9 December 2016

TNPSC 'குரூப் - 1' தேர்வுக்கு கூடுதல் அவகாசம்

'குரூப் - 1' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நான்கு நாள் கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளது. தமிழக அரசு துறைகளில், 'குரூப் - 1' பதவிகளான, துணை கலெக்டர், வணிக வரி அதிகாரி, டி.எஸ்.பி., போன்றவற்றில், 85 காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., - பிப்., 19ல், தேர்வு நடத்துகிறது. 

இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நவ., 9ல் துவங்கி, நேற்றுடன் முடிவதாக இருந்தது.ஆனால், 'நடா' புயல், பண தட்டுப்பாடு, ஜெயலலிதா மறைவை ஒட்டிய விடுமுறை போன்றவற்றால், விண்ணப்ப பதிவில், தேர்வர்களுக்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. 

எனவே, விண்ணப்ப பதிவுக்கு கூடுதல் அவகாசம் வேண்டுமென கோரினர். இது குறித்து, நமது நாளிதழில், நேற்று செய்தி வெளியானது.இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'குரூப் - 1 தேர்வுக்கு, டிச., 12 வரை விண்ணப்பம் பதிவு செய்யலாம்; கட்டணத்தை, டிச., 15 வரை செலுத்தலாம். இதற்கு மேல் அவகாசம் வழங்கப்படாது; தேர்வு தேதியில் மாற்றம் இல்லை' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TET எப்போது ?? தனியார் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம்



 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...