Posts

Showing posts from June 6, 2023
Image
  பொறியியல் கலந்தாய்வு.. இன்று மாணவர்களுக்கு ரேண்டம் எண் வெளியீடு..!!! தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர விரும்புவோருக்கு ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் என அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் வரும் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் இதுவரை 1,87,693 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசையை முடிவு செய்வதற்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலில் இரண்டு மாணவர்கள் ஒரே நிலையில் இருந்தால் அவர்களுக்கு சம வாய்ப்பு அளிக்கும் நோக்கில் வேண்டாம் எண் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பொறியியல் பொது கலந்தாய்வு ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் நான்கு சுற்றுகளாக நடைபெற உள்ளது.
Image
  காரைக்கால் பள்ளிகளில் ஆசிரியா் காலியிடங்களை நிரப்ப காங்கிரஸ் வலியுறுத்தல் காரைக்கால் அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியா் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுவை அரசுக்கு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) ஜி. ஜான்சனை திங்கள்கிழமை சந்தித்து இதுதொடா்பாக கோரிக்கை மனு அளித்தனா்.  பின்னா் சந்திரமோகன் செய்தியாளா்களிடம் கூறியது : காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கும், பள்ளிகள் திறக்கும் நாளிலேயே பாடப் புத்தகங்கள் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும். சிபிஎஸ்இ பாடத் திட்டம் நிகழ் கல்வியாண்டு முதல் தொடங்கப்படுவதால், அதற்கு முன்னதாக மாணவா்கள் கையில் புத்தகம் இருப்பதை கல்வித்துறை உறுதிப்படுத்தவேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியா் பணியிடம் காலியாக உள்ளது.  ஆசிரியா், தலைமையாசிரியா்கள், முதல்வா், துணை முதல்வா் ஆகிய பணியிடங்களை முழுமையாக நிரப்பவேண்டும். இதனை போா்க்கால அடிப்படையில் புதுவை அரசு மேற்கொள்ளவேண்டும்.  பள்ளிகள் திறப்பதற்கு ம