Posts

Showing posts from January 11, 2013
நேரடி டி.இ.ஓ. தேர்வுமுறையிலும் அதிரடி மாற்றம் டி.என்.பி.எஸ்.சி. முடிவு குரூப்–1 தேர்வை தொடர்ந்து நேரடி டி.இ.ஓ. (மாவட்ட கல்வி அதிகாரி) தேர்வுமுறையிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது. உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை ஆய்வு செய்வது, ஆசிரியர்களின் பணிகளை மேற்பார்வையிடுவது, தேர்வு நடத்துதல் போன்ற பணிகளை செய்வதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஒரு மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியில் இருப்பார்.ஆசிரியர்களின் ஊதியம்,விடுமுறை, இடமாற்றம், வருங்கால வைப்புநிதி தொடர்பான பணிகளையும் மாவட்ட கல்வி அதிகாரிகள்தான் கவனிக்கிறார்கள். எனவே, பள்ளிக்கல்வித்துறையில் டி.இ.ஓ. பதவி, முக்கிய பதவியாக கருதப்படுகிறது.  தமிழ்நாட்டில் மொத்தம் 69 கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ஒரு டி.இ.ஓ. பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. டி.இ.ஓ. பதவியை பொறுத்தமட்டில், 25 சதவீத காலி இடங்கள் நேரடி போட்டித்தேர்வு மூலமாகவும், எஞ்சிய 75 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. பதவி உயர்வில், அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 40 சதவ
தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் 14 ஆண்டுகள் தளர்த்திஅரசு உத்தரவு நெல்லை : தமிழ் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியலை 1998ம் ஆண்டுக்கு முன்பாக அறிவித்து உத்தரவிட்ட நிலையில், 14 ஆண்டுகள் தளர்த்தி 2012 வரை தயாரிக்க அரசு புதிய உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், சிறுபான்மை பாட மொழி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு 1.1.2013 அடிப்படையில் தகுதி வாய்ந்தோர் பட்டியலை தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ் ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு 31.12.1998 வரையும், இதர பாட பட்டதாரிஆசிரியர் பதவி உயர்வுக்கு 31.12.2012வரையும் விவரங்களை அனுப்பி வைக்க அரசுஏற்கெனவே உத்தரவிட்டது. பிற பாடங்களுக¢கான பதவி உயர்வு பட்டியல் மட்டும் 2012 வரை அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் ஆசிரியர்களுக்கு மட்டும் 1998 வரை என்பதால் பிஏ (தமிழ்), பிலிட் பட்டம் பெற்று தமிழ் ஆசிரியர் பதவி உயர்வுக்கு தயாராக இருந்த இடைநிலை ஆசிரியர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் தமிழ் ஆசிரியர் பதவி உயர்வுக்கும் பிற ஆசிரியர்களை போல் 31.12.