1 September 2016

ஆசிரியர் தகுதித்  தேர்வு வழக்கு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி அன்று விசாரணைக்கு வருகிறது 

SUPREME COURT OF INDIA
Case StatusStatus : PENDING
Status of Special Leave Petition (Civil)    29245    OF   2014
V. LAVANYA & ORS.   .Vs.   THE STATE OF TAMIL NADU & ORS.
Pet. Adv. : MR. T. HARISH KUMAR   Res. Adv. : MR. M. YOGESH KANNA
Subject Category : SERVICE MATTERS RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE 
                                  APPOINTMENT
Appealed Against : WA 1031/14 OF HIGH COURT OF MADRAS

Listed 4 times earlier                                                   Likely to be Listed on : 13/09/2016
Last updated on 31-08-2016

பி.எட்., 2ம் கட்ட கவுன்சிலிங் அறிவிப்பு

பி.எட்., இரண்டாம் கட்ட கவுன்சிலிங், செப்., 15 மற்றும், 16ல் நடக்கிறது.

ஏழு அரசு கல்லுாரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லுாரி களில், 1,777 பி.எட்., இடங்களுக்கு, தமிழக அரசு சார்பில், சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரியில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

 கடந்த, 22ல், முதல் கட்ட கவுன்சிலிங் துவங்கி, நேற்று முடிந்தது; இதில், 1,314 இடங்கள் நிரம்பியுள்ளன. இரண்டாம் கட்ட கவுன்சிலிங், செப்., 15 மற்றும், 16ல் நடக்கும் என, மாணவர் சேர்க்கை கமிட்டி செயலர் தில்லை நாயகி அறிவித்துள்ளார்.


அவர் கூறும்போது, 'ஏற்கனவே விண்ணப்பித்தவர்களில், முதல் கட்ட கவுன்சிலிங்குக்கு அழைக்கப்படாத, 1,000 பேர் உள்ளனர். அவர்களுக்கான, 'கட் - ஆப்' மதிப்பெண், செப்., 9ல் இணையதளத்தில் வெளியிடப்படும். பின், தகுதி உள்ளவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்படும்' என்றார்.

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு:நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (செப்.2) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

நிகழாண்டு செப்டம்பர் -அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் அவர்கள், தங்களது விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அரசுத் தேர்வு மையங்கள் மூலம் வெள்ளிக்கிழமை (செப்.2) முதல் செப்.9-ஆம் தேதி வரை (செப்.4,5 தேதிகள் நீங்கலாக) விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே இந்தத் தேர்வை எழுதி தோல்வியுற்றவர்கள், முதல் முறையாக தேர்வு எழுதுவோர் ஆகியோர் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், தேர்வுக் கட்டணம், தேர்வு மையம் உள்ளிட்ட விவரங்களை www.dge.tn.gov.in   என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் தனித்தேர்வர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஆன்-லைன் பதிவுக்கு ஏற்றுக் கொள்ளப்படும். இணைப்புகளுடன் பெறப்படாத விண்ணப்பங்கள், தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
மேலே குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் செப்டம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

  எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன ...