25 January 2014

அனைவருக்கும் Teachers Recruitment Newsன் குடியரசு தின விழா வாழ்த்துக்கள்
அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பாடப்பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்ய கோரிக்கை அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மேல்நிலைப் பள்ளியில் படித்த பாடப் பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மேல்நிலைப்பள்ளியில் படித்த பாடப் பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள3ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது. இடைநிலை ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்1-ஐ ஏராளமானோர் எழுதியிருந்தனர். இதில்12,596இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பெற்றிருந்தனர்.3ஆயிரம் பணியிடங்களுக்கு12ஆயிரம் பேர் தேர்வு பெற்றதால்,இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்1தேர்ச்சிப் பெற்று பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர் என்று ஏற்கெனவே கல்வித் துறை அறிவித்திருந்தது. ஆனால் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் பதிவுமூப்புக்கு பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்வது போல,இடைநிலை ஆசிரியர் நியமனமும் இருக்கும் என்று திடீரென அறிவிக்கப்பட்டது. அதாவது பிளஸ்2-வில் எடுத்த மதிப்பெண்,இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு,ஆசிரியர் தகுதிச் தேர்வு முறையே15, 25, 60மதிப்பெண்கள் என வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன. இது தேர்ச்சி சதவீதத்துக்கு ஏற்ப மாறுபடும். இதனால் பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எண்ணியவர்கள் கலக்கமடைந்தனர். சான்றிதழ் சரிபார்க்கும் பணி: இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஜனவரி20-ஆம் தேதி தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்களுக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. வியாழக்கிழமை வரை இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி28-ஆம் தேதி வரை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறும். மேல்நிலை பள்ளி பாடப்பிரிவு அடிப்படை: சான்றிதழ் சரிபார்க்க வந்த இடைநிலை ஆசிரியர்கள் சிலர் கூறியது: இடைநிலை ஆசிரியர் நியமனம்,வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. இதனால் பதிவு மூப்பு அடிப்படையில் காத்திருந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். மேலும் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் இதுவரை மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் படித்த பாடப்பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதாவது மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவு படித்த மாணவர்களுக்கு50சதவீத இடங்கள்,கலைப் பிரிவு மாணவர்களுக்கும்,தொழிற்பிரிவு மாணவர்களுக்கும் தலா25சதவீத இடங்கள் என்ற அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் இருந்தது. இப்போது அந்த முறையும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. தொழில் பிரிவு மாணவர்களுக்கு ஆய்வக தேர்வு மூலமே400மதிப்பெண்கள் கிடைத்துவிடும். இதனால் வெயிட்டேஜ் முறையில் கணக்கிடப்படும்போது தொழில் பிரிவு மாணவர்கள் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர். இதேபோல் கலைப்பிரிவு மாணவர்களும் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர். ஆனால் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவு படித்தவர்கள் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மேல்நிலைப் பள்ளியில் படித்த பாடப்பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
தேர்வு நடந்து ஓராண்டாகியும் குரூப்-2 ரிசல்ட் வரவில்லை- பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு முடிவு வெளியிடப்பட்டு ஓராண்டு ஆகும் நிலையில், நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், தேர்வெழுதிய 8 லட்சம் பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நகராட்சி ஆணையர், சார்-பதிவாளர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப குரூப்-2 தேர்வும், பல்வேறு துறைகளில் உதவியாளர் பணியிடங்களை உள்ளடக்கிய பதவிகளை நிரப்ப குரூப்-2-ஏ தேர்வும் டிஎன்பிஎஸ்சி மூலம் தனித்தனியே நடத்தப்படுகிறது. முன்பு, குரூப்-2 என ஒரே தேர்வாக நடத்தப்பட்டது. தற்போது நேர்காணல் உள்ள பணியிடங்களுக்காக குரூப்-2, நேர்காணல் இல்லாத பணியிடங்களுக்காக குரூப்-2ஏ என பிரித்து நடத்தப்படுகிறது. அந்த வகையில், 1,069 நேர்காணல் பதவிகளையும், 2006 நேர்காணல் அல்லாத பதவிகளையும் நிரப்பும் வகையில் 2012-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி குரூப்-2 தேர்வு நடத்தப்பட்டது. 8 லட்சம் பட்டதாரிகள் தேர்வு எழுதினர். தேர்வர்கள் ஏமாற்றம் இந்நிலையில், நேர்காணல் பதவிகளுக்கு மட்டும் 2013-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. தேர்வில் வெற்றிபெற்றவர்கள் மார்ச்சில் நடந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர். அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டு, தேர்வானவர்கள் கடந்த ஜூன் மாதத்தில் பணியிலும் சேர்ந்துவிட்டனர். நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளுக்கு ஓராண்டாகியும் இன்னும் முடிவு வெளியிடப் படவில்லை. ஒரே நேரத்தில் தேர்வு எழுதியவர்களில் ஒரு சாரார் பணியிலேயே சேர்ந்து விட்ட நிலையில், மற்றொரு பிரிவினருக்கு தேர்வு முடிவே அறிவிக்கப்படாததால், அவர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். காரணம் என்ன? தேர்வு முடிவு வெளியிட்டு அதன்பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி இறுதி தேர்வு பட்டியல் வெளியிட குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஆகும். காலதாமதம் குறித்து டிஎன்பிஎஸ்சி தரப்பில் விசாரித்தபோது, ‘அறிவிக்கப்பட்ட 2006 காலியிடங்களில் 1242 இடங்களுக்கு மட்டும் பணியாளர் குழு (ஸ்டாப் கமிட்டி) முதலில் ஒப்புதல் அளித்தது. தற்போது 1940 இடங்களுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. விரைவில் தேர்வு முடிவு வெளியிடப்படும்’ என்கிறார்கள். ஆர்ப்பாட்டம் இந்நிலையில், தேர்வு முடிவு தாமதம் ஆவதை கண்டித்து, தேர்வு எழுதிய 100 இளைஞர்கள் சென்னை பாரிமுனையில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகம் முன்பு வெள்ளிக் கிழமை காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு 'கட் ஆப் மதிப்பெண்' கணக்கீடு- 'பிளஸ் 2' மதிப்பெண்ணால் பழைய மாணவர்களுக்கு பாதிப்பு இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கான கட் ஆப் மதிப்பெண் கணக்கீட்டின்போது பிளஸ்-2 மார்க் பார்க்கப்படுவதால் பழைய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் கலந்து கொண்டவர்கள் 12,596 பேர் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதியையும், ஏறத்தாழ 17 ஆயிரம் பேர் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதியையும் பெற்றனர். தகுதித்தேர்வு, பிளஸ்-2 தேர்வு, இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் (வெயிட்டேஜ் மார்க் முறை) இடைநிலை ஆசிரியர்களும், தகுதித்தேர்வு, பிளஸ்-2, டிகிரி, பி.எட். மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களும் பணி நியமனத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். 2005-ம் ஆண்டுக்குப் பின்னர் பிளஸ்-2 தேர்வில் ஓரளவு நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்களே எளிதாக 1200-க்கு 950 மார்க், 1,000 மார்க்குக்கு மேல் எடுத்து வருகிறார்கள். மாநில அளவில் ரேங்க் எடுக்கும் மாணவர்கள் 1,200-ஐ நெருங்கி விடுவதுண்டு. எனவே, இப்போதெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 தேர்வில் ஆசிரியர்கள் தாராளமாக மதிப்பெண் வழங்குகிறார்கள் என்று சொல்லப்படுவதை ஒரேயடியாக நிராகரித்துவிட முடியாது. அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் 2005-க்கு முன்னர் பிளஸ்-2 முடித்தவர்களும் கணிசமான அளவு தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு பிளஸ்-2 தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண் 15-க்கு 9 அல்லது 6 என்ற அளவில் கிடைக்கும். அதேநேரத்தில் 2005-க்கு பின்னர் பிளஸ்-2 முடித்தவர்கள் 90 சதவீதம் அல்லது 80 சதவீத மதிப்பெண் பெற்று எளிதாக 15-க்கு 15 அல்லது 12 வாங்கிவிடலாம். இந்த மதிப்பெண் முரண்பாடு காரணமாக பழைய மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கியது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்த ஆசிரியர்களில் 2005-க்கு முன்னர் பிளஸ்-2 முடித்த பலரும் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தனர். மாநிலம் முழுவதும் இதே குற்றச்சாட்டு எழுந்தது. பழைய பிளஸ்-2 மாணவர்களுக்கு பாதிப்பு ஒருபுறம் என்றால் 2008-க்கு பிறகு இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு இதற்கு நேர் எதிரான மற்றொரு பாதிப்பு. காரணம், 2008-2009-ம் கல்வி ஆண்டில் இடைநிலை ஆசிரியர் படிப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பாடத்திட்டம் கடுமையாக இருந்ததால் 2008-க்கு பிறகு தேர்ச்சி விகிதம் மளமளவென குறைந்தது. நன்றாக படிக்கும் மாணவர்களே போராடித் தான் 60 சதவீத மதிப்பெண் எடுத்து வருகின்றனர். தேர்ச்சி பெற்றாலே போதும் என்ற மனோபாவம்தான் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது. ஆனால், 2008-க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் சுமாராக படிப்பவர்களே 70 சதவீத மதிப்பெண் வாங்கிவிடுவார்கள். நேற்று தொடங்கிய சான்றிதழ் சரிபார்ப்பில், கால முரண்பாடு காரணமாக, 70% மதிப்பெண் பெற்றிருந்த பெரும்பாலான பழைய மாணவர்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கான 25-க்கு 25 மார்க் எளிதாக வாங்கினர். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் படித்தவர்களில் பெரும்பாலானோருக்கு 25-க்கு 20 மதிப்பெண்தான் கிடைத்தது. அவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாலும், பிளஸ்-2, இடைநிலை ஆசிரியர் பயிற்சி மதிப்பெண்ணின் ஏற்றத்தாழ்வு மெரிட் பட்டியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினையை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்ல உள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
TRB PG TAMIL, TET CASE UPDATE 24.01.14

முதுகலை தமிழ் ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள வழக்குகள் நீதியரசர் ஆர் சுப்பையா முன்னிலையில் இன்று (24.01.14) பிற்பகல் 2 மணிக்கு மேல்விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

மிக முக்கியமான வழக்கு ஒன்றின் விசாரணை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்ற காரணத்தால் முதுகலை தமிழ் ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள் விசாரணை செய்யப்படவில்லை. 

வரும் திங்களன்று ( 27.01.14 ) சில வழக்குகள் நீதிமன்ற ஆணைக்காகவும். சிலவழக்குகள் புதியதாகவும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.அதன் முடிவு அன்று மாலை தெரியவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு ...