Posts

Showing posts from March 11, 2024
Image
  தொடக்கக் கல்வி - ஒரு பாடத்துக்கு ஒரு ஆசிரியர் - அரசு உத்தரவு தமிழகத்தில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அரசு தொடக்க பள்ளிகளிலும்; ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான நடுநிலை பள்ளிகளிலும், 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் தான் நியமிக்கப்படுகின்றனர்.  அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் அதிகபட்சம், 100 மாணவர்கள் மட்டுமே இருப்பதால், ஒன்று அல்லது இரண்டு பாடங்களுக்கு மட்டுமே ஆசிரியர் இருப்பார். மற்ற பாடங்களுக்கு ஆசிரியர் இல்லாததால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் கற்றலில், தொடக்க, நடுநிலை பள்ளிகள் பின்தங்கும் நிலை தொடர்கிறது.  இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இனி வரும் காலங்களில், 100 மாணவர்களுக்கு மேல், ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ஒரு ஆசிரியர் நியமித்து கொள்ளலாம் என, தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு பள்ளிக்கல்வி துறை அனுமதி அளித்துள்ளது. அதனால், வரும் கல்வியாண்டில், பாட வாரியாக ஆசிரியர் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தேவையான பாடங்களுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க, தொடக்க கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.
Image
  ஆசிரியை உமா மகேஸ்வரியை சஸ்பெண்ட் செய்தது ஏன்? வெடித்த சர்ச்சை.. பள்ளி கல்வி இயக்குனர் விளக்கம் செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம், அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் உமா மகேஸ்வரியை தற்காலிக பணி நீக்கம் செய்தது ஏன் என்று பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரனுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி விளக்கம் அளித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் உமா மகேஸ்வரி. இவர் தனது பேஸ்புக் பக்கத்தில், கல்வித்துறையில் நிகழும் குறைகளையும், மாணவர்களுக்கு தேவையான கல்வி முறை பற்றி அடிக்கடி கட்டுரைகள் எழுதி வந்தார். மேலும் கல்வி சூழல்கள் குறித்து புத்தகங்களும் எழுதி உள்ளார்.   இவர் சமூகத்தில் கல்வி கொள்ளைகள் குறித்து புரிதலை ஏற்படுத்துவதற்காக அடிக்கடி கட்டுரைகளை எழுதி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆசிரியர் சங்கங்கள் மூலம் அரசுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தாராம். இந்நிலையில், பள்ளிக்கல்வி குறித்து தொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் சில கட்டுரைகளை அண்மையில் எழுதி இருந்தார். இது அரசுக்கு எதிராக உள்ளத