Posts

Showing posts from January 19, 2015
COURT TET NEWS :இன்று (19.01.2015) உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி.வழக்குகள் வாதத்திற்கு வருவதில் இழுபறி இன்று ஆசிரியர் பணிநியமனத்தில் பின்பற்றப்படும் வெய்ட்டேஜ் முறையையும், முன் தேதியிட்டு கொடுத்த மதிப்பெண் தளர்வையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணைக்கு வருவதாக இருந்தது.... அனைத்து வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்ட நிலையில் அரசும் தனது எழுத்துப்பூர்வமான பதிலை தெரிவித்து விட்டதாக டெல்லி வழக்கறிஞர்கள் வட்டாரம் தெரிவிக்கின்றன... வழக்கின் இருதரப்பும் இன்று ஆஜாராவதிலும்,இருதரப்பு வழக்குரைஞர்கள் ஆஜராவதிலும் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது ஆகவே இவ்வழக்குகள் இன்று வாதத்திற்கு வருவது பெருத்த தாமதம் ஆகவே வாததிற்கான தேதி மாற்றப்படலாம் அது குறித்து நம் இணையதளத்தில் மாலை விரிவாக காண்லாம்.. நன்றி டெல்லி வழக்கறிஞர் குழு Thanks to www.pallikudam.com
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி: இன்று முதல் சான்றிதழ் விநியோகம் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, இதுவரை சான்றிதழ் பெறாதவர்களுக்கு திங்கள்கிழமை (ஜனவரி 19) முதல் சான்றிதழ் விநியோகம் செய்யப்படுகிறது.. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2012-13ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள், தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதைப் பெரும்பாலான தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொண்டனர்.. இந்நிலையில், சரியான முறையில் பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு விநியோகத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில், 2012-13ஆம் கல்வியாண்டில் 150-க்கு 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்று, இணையதளம் மூலமாக சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாத தேர்வர்கள், உரிய சான்றைக் காட்டி வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் - 1 தேர்வு வயது வரம்பை உயர்த்தணும்:அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை 'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., நடத்தும்,'குரூப் - 1' தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும்' என, தமிழக அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர் உட்பட, உயர்நிலை பணிகளுக்காக, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப் - 1 தேர்வு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி., நடத்தும், குடிமைப் பணிகள் தேர்வுக்கு இணையானது. தற்போது, குரூப் - 1 தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு, 35 ஆக உள்ளது. இந்த ஆண்டிற்கான குரூப் - 1 தேர்வு குறித்த அறிவிப்பு, இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இந்நிலையில், கிராமப்புற இளைஞர்கள் இத்தேர்வில் வெற்றி பெற வசதியாக, வயது வரம்பை உயர்த்த வேண்டும் என, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: குரூப் - 1 தேர்வு, யு.பி.எஸ்.சி., தேர்வு போல ஆண்டுதோறும் நடத்தப்படுவது இல்லை. குரூப் - 1 நிலையில், பெரும்பாலான காலிப் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுவதால், நேரடி நியமனத்திற்கான
உயர் நீதிமன்ற தடை உத்தரவு எதிரொலி: வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு கேள்விக்குறியாகும் பரிதாபம் அரசு பணியில் பதிவுமூப்பு முறை நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை கேள்விக் குறியாகி உள்ளது. தமிழக அரசுப் பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஆட்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள். பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்களை தேர்வுசெய்வதற் காக ஆசிரியர் தேர்வு வாரியம் இயங்குகிறது. இதேபோல், தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவைப்படும் ஊழியர்கள், மாவட்ட அல்லது மாநில அளவிலான வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் தேர்வுசெய்யப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து வரும் காலியிடங்களுக்கு ஏற்ப, ஒரு இடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சார அடிப் படையில் வேலைவாய்ப்பு அலுவலகம், பதிவுதாரர்களை பரிந்துரை செய்யும். அதில் இருந்து தேவைப்படும் பணி யாளர்களை சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வுசெய்துகொள்ளும். இந்நிலையில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை ந