Posts

Showing posts from September 23, 2022
Image
  பி.எட்., படிப்பு விண்ணப்பம் - மிக முக்கிய அறிவிப்பு!! 2022-23ஆம் கல்வியாண்டுக்கான பி.எட் பட்டப்படிப்புக்கு இணையவழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் தேதி மற்றும் கலந்தாய்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது நாளை முதல் அக்டோபர் 3 வரை பி.எட் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி தரவரிசைப் பட்டியலும் அக்டோபர் 12இல் கலந்தாய்வு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்வியியல் கல்லூரிகளில் தமிழ்/உருது, கணிதம், ஆங்கிலம், பொருளியல், வணிகம், அரசியலறிவு உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் பிஎட் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.  தொடர்புடைய துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் பிஎட் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். 11 முதல் 19 வரையிலான பாடங்களுக்கு முதுகலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுளளது. நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் பொதுப் பிரிவினர் 50% விழுக்காடு மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர
Image
  அக்.,14ல் துவங்குகிறது டெட் தேர்வு ஆசிரியர் தகுதி தேர்வின்(டெட்) ஒத்திவைக்கப்பட்ட முதல் தாள் தேர்வு அக்.,14 முதல் 20 வரை நடக்கும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இரு வேளைகளிலும் தேர்வு நடக்கும் என அறிவித்துள்ள தேர்வு வாரியம், அனுமதி சீட்டு, தேர்வு கால அட்டவணை அக்., முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் எனக்கூறியுள்ளது.
Image
  விரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்..! தமிழகத்தில்  அண்மையில் நடைபெற்று முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை (பிரிலிம்ஸ்) தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5413 காலிபதவிகளுக்கான குரூப் 2/2ஏ முதல்நிலை தேர்வை கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு (சில பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது) என மூன்று நிலைகளில் தெரிவு முறை நடைபெறுகிறது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 1 பதவிக்கு 10 பேர் என்ற விகிதத்தில் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். குரூப் 2/2ஏ முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுற்று மூன்று மாதங்கள் முடிவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பை தேர்வாணையம் முன்னதாக வெளியிட்டிருந்தது. அதில், நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும், அக்டோபர் மாத இறுதிக்குள் குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வெ
Image
 B.Ed., மாணவர் சேர்க்கை- வழிகாட்டுதல்களை வெளியிட்டது உயர் கல்வித் துறை B.Ed., மாணவர் சேர்க்கை தொடர்பான வழிகாட்டுதல்களை உயர் கல்வித் துறை வெளியிட்டது. அனைத்து வகை கல்லூரிகளிலும் B.Ed., மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு கட்டாயம். இணையதளம் வாயிலாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் B.Ed., சேர விரும்பும் பட்டியலினத்தவர்கள் 40%, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 43%, பிற்படுத்தப்பட்டோர் 45%, பொதுப் பிரிவினர் 50% மதிப்பெண்களை இளங்கலை படிப்புகளில் பெற்றிருக்க வேண்டும். இணையான படிப்புகள் ( Equivalent Degree ) என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் UG அல்லது PG முடித்திருந்தாலும், தொடர்புடைய படிப்புகளில் B.Ed., சேரலாம். அரசு கல்வியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேர http://www.tngasaedu.in இணையதளத்தை அணுகலாம். தனியார் கல்லூரிகளில் சேர அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தை அணுக வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது அசல் சான்றிதழ்களை வைத்திருத்தல் அவசியம் என்று வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
Image
  முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு தற்காலிக பட்டியலுக்கு தடை கோரிய வழக்கில், எந்த ஒரு பணி நியமனமும் இவ்வழக்கின் இறுதி உத்தரவிற்கு கட்டுப்பட்டதாக அமையும். தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. சீர்மரபினர் நலச்சங்கம் தலைவர் ஜெபமணி தாக்கல் செய்த மனு:ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கு 2021 ல் அறிவிப்பு வெளியிட்டது. தேர்வு 2022 பிப்ரவரியில் நடந்தது. தேர்வு முடிவு ஜூலை 4 ல் வெளியானது.மிக பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்தது. அதை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. முதுகலை ஆசிரியர் தேர்வு நடைமுறையில் மிக பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கான உள் ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. இதில் விதிமீறல் உள்ளது. இதனால் மிக பிற்பட்டோரில் இதர பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து தேர்வானோர