Posts

Showing posts from December 20, 2014
ஆண்டு தோறும் அதிக அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை மனதில் வைத்து ஆண்டு தோறும் அதிகளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மடத்தூர் இந்து நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த சித்ரா, திண்டிவனம் எம்.டி.கிரேனே நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜி.நாகராஜன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதில், ஏப்ரல் 2013-ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒரே ஒரு ஆசிரியர் தகுதித் தேர்வு மட்டும்தான் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் தேவை ஏராளமாக உள்ளன. அதனால், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் படி, முடிந்த அளவு அதிகமான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரினர். இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தமான் முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வ
அரசுப் போக்குவரத்துக் கழக பணி நியமனம்: நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே நிரப்பக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பணி நியமனங்கள் நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே நடைபெறக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. கோவைப் போக்குவரத்துக் கழகம் கடந்த மாதம் 2-ஆம் தேதி ஓட்டுநர், நடத்துநர், இளநிலை பொறியாளர், உதவிப் பொறியாளர் உள்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவது தொடர்பாகவும், பணியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கக் கோரியும் விளம்பரம் வெளியிட்டிருந்தது. இதன்படி, கோவையைச் சேர்ந்த முஜிபூர் ரஹ்மான் இளநிலை பொறியாளர் பணிக்காக விண்ணப்பித்தார். வருகிற 22-ஆம் தேதி நேர்காணலில் பங்கேற்குமாறு இவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, நேர்காணலில் பங்கேற்பதற்கான வயது வரம்பை தளர்த்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ஆம் தேதி உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், அரசுப் போக்க