Posts

Showing posts from March 13, 2013
3 நபர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும் நெல்லையில் 15ம் தேதி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்  திருநெல்வேலி:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நெல்லையில் வரும் 15ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் பாளையில் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சுடலைமணி வரவேற்றார். மாநில செயலாளர்கள் முருகேசன், மணிமேகலை சிறப்புரை ஆற்றினர். 6வது ஊதிய குழு முரண்பாடுகளை களையும் 3 நபர் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும். மத்திய அரசுக்கு இணையானஊதியம் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.தேர்தல் வாக்குறுதியின்படி தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.  புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட தொகையை 50 ரூபாயாக குறைக்க வேண்டும்.இக்கோரிக்கைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திவரும் 15ம் தேதி மாலையில் நெல்லை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு ந
குரூப் 2, 4 தேர்விலும் மாற்றம்விஏஒ தேர்வில் பொதுத்தமிழ் நீக்கம் நெல்லை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் விஏஒ தேர்வில் பொதுத்தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது.குரூப் 4, 2 தேர்வுகளிலும் தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 72பக்கங்கள் அடங்கிய புதிய பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி நேற்று இரவு வெளியிட்டது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மாநில அளவில் முதன்மை பணிகளான துணை கலெக்டர், டிஎஸ்பி முதல் இளநிலை உதவியாளர், தட்டச்சர் வரையிலான அனைத்து பணிகளுக்கும் தேர்வு நடத்தப்படுகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரூப் 1 தேர்விற்கான பாடத்திட்டத்தில் மாற்றத்தை டிஎன்பிஎஸ்சி அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து அனைத்து தேர்வுகளுக்கும் புதிய பாடத்திட்டத்தை டிஎன்ப¤எஸ்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான72 பக்க புதிய பாடத்திட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் நேற்றுஇரவு வெளிய¤டப்பட்டது.இதில் குறிப்பாக எஸ்எஸ்எல்சி தகுதியைக் கொண்டு தேர்வு எழுதும் குரூப் 4 பணியிடங்கள், விஏஒ தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதா
மாநிலம் முழுவதும் 1000 தொடக்கபள்ளியில் ஆங்கில வழிக்கல்வி வேலூர்: தமிழகம் முழுவதும் 1000 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி முறையை கொண்டுவருவதற்கு பள்ளி கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.கடந்த 2010-11ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. அனை வருக்கும் ஒரே பாடத்திட் டம் என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட இந்த கல்வித்திட்டத்தை தொடர்ந்து அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும், ஆங்கில வழிக்கல்வியை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் இருந்து, முதற்கட்டமாக 1000 ஆங்கில வழிக்கல்வி தொடங்க உள்ள பள்ளிகளின் பட்டியல் கேட்டு பெறப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் இருந்து 10 அரசுப் பள்ளிகளின் பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பட்டியலில் இருந்து உயர் மட்டக்குழு தேர்வு செய்த பள்ளிகளில், முதற்கட்டமாக ஆங்கில வழிக்கல்வி முறை தொடங்க அரசு உத்தரவிட்டது.