20 September 2016

விரிவுரையாளர் நியமனம் - மறுதேர்வு நடத்த முடிவு?

விரிவுரையாளர் தேர்வு வினாத்தாள், 'வாட்ஸ் ஆப்' வலைதளத்தில் வெளியானதால், மறுதேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யில், ஆசிரியர் பயிற்சி வழங்க, 272 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்; இதற்கான எழுத்துத்தேர்வு, 17ல் நடந்தது. 

மதுரையில், ஒரு தேர்வு மையத்தில், ஆங்கில விரிவுரையாளர் பதவிக்கு தேர்வு எழுதிய, தேனியைச் சேர்ந்த பெண், வினாத்தாளை படம் பிடித்து, 'வாட்ஸ் ஆப் குரூப்'பில் அனுப்பியுள்ளார்; தேர்வு கண்காணிப்பாளரால், அவர் பிடிக்கப்பட்டார்.

இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி மற்றும் எஸ்.சி.இ.ஆர்.டி., இணை இயக்குனர் குப்புசாமி ஆகியோர், மற்ற தேர்வு மையங்களில் இதுபோன்ற முறைகேடுகள் நடந்துள்ளதா என, விசாரித்து வருகின்றனர். மற்ற இடங்களிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருந்தால், தேர்வை ரத்து செய்து விட்டு, மறுதேர்வு நடத்த முடிவு செய்துள்ளனர்.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...