28 February 2022

 பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகாது.. திடீர் அறிவிப்பு.. குழப்பத்தில் மாணவர்கள்...!!!!


தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 1-12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளில் சில மாதங்கள் மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.



இதனிடையில் பெரும்பாலான நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. அதுமட்டுமல்லாமல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி கல்வித்துறை சார்பாக 2 ஆண்டுகளாக எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் பிப் 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.


அதே நேரம் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தள்ளி வைக்கப்பட்ட திருப்புதல் தேர்வானது இம்மாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து நடப்பாண்டு கண்டிப்பாக பொதுதேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று (பிப்..28) மதியம் 1 மணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுவார் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக தகவல் வெளியானது. இந்நிலையில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நாளை(மார்ச் 1) மதியம் 1 மணிக்கு வெளியாகும் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து இதுபோன்ற குழப்பமான தகவலை வெளியிட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.



10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!





கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படாமல் இருந்த நிலையில்,கொரோனா தொற்று குறைந்ததையடுத்து தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் கடந்த பிப்.1-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.


இதனிடையே கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. பொதுத்தரவை சந்திக்கவுள்ள 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவ்வப்போது சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது.


இதற்கிடையில்,10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு நிச்சயம் பொது தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே கூறியிருந்தார்.


இந்நிலையில்,10,11,12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று  வெளியாகும்  என்று அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத்தேர்வுக்கான அட்டவனையை அமைச்சர் வெளியிடவுள்ளார்.



 மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை!: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் தகவல்..!!







டெல்லி: மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.


உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, வேலை இழந்துள்ள மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு உன்னிப்பாக பரிசீலித்து வருவதாக தெரிவித்திருக்கிறது. கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த சமயத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் சுமார் 13,500 பேர் பணி நியமனம் செய்யப்பட்டார்கள்.


அதனை தொடர்ந்து அதிமுக அரசு ஆட்சிக்கு வந்த போது 13,500 மக்கள் நலப்பணியாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வழக்குகள் தொடரப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு பல ஆண்டுகாலமாக நிலுவையில் இருக்கிறது. தற்போது தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சியை கைப்பற்றிய பிறகு இந்த வழக்கின் விசாரணை கடந்த 3 மாதங்களில் 3 முறை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.


இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜேதீப் குப்தா, அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக பரிசீலனை நடந்து வருகிறது. எனவே இந்த வழக்கின் விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தார்.


இந்த கோரிக்கை நீதிபதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வழக்கு 4 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது, மனுதாரர் தரப்பை பொறுத்தவரை, மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக ஆலோசனைகளை செய்து வருவது வரவேற்பதாகவும், அதேசமயம் வழக்கில் விரைந்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

 TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு.. வெளியான மிக முக்கிய அறிவிப்பு...!!!!!






கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2-வது அலை காரணமாக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் நிலுவையில் இருந்தது. இதன் காரணமாக அரசு பணிக்கான காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனிடையில் தேர்வுகளின் மூலமாக ஆசிரியர்கள் தகுதி வாரியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதனால் இதற்கு தகுதி வாரியாக தனித் தனியாக தேர்வுகள் நடத்தப்படுகிறது.


சமீபத்தில் முது கலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வானது பிப்..12- 20-ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. அதாவது மொத்தம் 2,207 காலியிடங்களுக்கு இந்த தேர்வுகள் நடத்தப்பட்டது. அப்போது 190 தேர்வு மையங்களில் இரண்டரை லட்சம் தேர்வர்கள் பங்கேற்றனர். இந்த தேர்வு மையங்கள் அனைத்துமே கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்தது. இதனிடையில் தேர்வுக்கான விதிமுறைகளும் கடுமையாக கடைபிடிப்பட்டது.


இந்த நிலையில் ஆசிரியர் தேர்வுவாரியம் அதிகாரி ஒருவர் அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அதில், தேர்வு விடைகள் ஒரு வாரத்திற்குள் வெளியாகும் எனவும் மதிப்பெண்கள் இணையத்தில் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து இந்த தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் மார்ச் மாதத்திற்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். ஆகவே தேர்வெழுதிய தேர்வர்கள் அனைவரும் தேர்வு வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தை கவனமாக பின் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...