Posts

Showing posts from June 27, 2022
Image
  ஜூன் 27 ஆம் தேதி முதல்.. கல்வி தொலைகாட்சியில்  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!!!! தமிழ்நாடு அரசு, 2022-23ம் கல்வியாண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி, 2025ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் எழுத்தறிவும், எண்ணறிவும் பெறவேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எண்ணும் எழுத்தும் திட்ட மாதிரி வகுப்புகள் கல்வி தொலைக்காட்சியில் ஜூன் 27ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.  இது தொடர்பாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வாரம்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும். மேலும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இத்திட்டம் முறையாக செயல்படுவதை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Image
  இந்தாண்டு தொகுப்பூதியத்தில் 8,000 ஆசிரியர்கள் நியமனம்: அமைச்சர் தகவல் புதுக்கோட்டை: தொகுப்பூதிய திட்டத்தில் இந்த ஆண்டு 8 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என புதுக்கோட்டையில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார். புதுக்கோட்டையில் நேற்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி குரல் எழுப்ப வேண்டிய ஒரு காலம் இந்த காலம். மாநில கல்விக்கொள்கையை ஒரு ஆண்டு காலத்திற்குள் வடிவமைக்க தமிழக முதல்வர் முனைப்போடு செயல்பட்டு வருகிறார். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டு காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும். அதேபோல், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். தற்போது 13,331 ஆசிரியர்களை நியமிக்க அனுமதியை முதல்வரிடம் பெற்றுளோம். நிரந்தர பணி என்பது பெரிய செயல் திட்டம். அதற்கான தேர்வை 5 முதல் 6 லட்சம் பேர் எழுதுவார்கள். இந்த பணிகள் முடிய நான்கு அல்லது ஐந்து மாதம்ள் ஆகும். அதுவரை ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாக கூடாது என்பதால் தொக