11 December 2012

TRB PG RESULT - முதுகலை பட்டதாரி ஆசிரியர் இறுதி பட்டியல் (தாவரவியல் தவிர) டி.ஆர்.பி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரி சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு 12.12.12 காலை 8.00 மணிக்குள் சென்று மற்ற தகவல்களை பெறுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் பணி நியமன ஆணை 13.12.2012 அன்று சென்னையில்வழங்கப்பட உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. 

 சான்றிதழ் சரிபார்பிற்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் பணி நியமன ஆணை 13.12.2012 அன்று சென்னையில் வழங்கப்பட உள்ளது என்றும் மாவட்ட வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரம் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது என்றும், ஒரு சில மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன . 

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் தகவல் தெரிவிக்கப்படஉள்ளது. இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களைப்போல் இவர்களையும் பேருந்தில் அழைத்துச்செல்ல ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் பள்ளிக்கல்வி துறையில் இருந்தது முறையான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலி... அடுத்த TET இல் வெற்றி பெறுவோருக்கு அருமையான வாய்ப்பு.

இந்த TET தேர்வில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் முதலில் 5800 என்றே காட்டப்பட்டன. பிறகு அது 8500 ஆக இருந்து - முடிவாக அனைவருக்கும் பணிநியமனம் செய்யப்பட்டனர்.

 ஆனால் கலந்தாய்வில் வெளியிடப்பட்டுள்ள பணியிடங்களை பார்க்கும் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 750 பணியிடங்களாவது காலியாக இருப்பதாகவே தோன்றியது. எனவே முழுவதுமாக 20 ஆயிரத்திற்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் இந்த முறை வெளியிடப்பட்டுள்ளன. 

இதில் பாதிக்கு பாதி.. அதாவது 10 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே இந்தTET தேர்வில் நிரப்பப்பட்டுள்ளன.எனவே அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி வெற்றி பெறுவோருக்கு அருமையான வேலைவாய்ப்பு நிலை உருவாகி உள்ளது. மேலும் 1:30 என்ற ஆசிரியர் மாணவர் விகிதத்தினால் இத்தகைய ஆசிரியர் பணிநியமன காலி இடங்கள் உருவாகி உள்ளன. 

எனவே இதனை கருத்தில் கொண்டு இந்த TNTET தேர்வினில் வெற்றி பெற முடியாதவர்கள் அடுத்த TET தேர்வில் தேர்ச்சி அடைந்து பணியிடங்களை பெற்று கொள்ளுமாறு இந்த வலைபூ மூலம் உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். 

அதே போல பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் பாதிக்கு பாதி காலியாக உள்ளன. அதனை உணர்ந்து இந்த 4 மாதத்தில் கடுமையாக உழைத்தால் ஒரு ஆசிரியாகும் உங்கள் கனவுகளை அடைந்து விடலாம் என்பது திண்ணம்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய ஆசிரியர்கள் TRB - தேர்வு நுழைவுச்சீட்டை (Hall Ticket) அவசியம் 13.12.2012 அன்று முதல்வர் பங்கேற்கும் நியமன ஆணை பெறும் விழாவில் அவசியம் கொண்டு வர - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு
அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தாவல் சோகம்!

தவிப்புக்கு உள்ளாகும் தனியார் பள்ளிகள் தனியார் பள்ளிகளில் பணிபுரிந்த 300க்கும் மேற்பட்ட, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு பள்ளி ஆசிரியர்களாகி உள்ளனர். இதன் காரணமாக, தனியார் பள்ளிகளில் முக்கிய பாடங்களை நடத்த ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

அரையாண்டு தேர்வு நடந்து வரும் இத்தருணத்தில், தனியார் பள்ளி ஆசிரியர்கள் திடீரென வெளியேறியுள்ளது, மாணவர்களின் கல்வியை வெகுவாக பாதிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், டி.இ.டி., தேர்வு நடத்தப்பட்டு, மாநிலம் முழுவதும் 18 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு முடிவு, கடந்த4ம் தேதி வெளியிடப்பட்டது. 

தேர்வு செய்யப்பட்டுள்ள 18 ஆயிரம் ஆசிரியர் களுக்கும் வரும் 13ல் பணி நியமனம் வழங்கப்படுகிறது. இதற்காக, மாநிலம் முழுவதும் தேர்வான ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர் மூலமாக, பணி நியமன கலந்தாய்வு நடந்து வருகிறது. கடந்த இரு நாட்களாக, பட்டதாரி ஆசிரியர் களுக்கான கலந்தாய்வு நடந்தது; 

இன்று, இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்த 400 இடைநிலை ஆசிரியர்களும், பி.எட்., முடித்த 219 பட்டதாரி ஆசிரியர்களும், அரசு ஆசிரியர்களாக தேர்வாகி உள்ளனர். அவர்களது விருப்பத்தின் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்திலோ அல்லது வெளிமாவட்டங்களிலோ பணி அமர்த்தப்பட உள்ளனர்.தனியார் பள்ளிகளுக்கு சிக்கல்திருப்பூர் மாவட்டத்தில், தனியார் பள்ளிகளில் பணியாற்றிய இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும், டி.இ.டி., தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள், அரசு பள்ளி ஆசிரியர்களாக தேர்வாகியுள்ளனர். 

அதனால், தனியார் பள்ளிகளில், அவர்களது பணியிடம் திடீரென காலியாகி உள்ளது.தனியார் பள்ளிகள் சிலவற்றில் அரையாண்டு தேர்வு துவங்கியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த அனுபவமிக்க ஆசிரியர்கள், திடீரென அரசு பள்ளிக்கு தாவியுள்ளதால், மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதில், தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய ஆசிரியர்களை பணியில் சேர்க்க, தனியார் பள்ளிகள் ஆர்வம் காட்டினாலும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கிடைப்பதில்தட்டுப்பாடு நிலவுகிறது.

 பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், முழு ஆண்டுக்கு உரிய "சிலபஸ்' முடிப்பதும், பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறுவதும், ஆசிரியர்கள் தட்டுப்பாட்டால், தனியார் பள்ளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆசிரியர்கள் வெளியேறுவதால், தேர்ச்சி விகிதம் நிச்சயமாக குறையும் என்ற அச்சத்தில், தனியார் பள்ளி நிர்வாகிகள் கவலை அடைந்துள்ளனர்.

தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறுகையில்,"சில பள்ளிகளில் இருந்து ஐந்து பேர் வரை, அரசு ஆசிரியர்களாக தேர்வாகி வெளியேறியுள்ளனர்.ஆசிரியர் பற்றாக்குறையால், பாடங்களை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக பணிக்கு வரும் ஆசிரியர்கள், பாடங்களை நடத்துவதிலும், மாணவர்களை புரிந்துகொள்வதிலும் சிரமம் உள்ளது. பொதுத் தேர்வுக்கு பின், மே மாதத்தில், பணியிட நியமனத்தை அரசு செய்திருந்தால், தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்காது,' என்றனர்.

மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக இருந்த 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள், ஒரே நேரத்தில் பூர்த்தி செய்யப் படுவதால், மாணவர்களில் கல்வி நலன் மேலோங்கவாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆயிரக்கணக்கான பணியிடங்கள், தனியார் பள்ளிகளில் திடீரென காலியாகியுள்ளது. இது,அப் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வியை கடுமையாக பாதிக்கும்."
9,600 இடைநிலை ஆசிரியர்களுக்குஇன்று பணி நியமன கலந்தாய்வு ஆசிரியர்

தேர்வு வாரியம் மூலம் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 9,600இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆன்-லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு நேற்று நடைபெறுகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வுநடைபெற்ற அதே மையங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆன்-லைன் மூலம் பணிநியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது.

 இன்று காலையில் மாவட்டத்துக்குள் பணி நியமன கலந்தாய்வும், மாலையில் வெளி மாவட்டங்களுக்கான கலந்தாய்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வழங்கியுள்ள முகவரியின் அடிப்படையில்,அவரவர் சொந்த மாவட்டங்களில் நடைபெறும் ஆன்-லைன் கலந்தாய்வில் இவர்கள் பங்கேற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

8,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பணி நியமனக் கலந்தாய்வில் 6,592 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களைத் தேர்ந்தெடுத்தனர். சொந்த மாவட்டங்களில் பணியிடங்கள் கிடைக்காதவர்களுக்கும், வேறு மாவட்டங்களில் பணியிடங்களை விரும்புவோருக்கும் திங்கள்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது. 

மொத்தம் 2,035பேர் பங்கேற்ற இந்தக் கலந்தாய்வு மாநில அளவில் நடைபெற்றதால் அதிக நேரம்ஆனது. திங்கள்கிழமை இரவு வரை இரண்டு நாள்களிலும் சேர்த்து 8,500-க்கும் மேற்பட்டோர் பணியிடங்களைத் தேர்வு செய்ததாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் 18 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 13-ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. இடைநிலை ஆசிரியர்கள்... 

இதனிடையே ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று உரிய சான்றிதழ்களைச் சமர்ப்பிக்காமல் இருந்த 113 இடைநிலை ஆசிரியர்கள் தங்களது சான்றிதழ்களை திங்கள்கிழமை நேரில் சமர்ப்பித்தனர். வேலைவாய்ப்பு பதிவு அட்டை, மதிப்பெண் சான்றிதழோடு வந்த இவர்களின் பெயர்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வுப் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

டி.பி.ஐ. வளாகத்தில் பரபரப்பு: இறுதித் தேர்வுப் பட்டியலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்கள் ஆகியோர் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு நேரில் வரலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களும் அதிக எண்ணிக்கையில் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு நேரில் வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

 ஏராளமானோர் ஒரே நாளில் குவிந்ததால் அவர்களை வரிசையில் வருமாறு அறிவுறுத்தியுள்ளனர். தகுதியானவர்களின் மனுக்களைப் பெற்றுக்கொண்டும், மீதமுள்ளவர்கள் திருப்பியும் அனுப்பப்பட்டுள்ளனர். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தேர்வு வாரியத்தின் மீது புகார்: தேர்வு வாரிய அதிகாரிகள் தங்களது மனுக்களை பொறுமையோடு பரிசீலிக்கவில்லை என்று பட்டதாரிகள் தெரிவித்தனர். 

தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமனம் வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்றும் அவர்களில் சிலர் தெரிவித்தனர். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள்: இதனிடையே, 2,895 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான இறுதிப்பட்டியல் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
ஆசிரியர்களை அழைத்து வர ரூ.500 வசூல்; சி.இ.ஓ.,க்கள் மும்முரம் சென்னை: நாளை மறுநாள், சென்னையில் நடக்கும் பணி நியமன உத்தரவு வழங்கல் விழாவில் பங்கேற்க உள்ள ஆசிரியர்களிடம், வாகன செலவிற்காக, தலா, 500 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த பொறுப்பு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்ற, 18,382 ஆசிரியர்களுக்கு, சென்னையில், இம்மாதம், 13ம் தேதி நடக்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதா, பணி நியமன உத்தரவுகளை வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள், மும்முரமாக நடந்து வருகின்றன. தேர்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவரும், சென்னைக்கு வர வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும், 13ம் தேதி காலையில், சென்னையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களை அழைத்து வரும் பொறுப்பு, மாவட்ட முதன்மைக் கல்வி அவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், ஆசிரியர்களை, பஸ்கள் மூலம், சென்னைக்கு அழைத்து வர, சி.இ.ஓ.,க்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த செலவிற்காக, ஒவ்வொரு ஆசிரியரிடமும், தலா, 500 ரூபாய் வசூலித்து வருகின்றனர். ஆசிரியருடன், துணைக்கு யாரும் வரக்கூடாது எனவும், விழா நடக்கும் நாளன்று காலை சிற்றுண்டி, சாப்பாட்டு செலவை, சம்பந்தபட்ட ஆசிரியர்களே பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத,சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஆசிரியர்கள், தேவையில்லாமல், சென்னைக்கு வந்து அலைய வேண்டாம் என்பதற்காகத் தான், "ஆன்-லைன்&' கலந்தாய்வு நடத்துகின்றனர். இது, வரவேற்கதக்கது. ஆனால், 18 ஆயிரம் பேரும், இப்போது, சென்னைக்கு வர வேண்டும் என, கூறுகின்றனர். 18 ஆயிரம் பேருக்கும், முதல்வர், பணி நியமன உத்தரவுகளை வழங்குவதற்கு வாய்ப்பே இல்லை. 10 பேருக்கோ, 15 பேருக்கோ, உத்தரவுகளை வழங்குவார். அதன்பின், அதிகாரிகள் தான் வழங்கப் போகின்றனர். அதற்கு, எதற்கு இப்படி தேவையில்லாமல், இவ்வளவு பெரிய பிரம்மாண்டம் என, தெரியவில்லை. ஒரு ஆசிரியரிடம், 500 ரூபாய் என்றால், சென்னை நகரில் உள்ள ஆசிரியர்களை தவிர்த்து, கணக்கு பார்த்தாலும், 90 லட்சம் ரூபாய்க்கு வசூல் குறையாது. இவ்வளவு தொகையையும், மாவட்ட அதிகாரிகள், முறையாக செலவு செய்வார்களா என்பதும் கேள்விக்குறிதான். இவ்வாறு, அந்த நிர்வாகி தெரிவித்தார்.
முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வின் இறுதி பட்டியல் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!... பெரிதும் எதிர்பார்க்கப்படும் முதுகலை பட்டதாரி போட்டித்தேர்வின் இறுதி பட்டியல் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . பல்வேறு வழுக்குகள் காரணமாக தாமதமாகி வரும் இறுதி முடிவு வெளியீடு விரைவில் வெளியாகும் என தொடர்ந்த பல நிலைகளிலிருந்த்து தகவல்கள் வந்தவண்ணம் இருப்பதால், விரைவில் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். ஆனாலும், எப்போது முடிவுகள் வெளியாகும் என உறுதியாக தகவல் இல்லை. முடிவுகள் வெளியானவுடன் நம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...