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி, இந்த தேர்வில், 11,45,976 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1.44 லட்சம் பேரில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த நிலையில், முதல் 10 இடங்களில் 4 இடங்களை தமிழக மாணவர்கள் பிடித்திருந்தனர். இந்த நிலையில் இளநிலை நீட் தேர்வுக்கான மருத்