Posts

Showing posts from May 1, 2013
10+2+3 என்ற முறை சார்ந்த கல்விக்குத் தான், வேலைவாய்ப்பும், பதவி உயர்வும் அளிக்க முடியும்-உயர்கல்வித் துறை அமைச்சர்  "திறந்த நிலை பல்கலையில் பட்டம் பெற்றவர்களுக்கு, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்க, கோர்ட் தடை விதித்துள்ளது,'' என, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைஅமைச்சர் முனுசாமி கூறினார். இத்துறை மானியக் கோரிக்கை மீது, சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:  தே.மு.தி.க., -பாபு முருகவேல்: திறந்த நிலை பல்கலையில் பட்டம் பெற்ற, 40 ஆயிரம் அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வு கிடைக்காமல் உள்ளனர். இவர்களின், கல்வித் தகுதி தான் இதற்குக் காரணமாக உள்ளது. மேலும், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர், திறந்தநிலை பல்கலையில், பட்டம் பெற்று, வேலை கிடைக்காமல் உள்ளனர். எனவே, திறந்த நிலை பல்கலையில் பட்டம் பெற்றவர்களுக்கும், வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்க வேண்டும்.  அமைச்சர் முனுசாமி: "திறந்தநிலை பல்கலையில், பட்டம் பெற்றவர்களுக்குவேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்கக் கூடாது' என, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் தெளிவாக கூறுகின்றன. மார்க்சிஸ்ட்- ராமமூர்த்தி: