Posts

Showing posts from March 13, 2014
(13.03.14)ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்,2012 ஆசிரியர் தகுதித் தேர்வு 5%மதிப்பெண் தளர்வு அரசாணை வழக்கு, வெயிட்டேஜ் முறைக்கு எதிரான வழக்குகள் ,இடை நிலை ஆசிரியர் சார்பான வழக்கு, பட்டதாரி நியமனவழக்கு என அனைத்து வழக்குகளும் நீதியரசர் நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அரசு வழக்கறிஞர் வழக்கு குறித்து அரசின் நிலைப்பாட்டை இன்றும் தெரிவிக்கவில்லை.நாளை தெரிவிக்க ஏதுவாக வழக்கினை மீண்டும் நாளைக்கு ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை அட்வகெட் ஜெனரல் அல்லது அரசுவழக்கறிஞர் வழக்குகள் குறித்து அரசின் நிலைப்பாட்டை தெரிவித்த பின்னரே வழக்குகளின் அடுத்தகட்ட நகர்வு தெரியவரும்.
TET கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு: 30 நாள்களுக்கு மேல் நடைபெறும். சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. நாளொன்றுக்கு 1,500 பேர் வரை மட்டுமே இதில் பங்கேற்க முடியும் என்பதால் மொத்தம் 30 நாள்களுக்கு மேல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முதலில் நடைபெற உள்ளது. அதன்பிறகு, இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  இவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கூடுதலாக 46 ஆயிரம் பேர் தேர்ச்சியடைந்தனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால் இவர்களுக்கு சான்றிதழ்சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல் இருந்தது.இந்த நி
ஆசிரியர் தகுதி தேர்வு சான்று சரிபார்ப்பில் 40 பேர் ஆப்சென்ட் ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தது. அதில் சுமார் 6 லட்சம் பேர் எழுதினர். சுமார் 20 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.இதில் இட ஒதுக்கீட்டு பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்று அரசு அறிவித்தது. இதையடுத்து 150க்கு 82 மதிப்பெண்கள் (55 சதவீதம்) எடுத்த 48 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.  முதல்கட்டமாக தாள் 1ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேற்று சான்று சரிபார்ப்பு தொடங்கியது. ஒரு மையத்துக்கு சுமார் 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டனர்.நேற்றைய சான்று சரிபார்ப்பில் கலந்து கொள்ள மொத்தம் 1250 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். அதில் சுமார் 40 பேர் வரவில்லை.
டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம் ஆசிரியர் தகுதித்தேர்வில்,சலுகை மதிப்பெண் பெற்று,தேர்ச்சி பெற்றவர்களின்,சான்றிதழ் சரிபார்ப்பு,நேற்று துவங்கியது. தமிழகத்தில்,ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம்,அரசு பள்ளிகளுக்கான,ஆசிரியர் நியமனம் நடைபெறுகிறது. இதில்,கடந்த ஆண்டு தேர்ச்சிபெற்ற, அனைவருக்கும்,அரசு பணி வழங்கப்பட்டது. நடப்பாண்டில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சியடைந்து,சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட நிலையில்,பிற்படுத்தப்பட்டோருக்கு,தமிழக அரசு,சலுகை மதிப்பெண் வழங்கியது.  இதனால்,மேலும், 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான,மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பு பணி,நேற்று துவங்கியது. சான்றிதழ் சரிபார்க்கப்பட வேண்டிய நாள் குறித்த விவரம்,தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இன்று 13.03.14 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள் GROUPING MATTERS ~~~~~~~~~~~~~~~~  1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES) ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~  2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (Q DEPARTMENT DATED 05.10.2012AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014REGARDING WEIGHTAGE OF MARKS ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~  WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD (REG. P.G. ASSISTANT IN TAMIL) ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~  WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT] CHELLENGING KEY ANSWERS 2013.BATCHES  1.GRADUATE ASSISTANT ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~  2.B.T. ASSISTANT ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~