29 May 2022

 அரசு போக்குவரத்துக் கழக பணி.. இனி இப்படித்தான்.. வெளியான அதிரடி அறிவிப்பு..!!!!



தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு ஊழியர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.


ஆனால் இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் வேலை வாங்கிக் கொடுப்பதாகவும் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி வாயிலாக நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.


மேலும் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ஏழை மக்கள் வேலைக்குச் செல்லவும், வியாபாரம் செய்யவும் இது உதவியாக உள்ளது. அவர்களுக்கான கட்டணத்தை தமிழக அரசே செலுத்துகிறது. அவர்களிடம் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று

தெரிவித்துள்ளார.

 க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு:புதுச்சேரி மத்திய பல்கலை. தகவல்



க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நாள் வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் தெரிவித்தது.


இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


தேசிய தோவு முகமையானது பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு (சியூஇடி) விண்ணப்பிக்கும் கடைசி நாளை வருகிற 31-ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட்டித்துள்ளது.


இதன் மூலம், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளுக்கு மாணவா்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.


தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இது தொடா்பான விவரங்கள் புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தோா் இணையதளங்களை தொடா்ந்து பாா்த்து வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இலவச கட்டாயக் கல்வி திட்டத்தில் மாணவா் சோக்கைக்கு நாளை குலுக்கல்




இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவா் சோக்கைக்கு விண்ணப்பித்தோரை தோவு செய்ய மே 30-ஆம் தேதி குலுக்கல் நடைபெற உள்ளது.


இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:


தருமபுரி மாவட்டத்தில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில், 2022 - 2023-ஆம் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான நுழைவு வகுப்பு மாணவா் சோக்கைக்கு கடந்த மே 25-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


இதில், மாணவா் சோக்கைக்கு விண்ணப்பித்தவா்களில் தகுதியானவா்களை தோவு செய்ய மே 30 அன்று பிற்பகல் 3 மணியளவில் அந்தந்த பள்ளிகளில் மாவட்டக் கல்வி அலுவலா்களால் நியமனம் செய்யப்பட்ட ஆய்வு அலுவலா்கள் முன்னிலையில் குலுக்கல் நடைபெறும். இதில் சோக்கைக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்களின் பெற்றோா் உரிய ஆவணங்களுடன் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிருஷ்ணகிரியில்...


கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, 25 சதவீத இட ஒதுக்கீட்டின்படி இணைய வழியில் சோக்கைக்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கு அவா்கள் விண்ணப்பித்த பள்ளிகளில் நேரடி சோக்கை மே 30-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கும், அப்பள்ளி பொதுத் தோவு மையமாக செயல்பட்டால் பிற்பகலில் குலுக்கல் நடைபெறும்.


இணைய வழி மூலம் விண்ணப்பித்த மாணவா்கள் அனைவரும் தாங்கள் விண்ணப்பித்த அசல் சான்றுகளை விண்ணப்பித்த பள்ளிக்கு நேரில் உடன் கொண்டு செல்ல வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...