Posts

Showing posts from January 15, 2016
வேலையில்லா பட்டதாரிகளுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் ஜெயலலிதா அறிவிப்பு. முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கடந்த வடகிழக்குப் பருவமழையின் போது ஒரு சில நாட்களில் பெய்த கன மழை காரணமாக பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த வெள்ள பாதிப்பு மிக அதிகமானது என்பதால், மத்திய அரசு இதனை மிகக் கடுமையான பேரிடர் என அறிவித்துள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களில் பெரும் பாலானோருக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப் பட்டுவிட்டது. எஞ்சியவர் களுக்கு மிக விரைவில் வெள்ள நிவாரண உதவித் தொகை வழங்கப்படும். இந்த பெரு மழை வெள் ளத்தால் சிறு, குறு தொழில் முனைவோர் பாதிக்கப் பட்டுள்ளனர். தமிழ்நாட்டை வெள்ளம் பாதித்த மாநில மாக அறிவித்து ஏற்கெனவே தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இவர்கள் தங்களுடைய தொழிலை மீண்டும் தொடங்கும் வகையில், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் ஏற்கெனவே வழங்கிய கடன்களுக்கு கடன் தவணையை ஒத்தி வைத்தல், மறு கடன் உதவி போன்ற பல சலுகைகளை வழங்கி வருகின்றன. வங்கிகளுடன் கலந் தாய்வு கூட்டங்கள் நடத்தி இந்தப் பணியை வ
கம்ப்யூட்டர் தெரிந்தால் தான் இனி மத்திய அரசு வேலை! அரசு பணிகளில், எழுத்தர்களுக்கு பதில், நவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தத் தெரிந்த, நிர்வாக உதவியாளர்களை பணியில் சேர்க்க,மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு பணிகளில், எல்.டி.சி., எனப்படும், கீழ்நிலை எழுத்தர், யூ.டி.சி., எனப்படும், உயர்நிலை எழுத்தர் பணிகள் உள்ளன. மத்திய அரசின் செயலக பணிகளின் முதுகெலும்பாக இப்பணியாளர்கள் திகழ்கின்றனர். இவர்களுக்கு பதில், கம்ப்யூட்டர் உள்ளிட்ட நவீன சாதனங்களை பயன்படுத்தத் தெரிந்த இளைஞர்களை, நிர்வாக உதவியாளர் பணியில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த, 25 ஆண்டுகளில், இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். டில்லியில் உள்ள, மத்திய தலைமைச் செயலகத்தில், 21 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். அரசின் புதிய திட்டத்தால், ஊழியர் எண்ணிக்கை, 8,200 ஆக குறையும். நிர்வாக உதவியாளர்கள், பணியாளர் தேர்வாணையத்தால் நியமிக்கப்படுவர்; ஆறு ஆண்டு பணிக்கு பின், நிர்வாக அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுவர். இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தால், மத்திய அரசு பணியாளர்கள், அனைத்து வித தொழில் திறன்களையும் கொண்டவர்களாக விளங்கு
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு டி.என்.பி.எஸ்.சி., சார்பில் குரூப் 2 தேர்வு வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்காக ஹால் டிக்கெட் டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.