Posts

Showing posts from January 4, 2022
  எதிர்வரும் சட்டமன்றக் கூட்டத்திலாவது ‘TET’தவிர்ப்பு ஆணை கிடைக்குமா? - AIDED ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு ! கடந்த பத்தாண்டுகளாக பரிதவித்து வரும் தங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து விலக்களித்து காக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:  அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் முறையாக பணிநியமனம் பெற்ற சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் மட்டும் கடந்த பத்தாண்டுகளாக தகுதித் தேர்வு (டெட் தேர்வு) நிபந்தனையால் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களைப் போலவே 2012ம் ஆண்டு வரை தகுதித் தேர்வு நிபந்தனையுடன் பணியேற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவால் காப்பாற்றப்பட்டனர். அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு நிபந்தனையை ரத்து செய்து, புத்தாக்கப் பயிற்சி மட்டும் அளிப்பதாக அறிவித்ததால் இவர்களும் காப்பாற்றப்பட்டனர்.  ஆனால், தகுதித் தேர்வி
TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வர்களுக்கு.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு இலவச மாதிரி வினாத்தாள்கள் அனுப்பப்படும் என ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டத்தின்படி 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்வுகளை கருத்தில் கொண்டு இந்த டிஎன்பிஎஸ்சி மாதிரி வினாத்தாள்கள் தயாரி க்கப்பட்டுள்ளன. இந்த மாதிரி வினாத்தாள்களை பெற விரும்புவோர் தங்களது முழு முகவரியுடன் 'TNPSC Model Question Papers-2022' என்று டைப் செய்து, 9843511188 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பிய முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்த அனைவருக்கும் இ-புத்தகமாக 5 மாதிரி வினாத்தாள்கள் அனுப்பப்படும். மேலும் இது குறித்த விவரங்களுக்கு, ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகடமி, 142, ஜிஎஸ்டி ரோடு, குரோம்பேட்டை, சென்னை-44 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7825813573, 8939467323, 9843511188 ஆகிய எண்களிலோ அணுகலாம்