10 June 2014

தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் & பதவி உயர்வு கலந்தாய்வு அரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 

* 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் 
* 16 - மாலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு 
* 17 - காலை: நடுநிலைப் பள்ளி த.ஆ மாறுதல், மாலை: நடுநிலைப் பள்ளி த.ஆ பதவிஉயர்வு
 * 18 - காலை: ப.ஆ பணிநிரவல், மாலை: ப.ஆ மாறுதல் மற்றும் பதவி உயர்வு
 * 19 - ப.ஆ ஒன்றியம் விட்டு மாறுதல் 
* 21 - ப.ஆ மாவட்ட மாறுதல் 
* 23 - காலை: தொடக்கப்பள்ளி த.ஆ மாறுதல், மாலை: தொடக்கப்பள்ளி த.ஆ பதவி உயர்வு 
* 24 - இ.நி.ஆ பணிநிரவல் 
* 25 - இ.நி.ஆ மாறுதல் 
* 26 - இ.நி.ஆ ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் 
* 28 - இ.நி.ஆ மாவட்ட மாறுதல் எனினும் அதிகாரப்பூர்வ அரசாணை சற்று நேரத்தில் வெளியிடப்படும்.
கணினி ஆசிரியர்கள் - பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் ஜூன் 15 முதல் வீடுகளில் உண்ணாவிரதம் 

தமிழகத்தில் பணி நீக்கப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள், மீண்டும் பணி கோரி, ஜூன் 15 முதல் அவரவர் வீடுகளில் குடும்பத்தினருடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். 

முதல்வர் ஜெயலலிதாவிற்கு அவர்கள் எழுதிய கடிததத்தில் கூறியுள்ளதாவது: 1998 முதல் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியராக, மாதம் ரூ.2 ஆயிரம் சம்பளம் பெற்று, வேலைக்கு சேர்ந்தோம். 2007 ல் அரசு கணினி பயிற்றுனராக நியமிக்கப்பட்டோம். 14 ஆண்டுகள் இளமை, அறிவையும் மாணவர்களுக்காக அர்ப்பணித்தோம். தற்போது 45 வயதை கடந்த நிலையில், 2013ல் நீக்கப்பட்டோம். பல கடன்கள் பெற்று, திருப்பி செலுத்த வழியின்றி, குடும்பத்தினர் கஷ்டத்தில் உள்ளனர். 

2007 ல் சிறப்பு ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டது. அதில், 50 சதவீதம் மதிப்பெண் எடுக்க வேண்டும் என, முதலில் கூறப்பட்டு பின்னர், 35 சதவீதம் போதும் என எங்களை பணியில் சேர்த்தனர். பிறகு நடத்தப்பட்ட மறுதேர்வில், 42 கேள்விகள் தவறு என முறையிட்டோம். 

சென்னை ஐ.ஐ.டி., வல்லுனர் குழுவும் வினாத்தாளை ஆய்வு செய்து, '20 கேள்விகள் முற்றிலும் தவறு. ஏழு கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை' என தெரிவித்தது. 27 கேள்விகள் தவறு என்றால் யாரால் தேர்ச்சி பெற முடியும். தவறான கேள்விகள் என கண்டறியவே தேர்வு எழுதிய மூன்று மணி நேரத்தில் பாதி நேரம் செலவழிந்தது. தவறான கேள்விகள் கொடுத்து எங்கள் வாழ்வை சீரழித்து விட்டனர். 

நடந்து முடிந்த முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 21 தவறான கேள்விக்கும், ஆசிரியர் தகுதி தேர்வில் 5 தவறான கேள்விக்கும், பிளஸ் 2 கணித தேர்வில் கூட, 6 தவறான கேள்விகளுக்கும் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது நினைத்தால் கூட எங்களுக்கு வழங்கப்பட்ட தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கலாம். இவ்வாறு கூறியுள்ளனர்.
டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' : டி.ஆர்.பி., கடைசி வாய்ப்பு அறிவிப்பு-தின மலர் நாளேடு

 டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பில், பங்கேற்காமல், 'ஆப்சென்ட்' ஆனவர்கள், கடைசி வாய்ப்பாக, இன்று முதல், 13ம் தேதி வரை நடக்கும் முகாம்களில் கலந்து கொள்ளலாம்' என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அறிவித்து உள்ளது.

அறிவிப்பு விவரம்: கடந்த, 2013ல் நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கும், தேர்ச்சி மதிப்பெண்ணில், தமிழக அரசு அளித்த, 5 சதவீத சலுகையினால், தேர்ச்சி பெற்றவர்களுக்கும், ஏற்கனவே, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு விட்டது. இதில், 1,429 பேர் பங்கேற்கவில்லை. 

இவர்களுக்கு, கடைசி வாய்ப்பாக, இன்று முதல், 13ம் தேதி வரை நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம்களில் பங்கேற்க, வாய்ப்பு வழங்கப்படுகிறது. மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம் ஆகிய, நான்கு மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. 

இது குறித்த விவரங்களை, www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தில் பார்க்கலாம். இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.'இந்த சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தபின், புதிய அரசாணையின்படி, 'ரேங்க்' பட்டியல் தயாரிக்கப்படும்' என, துறை வட்டாரம் தெரிவித்தது. எனவே, இம்மாத இறுதிக்குள், ஆசிரியர் தேர்வு பட்டியலை எதிர்பார்க்கலாம்.
ஆசிரியர் இடமாற்ற வழக்கு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மதிப்பது இல்லை-Dinakaran 

சென்னை : நீதிமன்றத்தை அதிகாரிகள் மதிக்காதது வேதனை அளிக்கிறது என்று உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஆசிரியர் தேர்வு வாரி யம் மூலம் நான் உள்பட சுமார் 100 பேர், ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டோம். 2006ல் தேர்வு செய்யப்பட்ட எங்களுக்கு மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.இந்த 3 மாவட்டங்களில் சுமார் 280 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சிறுபான்மையினர் துறையின் கீழ் இயங்கி வருகிறது. 

இந்த துறையின் கீழ் இயங்கும் பள்ளியில் பணியாற்றும் எங்களை, மற்ற மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். இந்த மனுவை நீதிபதி கிருபாகரன் விசாரித்து, எங்களை வேறு மாவட்ட அரசு பள்ளிக்கு மாற்ற பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டார். 

இந்த உத்தரவை அமல்படுத்தாததால் அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து எங்களுக்கு இடமாற்றம் வழங்க உத்தரவிட்டது. அதன்பிறகும் அதிகாரிகள் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கவில்லை. 

எனவே உயர் நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நீதிபதி கிருபாகரன் விசாரித்து நேற்று பிறப்பித்த உத்தரவு:‘‘உயர் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இப்படி அதிகாரிகள் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால், மக்களிடம் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடும். நீதி நிர்வாகத்தில் குறுக்கீடு செய்வது போலாகிவிடும். அதிகாரிகள் கோர்ட் உத்தரவை மதிப்பது இல்லை. இதை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதி பரிபாலனம் சரியாக செய்ய முடியாது. அதிகாரிகள் செயல் நீதித்துறைக்கு ஆபத்தாகவிடும். 

எனவே வரும் 23ம் தேதி பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வரன் முருகன், பிற்பட்டோர் நலத்துறை ஆணை யர் அசோக் டோங்க்ரே ஐ.ஏ.எஸ் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...