Posts

Showing posts from April 17, 2014
ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உறுதி திருச்சி, :ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் நேரு கூறினார். திருச்சி தொகுதி திமுக வேட்பாளர் அன்பழகன் நேற்று திருவெறும்பூர் ஒன்றியம் பழங்கனாங்குடியில் பிரசாரத்தை துவக்கினார்.  பிரசாரத்தைமுன் னாள் அமைச்சர் கே.என். நேரு துவக்கி வைத்து பேசுகையில், திமுக ஆட்சி காலத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசு,மாநில அரசு ஒப்புதலுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அமைத்து ஆசிரியர்களை தேர்வு செய்து வருகிறது.  இதனால்,வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல ஆண்டுகளாக பதிவு செய்து ஆசிரி யர் பயிற்சி படிப்பு படித்த ஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. இந்த தகுதித் தேர்வை ரத்து செய்ய திமுக தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள் (21.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  *இன்று வெயிட்டேஜ் சம்மந்தமான வழக்கு விசாரணை நடைபெறவில்லை வழக்கு விசாரணை (21.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளது  *ஆசிரியர் தகுதித் தேர்வு 2012. 5 சதவீத வழக்கு விசாராணை இன்று நடைபெறவில்லை அவ் வழக்கும் (21.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் விஏஓ தேர்வுக்கு 10.5 லட்சம்பேர் விண்ணப்பம் டி.என்.பி.சி நடத்தும் கிராம நிர்வாக அலுவர் தேர்வுக்கு 10,57,601 பேர் விண்ணப்பத்துள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. 2342 விஏஓ பணியிடங்களுக்கு நேற்று முன்தினம் வரை (15 ஆம் தேதி வரை)விண்ணப்பித்தனர்.   விண்ணப்பத்தவர்களின் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டதா என்பதை மே முதல் வாரத்தில் அறிந்து கொள்ளலாம். பரிசீலனைக்கு பிறகு எடுக்கப்படும விண்ணப்பங்கள் குறித்து www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
கவனத்திற்குள் வராத கணிதத் தேர்வும்-ஒட்டு மொத்த கணித ஆசிரியர்களின் ஆதங்கமும்:  தமிழகத்தில் இன்றுடன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவடைந்தது.மடைதிறந்த வெள்ளம் போல் மாணாக்கர்கள் தேர்வு முடிந்தவுடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் தேர்வறையை விட்டு வெளியேறினர்.தன்னுடைய இளமை காலத்தில் சந்திக்கும் முதல் பொதுத்தேர்வு என்பதால் சற்று பதற்றத்துடனும் பயத்துடனும் தேர்வை சந்தித்தனர்.  அனைத்துப் பாடங்களும் எளிமையாகவும் புத்தகத்தில் உள்ள கேள்விகள் மட்டும் கேட்கப்பட்டது.(கணிதத்தைத் தவிர) கணித பாடத்தில் வழக்கமான கேள்விகளான இயற்கணித பாடத்தில் இருந்து வர்க்கமூலம்.காரணிப்படுத்துதல் மற்றும் கணங்களில்-சார்புகளில் இருந்து அம்புக்குறிபடம்கேட்கப்படவில்லை.இதனால் 15 மதிப்பெண்கள் பெறுவது கிராமப்புற மாணவர்களுக்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தியது. தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு படித்த பெற்றோர்கள் கவனமுடன் தன் பிள்ளைகளை கவனிக்கின்றனர் மற்றும் ,அரசின் விதிகளுக்கு உட்படாத பயிற்சி வகுப்புகள். ஆனால் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணாக்கர்களில் 75%பெற்றோர்கள் வறுமையின் காரணமாக இடம் பெயர்ந்து வெளியூரில் கூலி வேலை பார்க்கி
சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள்  விசாரணைக்கு வருகின்றன முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் மீண்டும் இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன.  அவ்வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் ஏராளமான வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன