18 January 2024

 அரசு உத்தரவால் ஒரு லட்சம் ஆசிரியர்கள் கொந்தளிப்பு




தமிழகத்தில் தொடக்க கல்வியில் ஆசிரியர் நியமனம் முன்னுரிமை பதவி உயர்வுக்கான தகுதி ஆகியன குறித்து வெளியான அரசு உத்தரவால் (அரசாணை எண்:243ல்) இடைநிலை ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேரின் பதவி உயர்வு கேள்விக்குறியாகி உள்ளது.


இது ஆளும் கட்சி மீதான ஆசிரியர்களின் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது.ஒட்டுமொத்த ஆசிரியர்களில் ஒன்றரை லட்சத்திற்கும் மேல் தொடக்ககல்வியில் உள்ளனர்.ஆசிரியர்கள் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்றால் தொடக்க கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றால் தான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது.


இந்நிலையில் சமீபத்தில் வெளியான அரசு உத்தரவு தொடக்க கல்வியை முடக்கும் வகையில் உள்ளது. அதாவது கல்வி ஒன்றியம் மாவட்டத்திற்குள் நடந்து பதவி உயர்வு இனிமேல் மாநில சீனியாரிட்டி அடிப்படையில் நடக்கும் என்பதும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இருந்த பதவி உயர்வில் கை வைத்தும் அந்த உத்தரவு வெளியாகியதால் மாநில அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாடு அரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியதாவது:தி.மு.க. அரசு மீண்டும் வந்தபோது ஆசிரியர்கள் அரசு ஊழியர்களிடம் இருந்த எதிர்பார்ப்புகள் தற்போது தவிடு பொடியாகி விட்டன.


பேச்சு வார்த்தைகள் பயனற்று போகின்றன.குறிப்பாக தொடக்க கல்வி ஆசிரியர்கள் அதிருப்தியின் உச்சத்தில் உள்ளனர்.இதுவரை தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்றனர். 


20 ஆண்டுகள் நடைமுறையை உடைத்து இந்த அரசு உத்தரவில் மாற்றம் கொண்டு வந்ததால் தொடக்கக் கல்வியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி என ஒரு லட்சம் பேருக்கு பதவி உயர்வு வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.


பட்டதாரி ஆசிரியர் தமிழாசிரியர் ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் ஆகியோருக்கு ஒருங்கிணைந்த முன்னுரிமை பட்டியல் அடிப்படையில் பதவி உயர்வு இருந்தது. தற்போது பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் மட்டும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர் என திருத்தம் செய்யப் பட்டுள்ளது.


இது ஆரம்ப நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் செல்வதை தடுக்கும். இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வும் பறிக்கப்பட்டுள்ளது.நடுநிலைப் பள்ளிகளில் ஒரு காலத்தில் 1-முதல் 8 வகுப்புகள் வரை இடைநிலை ஆசிரியர்களே கற்பித்தல் பணி செய்தனர்.


அங்கு தலைமையாசிரியர்களாக மூத்த இடைநிலை ஆசிரியர்களே பதவி உயர்வில் நியமிக்கப்பட்டனர். நாங்கள் நேரடி பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.இடைநிலை ஆசிரியருக்குப் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்க வேண்டாம் என்கிறோம். 


5000 ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்த ஒரு லட்சம் ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிப்பது எந்த வகையில் நியாயம். இந்த உத்தரவு வெளியிடும் முன் சங்கங்களின் கருத்தை ஏன் கேட்கவில்லை.மாநில சீனியாரிட்டியால் பாதிப்பது 90 சதவீதம் ஆசிரியைகள். பதவி உயர்வை புறக்கணிக்கும் முடிவில் அனைத்து ஆசிரியர்களும் உள்ளோம் என்றார்.

 TNPSC Group 4: குரூப் 4 தேர்வு கல்வித் தகுதி; தமிழக அரசுக்கு ஐகோர்ட் முக்கிய உத்தரவு




TNPSC குரூப் 4 பணியிடங்களுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சமான கல்வித்தகுதியை நிர்ணயிப்பது குறித்து பரிசீலனை செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு மூலம் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பி வருகிறது. இந்த குரூப் 4 தேர்வுக்கு கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேநேரம் அதிகபட்ச கல்வித் தகுதி எதுவுமில்லை. அதாவது 10 வகுப்பு தேர்ச்சி முதல் முனைவர் பட்டம் பெற்றவர்கள் வரை யார் வேண்டுமானாலும் குரூப் 4 தேர்வை எழுதலாம்.


இந்தநிலையில், திருச்சியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவின்படி, கடந்த 2020 ஆம் ஆண்டு 135 சமையல் கலைஞர்கள் பணியிடங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் 10 ஆம் வகுப்பு தோல்வி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தகுதி நிர்ணயிக்கப்பட்டது.


அதன்படி, 2021 ஆம் ஆண்டு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. ஆனால், திடீரென அதிக கல்வித்தகுதி இருப்பதாக கூறி, பணியில் இருந்து சதீஷ்குமார் நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து பணியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சதீஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


இந்த வழக்கு விசாரணையில், ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 


வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியன், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி என்பதை அதிக கல்வித் தகுதியாக கருத முடியாது. அதனால், அதிக கல்வித்தகுதியுடன் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்திற்கான சிறப்பு விதிகளின்படி, அதிக வயதுடையவர்களை பணியில் நியமிக்கலாம் என்ற உத்தரவு சட்டவிரோதமானதாக அறிவிக்கப்படுகிறது. அவ்வாறு பணியில் நியமிக்கப்பட்டிருந்தால் அது சட்டவிரோதமாகக் கருதப்படும். தொடர்ந்து பணியில் நீட்டிக்கவும் உரிமை இல்லை. 


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்குரூப் 4 பணியிடங்களுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சமான கல்வித்தகுதியை நிர்ணயிக்க வேண்டும். விரைவாக நடவடிக்கை எடுப்பதன் மூலமாகப் புறக்கணிப்பு மற்றும் சமவாய்ப்புகள் மறுக்கப்படுவது தடுக்கப்படும் என நம்புகிறேன், என தனது தீர்ப்பில் கூறினார்.

 தமிழக அரசு பணிகளில் தமிழர்களுக்கு 100% வேலை உரிமைச் சட்டம்! வேல்முருகன் விடுக்கும் டிமாண்ட்!




தமிழக அரசு பணிகளில் தமிழர்களுக்கு 100% வேலை வழங்கும் வகையில் தமிழர் வேலை உரிமைச் சட்டத்தை இயற்றுமாறு வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தமிழக வாழ்வுரிமைக் கட்சி 13வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ''தமிழநாட்டின் வேலை- தமிழர்களின் உரிமை'' என்கிற முழக்கத்தை வென்றுகாட்டி , வடவர்களின் படையெடுப்பைக் கட்டுப்படுத்த, உள் நுழைவு அனுமதிச்சீட்டு- முறை கொண்டுவர வலியுறுத்தி, என்.எல்.சி, கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட ஒன்றிய அரசு நிறுவனங்களுக்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக -அரசு வேலை கோரி ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.


எந்த நோக்கத்திற்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடங்கப்பட்டதோ, அந்த பயணத்தின் முதற்கட்ட வெற்றியை பெற்றிருக்கிறது. அதே நேரத்தில், மீட்டெடுக்க வேண்டிய தளங்களும் உரிமைகளும் ஏராளம் உள்ளன. உலகில் முன் தோன்றிய மூத்த குடி, வளமார்ந்த முதன் மொழிக்குச் சொந்த இனம், நீண்ட வரலாற்றையும், வளமார்ந்த பண்பாட்டையும் கொண்டு செம்மாந்து வாழ்ந்த இனம், தனி அடையாளமும், சிறப்பும், இருப்பும் கொண்டு விளங்கிய இனம், அத்தகு தமிழினம் இன்று வீழ்ந்து கிடக்கிறது. 


வாழ்வியலின் அனைத்து தளங்களிலும் - அரசியல், சமூகம், பண்பாடு, பொருளியல் என்ற அனைத்து தளங்களிலும் - வேற்றினத்தின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு கிடக்கிறது. தமிழ்நாட்டுக்கு அப்பாலிருந்து அடுக்கடுக்காக ஏவப்படும் திட்டங்களால் வகுக்கப்படும் கொள்கைகளால், வடிவமைக்கப்படும் சட்டங்களால், இடப்படும் கட்டளைகளால், வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருக்கிறது தமிழ்நாடு. ஆரியத்தின் அரசியல் வடிவமான இந்திய தேசியம் அரியணையில் இருந்து ஆணையிடுகிறது. 


இறையாண்மையை இழந்த தமிழினம் இப்போது தன் இருப்பையும், இருப்பிடத்தையும், இயற்கை வளத்தையும், தன் அடையாளத்தையும், இன இயல்பையும், வேலை வாய்ப்புகளையும் இழந்து கொண்டிருக்கிறது.


 இதை எதிர்த்துத் தான் நம் தமிழ்ச் சான்றோர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே தமிழ் மொழி - இன - நாட்டுப் பாதுகாப்புக்கான செயற்களங்களை அமைத்தார்கள். அவற்றை இலக்கு நோக்கிக் கொண்டு செல்லத் தவறிய தமிழினம் இன்னமும் இழப்புகளைச் சந்தித்து கொண்டு இருக்கிறது. 


இந்திய மாநிலங்களிலேயே இந்திய ஒன்றிய அரசுக்கு நிதியளிப்பதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கக்கூடிய ஒரு மாநிலமாக, அதிக அளவில் நிதி வருவாய் வழங்குகிற மாநிலமாக இருக்கிறது. ஆனால், இந்திய ஒன்றிய அரசின் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில், தமிழ்நாட்டிற்கு மிகவும் குறைவான நிதியில் கூட கிள்ளித் தரக்கூடிய நிலை தான் இருக்கிறது. 


தமிழ்நாட்டில் வேளாண் திட்டங்களாக இருந்தாலும் சரி, ரயில்வே திட்டங்களாக இருந்தாலும் சரி; அல்லது வேறு எந்த திட்டமாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டை ஒன்றிய அரசு திட்டமிட்டு வஞ்சித்து வருகிறது. 


இச்சூழலில் தான், தமிழ் நிலத்தில் தன்னுரிமை அரசியல் கை கொள்ளப்பட வேண்டும். தமிழ் இனத்தை அடிமை கொண்ட ஆரியத்தின் மேலாண்மையை, அத்தனை வடிவங்களிலும் அடியோடு பெயர் தெறியவேண்டும். 


சமூகம், பண்பாடு, பொருளியல், அரசியல் என அனைத்துத் தளங்களும் ஆரியத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தை ஏந்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடங்கப்பட்டது. 


எனவே, தமிழினம் சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு தமிழ் தேசம் தன் இறையாண்மையை மீட்டெடுத்துக் கொள்வதில்தான் இருக்கிறது. ஒவ்வொரு தளத்திலும் தமிழ்த் தேசம் தன்னை இறையாண்மையுள்ள சக்தியாக நிறுவிக்கொள்ள வேண்டும். அதற்கான தன்மானத் தன்னுரிமை போராட்டம் எழவேண்டும். 


இந்த உயர்ந்த இலட்சியத்தை நோக்கி, எதிர் வரும் காலங்களில், தமிழ்த்தேச தன்னுரிமையையும், தமிழர்தம் இறையாண்மையையும் மீட்டெடுக்கும் போராட்டங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும் என கூறிக்கொள்கிறேன். 


அதே நேரத்தில், தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு பதவிகளில் தமிழர்களுக்கு 90 விழுக்காடு, தமிழ்நாடு அரசு பதவிகளில் தமிழர்களுக்கு 100 விழுக்காடு வேலை உரிமை சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும். 


பீகார் அரசைப் போன்று தமிழக அரசும், 'சாதிவாரி' கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சாதிக்கேற்ப இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர வேண்டுமென்ற முழக்கத்தை, இனி வரும் காலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் குரல் இன்னும் வீரியத்தோடு ஓங்கி ஒலிக்கும் என்பதை இந்த தைத்திருநாளில் தெரிவித்துக்கொள்கிறேன். 

JEE Main 2024; ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு தயாராகி வருகிறீர்களா? கடைசி வாரத்தில் செய்ய வேண்டியது இதுதான்!





அடுத்த வாரம் ஜனவரி 24 முதல் ஜேஇஇ முதன்மை தேர்வின் முதல் அமர்வு நடக்க உள்ளது. தேர்வுக்கு முந்தைய கடைசி வாரங்களில் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான குறிப்புகள் இங்கே:


ஜே.இ.இ மெயின் தேர்வுக்கான கடைசி சில நாட்களை, சுருக்கமாக திருப்புதல் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் கணக்கீடுகளைத் தீர்ப்பது, தயாரிப்பில் உள்ள பலவீனமான பகுதிகளை அறிந்து அதில் கவனம் செலுத்த வேண்டும்.

இருப்பினும், பின்வரும் முக்கிய குறிப்புகளை மனதில் கொள்ளவேண்டும்:

- படிக்கும் போது கவனம் செலுத்தி நேர்மறையான அணுகுமுறையைப் பேணுங்கள்.

- நேர நிர்வாகத்துடன் JEE தர கணக்கீடுகளின் வினாடி வினாக்கள்/ மாதிரித் தேர்வுகளைத் தீர்ப்பதன் மூலம் வேகத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

- வேகம் மற்றும் துல்லியம் உங்கள் வெற்றிக்கான திறவுகோலாக இருக்கும்.

— வெற்றிகரமான தேர்வு மனோபாவத்தை உருவாக்க CBT (கணினி அடிப்படையிலான தேர்வு) முறையில் மாதிரி தேர்வுத் தொடரை விரும்புவது நல்லது. உங்கள் அட்டவணையின்படி குறிப்பிட்ட நேரத்தில் மாதிரித் தேர்வுகளை முயற்சிக்கவும். உங்கள் தவறுகளைச் சரிபார்த்து, நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு தேர்விலும் வெற்றிபெற முயற்சிக்கவும்.

— மாதிரித் தாள்கள், கேள்விகளின் வடிவத்தைப் பற்றிய புரிதலை உங்களுக்கு வழங்கும். மேலும் அவை நேர நிர்வாகத்தை மேம்படுத்த உதவும்.

— கேட்கப்பட்ட கேள்விகளின் அளவைப் புரிந்துகொள்வதற்கு முந்தைய ஆண்டுகளின் JEE முதன்மை/ அட்வான்ஸ்டு தாள்களைப் பயிற்சி செய்து பார்க்கவும்.

- உங்கள் பலவீனமான பகுதிகளில் கவனம் செலுத்துங்கள் மற்றும் உங்கள் கருத்துக்களை மேம்படுத்தவும்.

- ஒவ்வொரு ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் தீவிரமான படிப்பிற்குப் பிறகு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை குறுகிய இடைவெளிகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஓய்வு எடுக்கும்போது முழுமையாக ஓய்வெடுங்கள்.

- உள் அமைதி, சமநிலை, நம்பிக்கை மற்றும் செறிவு சக்தி ஆகியவற்றை வளர்க்க தியானத்தை பயிற்சி செய்யுங்கள். இவை மிகவும் முக்கியமானவை மற்றும் தேர்வு நாளில் உங்களுக்கு உதவும்.

- உங்களை மிகைப்படுத்திக் கொள்ளாதீர்கள். ஒவ்வொரு இரவும் ஐந்து முதல் ஆறு மணிநேரம் தூங்குவது அவசியம், குறிப்பாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான உண்மையான தேர்வுக்கு மூன்று-நான்கு நாட்களுக்கு முன்பு நல்ல தூக்கம் அவசியம். ரிலாக்‌ஷ் செய்யும் பயிற்சிகள் புத்துணர்ச்சியை மீட்டெடுக்க உதவும். பகலில் அதிக தூக்கத்தை தவிர்க்கவும்.

- எண் / முழு எண் வகை கேள்விகளின் பயிற்சிக்கு, JEE முதன்மை / JEE அட்வான்ஸ்டு அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் ஒரு புகழ்பெற்ற ஆதாரம் அல்லது மாதிரி தாள்களைப் பின்பற்றவும்.

ஒருவருக்கு தேர்வுக்கு தயாராவதில் சரியான அணுகுமுறை இருந்தால், ஒரு நல்ல JEE முதன்மை மதிப்பெண் பெறுவது கடினம் அல்ல.

(எழுத்தாளர் FIIT JEE இல் நொய்டா/கிரேட்டர் நொய்டாவின் நிர்வாகப் பங்குதாரர் மற்றும் மையத் தலைவர்)

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...