19 May 2014

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டது: பிரவீண்குமார்

 தமிழகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: "16-வது மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், தமிழகத்தில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக திரும்பப்பெறப் படுகின்றன". இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதித்தேர்வு மதிப்பெண்ணில் சலுகை கிடைக்குமா?முதல்வரின் கருணைக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள்-தி இந்து நாளேடு

 2012ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் சார்பில், கே.புவனேஸ்வரி, எம்.ஏ.ரஷீதா பேகம், டி.சுதாமணி, எம்.சக்தி, எஸ்.அருண்குமார் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு மனு அனுப்பியுள்ளனர். 

 அதில் கூறப்பட்டு இருப்பதாவது: மாணவர்களுக்கு சிறப்பான கல்வி கிடைக்க, தங்களின் பொற்கால ஆட்சியில் தான் ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் அதிகளவில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினர், தகுதி மதிப்பெண்ணான 60 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதம் விலக்கு அளிக்க கோரினர். 

 இதைத் தொடர்ந்து, கடந்த நிதிநிலை அறிக்கை சட்டமன்ற கூட்டத் தொடரின் போது, அவர்களுக்கு 5 சதவிகித இடஒதுக்கீடு அளித்து ஆசிரியர் பணியில் சேர உதவி புரிந்தீர்கள். இதேபோல, 2012ம் ஆண்டு முதன் முதலாக ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் சலுகை அளிக்க வேண்டும். தகுதி தேர்வில் வென்றதற்கான சான்று மட்டுமாவது வழங்கினால், எங்களைப் போன்று நிபந்தனையின் அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்கள், எங்கள் பணியை தடையின்றி தொடர முடியும். 

மேலும், இந்தச் சான்றிதழ் 7 ஆண்டுகள் வரை செல்லத்தக்கது என தேசியக் கல்வி வாரியம் அறிவித்துள்ளதால் வாய்ப்புக் கிடைக்கும்போது, பலரும் ஆசிரியர் வேலையில் சேர முடியும். முதல்வர், எங்களின் கோரிக்கையையும் ஏற்பார் என்று நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பகுதிநேர ஊழியர்கள் பணி நிரந்தரம் கோர உரிமையில்லை: நீதிமன்றம்

பகுதி நேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரும் உரிமை கிடையாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டது. பல்வேறு துறைகளில் பகுதி நேர, தாற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில ஊழியர்களாக நியமிக்கப்பட்ட 50 பேரை நிரந்தரம் செய்து தனி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து, அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது. 

 உத்தரவு விவரம்: தமிழக அரசு துறைகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் முழு நேர தினசரிக்கூலிகளாக 2006 ஜன.1-க்கு முன்பு 10 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களை நிரந்தரம் செய்து தமிழக அரசு 2006-ல் உத்தரவிட்டது. இந்த சலுகையை தங்களுக்கும் வழங்குமாறு பகுதி நேர ஊழியர்கள் 50 பேர் உயர்நீதிமன்றத்தை அணுகினர். 

 அவர்களுக்கு சாதகமாக தனிநீதிபதிகள் உத்தரவுகளை பிறப்பித்து உள்ளனர். அரசு உத்தரவு பகுதி நேர ஊழியர்களுக்கும் பொருந்தும் என உத்தரவுகளை பிறப்பித்தது தவறானது. பள்ளிக்கல்வித்துறையில் பகுதிநேர துப்புறவு ஊழியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பணி நிரந்தரம் கோரிய வழக்கில், கடந்த பிப்.21-ல் உச்சநீதிமன்றம் சட்ட விதியை தெளிவு படுத்தியது. 

பணி நிரந்தர உரிமை கோரும் ஊழியர்கள் பணிநியமன விதிகளின் படி நியமிக்கப்படவில்லை. காலியாக உள்ள பணிகளில், இவ்வாறு பகுதி நேர ஊழியர்களை நியமிப்பது, அப்பணிகளைச் செய்யும் தகுதியுடையவர்களுக்கு அநீதி இழைப்பதாகும். அதே சமயம், பகுதி நேர ஊழியர்களுக்கு நிரந்தரம் செய்ய சட்டபூர்வ உரிமை இல்லாததால், இரக்க உணர்வு அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய முடியாது. 

 எனவே, பணி நிரந்தரம் கோர பகுதிநேர ஊழியர்களுக்கு சட்டபூர்வ உரிமை கிடையாது என உச்சநீதிமன்றம் குறிóப்பிட்டு உள்ளது. இந்த உத்தரவு வெளியாகும் முன்பு, 2013 ஜூன் 27-ல் தமிழகஅரசு மேலும் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதிóல், 2006 ஜன.1-க்கு பிறகு நியமிக்கப்பட்டு10 ஆண்டுகள் பணியாற்றிய முழுநேர ஊழியர்களாக இருந்தாலும் பணி நிரந்தரம் பெற தகுதி கிடையாது என கூறப்பட்டுள்ளது. 

எனவே, பகுதி நேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து தனி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன என உத்தரவில் குறிப்பிடப்பட்டது. இவ்வழக்கில், தனி நீதிபதிகளின் உத்தரவுகள் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களை அரசு தொந்தரவு செய்யாது என்ற அரசு கூடுதல் வழக்குரைஞரின் உறுதிமொழியை நீதிபதிகள் பதிவு செய்தனர்.

  ஒரே நாளில் 1,231 நர்ஸ்கள் பணி நியமனம்.. மேலும், 2417 காலி பணியிடம் நிரப்பப்படும் - முதல்வர் ஸ்டாலின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம்...